Thursday , January 23 2020
Home / Blogs / அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்த்து விடுவது என்கிற முடிவை எடுத்திருந்தனர்.

மோதல் தொடங்கி பதினைந்து நாட்களை கடந்து நீட்டுகொண்டு போனது. ஒரு 24 நாலு மணித்தியத்திலேயோ மிஞ்சி மிஞ்சிப் போனால் 48 மணித்தியாலத்தில் புலிகள் அனைவரையும் தலைவர் பிரபாகரன் உட்பட கைது செய்து ஆயுதங்களை பறித்துவிடலாமென நினைத்திருந்த இந்திய அரசியல் தலைமைகளிற்கும் அதிகாரிகளிற்கும் ஏமாற்றமாகி போனது மட்டுமல்ல அவர்களிற்கு புலிகளினுடனான யுத்தம் கௌரவப் பிரச்சனையாக மாறிவிட்டிருந்தது.அதே நேரம் இலங்கையிலிருந்த இந்தியப்படைகளின் கட்டையதிகாரி திபீந்தர் சிங்கிற்கு புலிகளை அழக்கும் நோக்கம் இருக்கவில்லை முடிந்தளவு அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவே விரும்பியிருந்தார். இதனால் இவரிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டிக்சித்திற்கும் முரண்பாடுகளும் தோன்றியிருந்தது. காரணம் டிக்சித்திற்கு புலிகளை விரைவாக அழித்து முடித்துவிடவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

சமாதான காலத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளுடன் நல்லதொரு நட்போடு பழகியதாலும் தென்னிந்தி பட்டாலியன்கள் குறிப்பாக மெட்ராஸ் பட்டாலியன்களும் (தமிழ்நாட்டு இராணுவத்தினர்) முன்னணி நகர்வு படைகளில் இருப்பதால் தான் புலிகளை அழிப்தற்கு தாமதமாகின்றது என நினைத்த இந்திய உழவுத்துறையும் அரசியல் தலைமையும் இன்னொரு கட்டளை அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி மாற்றங்களை கொண்டுவர எண்ணினர் அதன்படி சீங்கியர்களின் காலிஸ்தான் போராட்டத்தில் இறுதியாக பொற்கோயில் தாக்குதலில் கட்டளையிடும் அதிகாரியாக திறைமையாக பணியாற்றிய தெய்வேந்திர சர்மாவை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இவர் திபீங்தர் சிங்கின் கட்டளைகளிற்கு கீழ்படியாமல் தன்னிச்சையாகவே நடவடிக்கைகளை எடுக்கும் சுதந்திரம் அவரிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாக பலாலியில் வந்திறங்கிய தெய்வேந்திர சம்மா உடனடியாகவே முன்னணி படையணிகளில் மாற்றங்களை கொண்டுவந்தார். புலிகளுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளை மாற்றியவர். தென்னிந்திய பட்டாலியன்களை பின்நகர்த்திவிட்டு (முக்கியமாக தமிழ்நாட்டு இராணுவத்தினர்) வட இந்திய பட்டாலியன்களான சீக்கிய. மராட்டிய.குர்கா படையணிகளை முன்னணிக்கு நகர்த்தினார். அத்தோடு மட்டுமல்லாது அவர். காலாட் படையணிகளிற்கு இட்ட கட்டளை என்னென்ன பொருள்கள் அசைகின்றதோ அத்தனையையும் சுட்டுத்தள்ளியவாறு முன்னேறுங்கள் என்றதுதான்.

அதே நேரம் புலிகளின் மோசமான கண்ணி வெடித் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னேறும் இராணுவத்தினரிற்கு கனரக ராங்கி படையணியினர் பாதைகளின் தடைகளை அகற்றி கொடுக்குமாறும் எந்தத் தடைகள் வந்தாலும் தாங்கிளால் தகர்த்தபடி முன்னேறும்படி கட்டளையிட்டிருந்தார். சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணும் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளை கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பெருள்களான நாய் பூனை ஆடு மாடு.மனிதர்களையெல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள. அசையாது நின்ற கட்டிடங்கள் மரம் செடியெல்லாவற்றையும் ராங்கிகள் தகர்த்தபடி முன்னேறினர். யாழ்குடாவின் பிரதான சாலைகளை சில நாட்களிற்குள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த இந்திய இராணுவத்தினரின் அடுத்த இலக்கு சுதுமலையம்மன் கோயில் ஆகும்.

அதற்கு காரணம் இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பொழுது தலைவர் பிரபாகரன் முதன் முதலாக மக்கள் முன் தோன்றி உரையாற்றியது சுதுமலையம்மன் கோயிலில்தான். அதே நேரம்.இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளை சந்திக்க வந்திறங்கியது இந்தியாவிலிருந்து தலைவர் பிரபாகரன் வந்திறங்கியது எல்லாமே சுதுமலையம்மன் கோயில் சுற்றாடலில்தான். அது மட்டுமல்ல அதே சுற்றாடலில் புலிகளின் இரண்டு பெரிய ஆயுத தொழிற்சாலைகளும் அப்பையா அண்ணை தலைமையில் இயங்கியது. இந்த விடையங்கள் இந்திய உளவுத்துறையினரிற்கு தெரியும்.

