Thursday , January 23 2020
Home / அரசியல் / அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்

பாகம் – ஒன்று

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழீழம் மிகவும் செழிப்பு மிக்க பிரதேசம் என்பது அனைவரும் அறிந்ததே. கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப் படுகின்றன. ஹஎன்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்’ என்ற வாசகம் தென்தமிழீழத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது.

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசு களை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால்  இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங் கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறை யில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமை யாக்கியுள்ளனர் என்ற கசப்பான வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. தமிழர்களில் பலர் இதுபற்றி பேசமறுக்கிறார்கள். இவ்வாறு பேசுவது இனக்குரோதத்தை வளர்க்கும் என சிலர் அச்சப்படுகிறார்கள். இருப்பினும் இது விடயத்தில் உள்ள வரலாற்று உண்மைகளே பேசியே ஆகவேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக் கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடு பட்டனர். சிலர் நிலச்சுவாந்திரர்களான தமிழர்க ளிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலி களாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர்.  ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்த வர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற் படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங் களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது  தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார் கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வர லாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற் றைத் திரித்துக் கூறி கிழக்கை மட்டுமல்ல வடக் கையும் தமது தாயகப் பகுதியாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.

முஸ்லிம் இனத்தவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் இருந்துவிட்டார்கள் அதுவும் சில பகுதிகளில் செறிவாகவும் சில பகுதிகளில் பரந்துபட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களாக இருப்பதால் குறிப் பிட்ட பகுதியில் அவர்கள்வாழ்ந்துவிட்டுப் போகட் டும் என்ற நிலையே தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக எண் பதுக்கு பின்னரான காலத்தில் அவர்கள் வடக்குக் கிழக்கு தமது தாயகம் என்று கூறும் அளவிற்கும் வந்துவிட்டதுடன் அத்துமீறிய குடி யேற்றங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் மூலமாக தமிழர்களின் காணிகளை குறைந்த விலையில் சுரண்டியெடுத்தல் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழர்களின் பூர்வீக நிலங் களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர்.  இதனால் தமிழர்கள் படிப்படியாக தமது நிலங் களை முஸ்லிம்களிடம் இழந்தனர்.

முஸ்லிம்களின் இந்த வரலாறு தெரியாமல் தற்போதைய காலகட்டத்தில் சில ஊடகங்களும் சில அறிவாளர்களும் தமிழர்களால் முஸ் லிம்கள் வடக்குக் கிழக்கில் விரட்டியடிக்கப்பட் டனர் என கூறிவருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற் படுத்தி உள்ளது மாத்திரமல்ல மனக்கிலேசத் தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை.

கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்கள் நடைபெற்றதோ அதேபோன்று தாமும் சளைத்தவர்களல்ல என்ற வகையில் முஸ்லிம் குடியேற்றங்களும் தமிழர் நிலப்பறிப் புகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிப் பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி எழுதியுள்ள ஹஅழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்’ என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினராகவிருந்த திரு. சேனாதிராஜா ஜெயா னந்தமூர்த்தி அவர்கள் இதை எழுதியுள்ளார்.

திரு ஜெயானந்தமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராகவும் இருந்தார். அந்த வேளையில் அவர் பாதிக்கப்பட்ட இடங் களுக்கு நேரில் சென்றும் பாதிக்கப்பட்டவர் களை நேரடியாகச் சந்தித்தும் தொடர் கட்டுரை யாக இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு எழுதியிருந்தார். அது பின்னர் நூலுருவில் வெளியிடப்பட்டது. இந்த நூலே கிழக்கில் முஸ்லிம்களின் அத்து மீறிய குடியேற்றங்களுக்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த நூலில் எழுதப்படாத இன்னும் சில தமிழ் கிராமங்கள் பற்றியும் திருகோண மலையில் தமிழ் கிராமங்கள் எவ்வாறு அழிக்கப் பட்டன என்பன பற்றியும் அவரின் மற்றொரு புத்தகத்தில் வெளிவரவுள்ளதாக நூலாசிரிய ரான திரு. ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் இக்கட்டுரையில் திருகோணமலையில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் தொட்டுச் செல்லப்படுகின்றது.