எனவேதான் காலிஸ்தான் அமைப்பினர் பொற்கோயிலை தலைமையிடமாக வைத்து அங்கு பெருமளவு ஆயுதங்களையும் குவித்து இந்திய இராணுவத்துடன் போரிட்டனரோ அதே போலவே புலிகளின் முக்கிய தலைவர்கள் சுதுமலையம்மன் கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாமென இந்திய இராணுவம் நினைத்தது. சர்மா தலைமையில் ஏழு முனைகளில் இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை நோக்கி நகர்ந்தது. 21 ந் திகதி நற்றிரவு சுதுமலை மானிப்பாய் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த இராணுவத்தினர் அனைவரது வீடுகளிலும் புகுந்து அங்கிருந்தவர்களை ஒரு அறைகளில் போட்டு பூட்டிவிட்டு அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அம்மன் கோயிலிற்குள் தாக்குதலை நடத்தி புகுந்து கொள்ள காலை புலரும்வரை காத்திருந்தனர்.
அதிகாலையானதும் மெல்ல நகர்ந்த டாங்கி படையணியினர் அம்மன் கோயிலை சுற்றி வழைத்து நிறுத்தப்பட்டனர். காலை 5.30 மணியளவில் டாங்கிகளின் குண்டுகள் அம்மன் கோயிலை நோக்கி சீறிப்பாய்ந்தது. கோயிலின் வடக்கு கோபுரம். மணிக்கூண்டு கோபுரம்.தெற்கு மதில் சுவர். எல்லாம் சிதறியது. கோயிலின் பின்னாலிருந்த நூற்றாண்டு கடந்து பரந்து விரிந்திருந்த ஆலமரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தது. அதுவரை காலமும் சனி விதரத்திற்கு போடும் சோத்தையு ம் பலிபீடத்து புக்கையையும் கொத்தி சாப்பிட்டு விட் சந்தோசமாய் அந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்ந்த காகங்கள் பலதும் செத்துவிழ மீதி காகங்களோ காலங்காத்தாலை எந்தச் சனியன்கள் எங்கடை கூட்டை பிரிச்சது எண்டு நினைத்தபடி கா கா எண்டு திட்டியபடியே பறந்து போனதே தவிர கோயிலிற்குள் இருந்து எந்த பதில் தாக்குதலும் வரவில்லை.

சில நிமிட இடைவெளி விட்டு மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியவர்கள் ஆச்சரியத்தோடு கோயிலின் உள்ளே நுளைந்து தேடினார்கள் யாரும் அங்கிருக்கவில்லை. சர்மாவுக்கு சரியான கோபம்.யாரடா இந்த கோயிலின்ரை பூசாரி தேடிப்பிடிச்சு இழுத்து வாங்கோ என்று கட்டளையிட்டார். அந்தக் கோயில் ஜயர் பக்கத்திலேயே தான் குடியிருந்தார். அவர் சின்ன வயதிலை போலியோ நோயாலை தாக்கப்பட்டு கால்கள் சூம்பிப் போய் சரியாக நடக்க முடியாதவர். அவரை தேடிப்பிடிந்து இரண்டு இராணுவத்தினர் தூக்கிக் கொண்டுவந்து சர்மாக்கு முன்னாலை போட்டார்கள். சர்மா ஜயரிட்டை எங்கை எல் டி டி ..எங்கை ஆயுதம்.. எண்டு ஆங்கிலத்திலை கத்த ஜயருக்கு ஒண்டும் விழங்கேல்லை உடைனை ஒரு தமிழ் ஆமி ஓடிவந்து எல் டி டி எங்கை ஆயுதம் எங்கை ஆயுதம் எண்டு கேட்டார். ஜயரும் எல் டி டியை. நீங்க ளும் அவைய அவையளும் இந்த கோயிலுக்கு முன்னாலை சந்திச்சு கதைக்கேக்குள்ளைதான் கடைசியாய் கண்டனான் என்றவர்
ஆயுதம் அங்கையிருக்கு எண்டு அம்மனின்ரை கையிலை இருந்த வாளையும் முருகனின்ரை கையிலை இருந்த வேலையும் காட்டினார். அதோடை அவர் நிப்பாட்டியிருக்கலாம் ஆனால் பக்கத்திலை பிள்ளையார் இருக்கிறார் அவரிட்டை ஆயுதம் இல்லை கையிலை மோதகம்தான் இருக்கு எண்டதும் நக்கலா….என்றபடி ஜயருக்கு நாலைஞ்சு அடி போட்டு கலைச்சு விட்டிட்டாங்கள். இயக்கத்தையும் ஆயுதத்தையும் காட்டிக் குடுக்க நான் என்ன விசரனோ எண்டு புறு புறுத்தபடி ஜயர் போயிட்டார். இந்திய இராணுவமும் கோயில் வீதியிலை பலஇடத்திலை கிடங்கு தோண்டிப்பாத்திட்டு போய் விட்டார்கள்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

சிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக்கான சவாலா?

நிர்மானுசன் பாலசுந்தரம் (தினக்குரல் பத்திரிகைகாக நிர்மானுசன் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தினை அதன் முக்கியத்தவம் கருதி இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். நன்றி …

Leave a Reply