சரி இனி கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடந்த அத்து மீறிய குடியேற்றங்கள் பற்றி விரிவாகப்பார்ப்போம். முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த குடியேற்றங்கள் தமிழ் மக்களின் வெறி யேற்றம் என்பன பற்றி ஆராய்வோம்.

மட்டக்களப்பு மாவட்டம் வடக்காக வெருகல் வாவி தொடக்கம் தெற்காக நீலாவணை வரை  நீண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பரந்து கிடக்கின்றது. மேற்கு எல்லையாக பொலனறுவை மற்றும் பதுளை மாவட் டங்களின் சிங்கள கிராமங்கள் அமைந்துள் ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று) அமைந்துள்ள அழகிய தமிழ் கிராமம் மிறா வேடை தமிழ் கிராமம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு சுமார் 460 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. பாடசாலை, பிள்ளையார். காளி அம்மன், முருகன் ஆலயங்களும் இருந்தன.  இந்த தமிழ் கிராமத்திற்கு அருகில் மீரா வோடை (முஸ்லிம்) மற்றும் மாஞ்சோலை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இருந்தன.

இந்த முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்தவர் களுக்கு அருகில் இருந்த மீராவேடை தமிழ்  கிராமத்தின் மீது ஒரு கண் இருந்து கொண்டே வந்தது. அங்கிருந்து தமிழ் மக்களை விரட்டி யடித்துவிட்டு அதை அபகரிக்க வேண்டுமென்பதே இதற்குக் காரணம். அதனால் அக்கிராம மக்கள் மீது முஸ்லிம்கள் தொடர்ந்து முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தனர். இந்த முறுகல் நிலை மெல்ல மெல்ல அதிகரித்து முதல் தடவையாக 1985 இல் காணித்தகராறு ஒன்று காரணமாக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தினார்கள். இது பின்னர் இனக் கலவரமாக மாறியது. முஸ்லிம்களுக்கு ஆதர வாக இராணுவத்தினர் பலமாக இருந்தனர் இராணுவத்தினரின் உதவியுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டனகொள்ளையடிக்கப் பட்டன. இதனால் அக்கிராம மக்கள் அச்சம்  காரணமாக முதல் தடவையாக கிராமத்தை விட்டு வெளியேறினர்.

சில மாதங்களின் பின்னர் சுமுகநிலை வந்ததை அடுத்து தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும் அச்சநிலையும் இரு இனங்களுக் கிடையே முறுகல் நிலையும் இருந்து கொண்டே  வந்தன. சில வருடங்கள் இந்த நிலை இருந் தாலும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம் பமான 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை படையின் ஒரு பிரிவான ஊர்காவல் படையிலும் பொலி சிலும் இணைந்தனர்.

இதன் பின்னர் நிலமை மிகவும் மோசமானது. இரண்டாவது தடவையாக முஸ்லிம்களும் ஊர் காவல் படையினரும் இணைந்து மேற்படி தமிழ் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் வன்முறையை முஸ்லிம் கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை இக்கிராமத்து தமிழர்கள் மாத்திரமின்றி மாவட்டத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த அனேக மான தமிழ் கிராமங்களில் நடந்தேறின.

இவ்வன்முறையினால் மீராவோடை தமிழ் கிராமம் ஏறக்குறைய முற்றாக அழிக்கப் பட்டது. மக்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்து அயலில் இருந்த தமிழ் கிராமங்களான கிண்ணையடி, சுங்கான்கேணி, வாழைச் சேனை, வினாயகபுரம் ஆகிய கிராமங்களுக் குச் சென்றனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் திட்டமிட்டவாறு பல நூறு ஏக்கர் காணி களைச் சுவீகரித்துக் கொண்டனர். இதனால் அக்கிராமத்தின் அரைவாசிக்பகுதிக்கு மேல் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்தும் பெரும் பகுதியை அபகரித்துக் கொண்டனர். பாடசாலை கோயில்கள் பொதுக் கட்டிடங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன.

மற்றொரு கிராமமான தியாவெட்டுவான் பற்றிய அடுத்த பகுதியில் பார்ப்போம்.

– தொடரும்

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – ஒன்று

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – இரண்டு

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – மூன்று

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – நான்கு

– இராஜ் ஆனந்தன்

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

corbyn

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …

Leave a Reply