Thursday , January 23 2020
Home / Blogs / அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்-02

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்-02

ஒரு பேப்பருக்காக சாத்திரி

கடந்த ஒரு பேப்பரில் இந்தப் பதிவினை ஒரு ஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன்.

இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத காரணத்தால் ஆத்திரமடைந்து போயிருந்தனர். ஆனால் புலிகள் நவாலி. சண்டிலிப்பாய் அளவெட்டி மூளாய் அராலி மற்றும் வடலியடைப்பு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருந்தார்கள். அது இந்திய இராணுவத்திற்கு பெரும் இழப்பையும் கொடுத்தது. கெரில்லாக்களிற்கு பொதுவாக காடுகளும் மலைகளுமே பதுங்கும் பாதுகாப்பரணாக விளங்குவது வழைமை. ஆனால் இவையிரண்டுமே இல்லாத யாழ்ப்பாணக்குடாநாட்டில் புலிகளிற்கு பாதுகாப்பாக விழங்கியது யாழ்ப்பாணத்தின் ஒழுங்கையமைப்புக்கள்தான். இந்திய இராணுவம் தங்கள் படை நடவடிக்கைக்கு ஏதுவாக இலங்கையரசின் சுற்றுலாத் துறையினரால் 80 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தைதே வைத்துக்கொண்டு தாக்குதல்களை வழிநடத்தினார்கள். அதில் யாழ் குடாவின் ஒழுங்கைகள் எதுவுமே வரையப்பட்டிருக்கவில்லை.

புலிகள் ஒழுங்கைகளால் வந்து தாக்கியது அவர்களிற்கு பெரும் தலையிடியை கொடுத்தது. மருதனாமடம் சந்தியிலிருந்து முன்னேறி உடுவில் அரிசி ஆலையில் முகாம் அமைத்திருந்த சர்மா புலிகளின் நடமாட்டத்தை அறிய ஜேர் பரமேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி ஒருவரின் கீழ் ஒரு பட்டாலியன் இராணுவத்தை தயார்ப்படுத்தி ஊர்பொதுமக்களிடம் விபரம் கேட்டறிந்து புலிகளை தேடித்தாக்கியழிக்கும்படி கட்டளையிட்டிருந்தார். அதன்படி பரமேஸ்வரனும் சண்டிலிப்பாய் பகுதியில் பெருமளவில் நின்றிருந்த புலிகளை தாக்குவதற்காக உடுவில் சண்டிலிப்பாய் டச்சுவீதி ஊடாக நகர்வை மேற்கொண்டார். அவரது வரைபத்தில் டச்சுவீதியில் மானிப்பாயிலிருந்து குறுக்காக கந்தரோடை செல்லும் இரண்டு சிறிய வீதிகள் இல்லை அவரது படைகள் சண்டிலிப்பாயை அண்மித்ததும் கந்தரோடையிலிருந்தும் மானிப்பாய் கட்டுடைப் பகுதியிலிருந்தும் புலிகள் இடையே புகுந்து தாக்கியதில் பரமேஸவரன் உட்பட நாற்பதிற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் இறந்து போனார்கள்.புலிகளின் முதலாவது ஊடறுப்பு தாக்குலாகவும்இதை எடுக்கலாம்.

இதனால் கோபமடைந்த சர்மா பொதுமக்களை கேடயங்களாக்கியபடி முன்னேற்றத்தை தொடர்ந்தார். அதன்படி முன்னேறி முக்கிய இடங்களை அடைந்ததும் பிடித்து வந்தவர்களை ஓடச்சொல்லிவிட்டு பின்னாலிருந்து சுட்டுவிடுவார்கள். பெரும்பாலனவர்கள் இறந்து போக சிலர் மட்டும் தப்பியோடிய சம்பவங்கள் ஏராளம்.அது மட்டுமில்லாமல் புலிகளின் இலக்கு என்றோ அல்லது புலிகள் தாக்குதல்கள் நடத்தாமலேயே பல இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்தார்கள் அதில் சில.

  • 21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.
  • 10.10.1987 பிரம்படி (கொக்குவில்)படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.
  • 10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.
  • 26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.
  • 27.10.87 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.
  • 19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள்.சுமார் 65 பொதுமக்கள்
  • மற்றும் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான முஸ்லீம்கள்
  • இப்படி பல படுகொலைகளை நடாத்தி முடித்திருந்தனர்.

மேலே நான் குறிப்பிட்டவையனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தபட்டவைகளே .
இவை இப்படி நடந்துகொண்டிருக்கமற்றப்பபக்கம் எங்கடை சனத்தின்ரை கூத்துக்கள் தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டத்தால் கடைகள் எதுவும் திறக்காமல் பொதுமக்களிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது புலிகள் முதலில் சங்கக்கடைகளை உடைத்து உணவை எடுக்கவிட்டிருந்தனர். மானிப்பாய் சங்கக் கடையையு உடைத்து சாமாகளை அள்ளிக்ககொண்டு போனவர்வகள் அங்கை அடிக்கி வைச்சிருந்த வெறும் சாக்குகளையும் அள்ளிக்கொண்டு போனார்கள். கடைசியாய் வந்த இருவர் பொருள் ஏதும் இல்லாததால் ஒருத்தர் தராசை கழட்ட மற்றவன் படிக்கல்லை தூக்கிக் கொண்டுஓடினான். படிக்கல்லை தந்திட்டுபோடா எண்டு தராசை கழட்டினவர் கலைக்க படிக்கல்லு பாரம் தாங்காமல் அவன் போட்டிட்டு ஓடிப்போயிட்டான். தாராசோடை படிக்கல்லுகளும் கிடைச்ச சந்தோசத்திலை அவர் நடந்து போனார்.

அதே மாதிரி மானிப்பாயிலை பிரபல றோஸ் பிறாண்ட் ரொபி புளுட்டோ கொம்பனி இருந்தது அங்கை தார் பரல்கள் மாதிரி பெரிய பரல்களிலை சீனிப்பாணி அடுக்கி வைச்சிருந்தவங்கள் சனங்கள் பரல்களை உருட்டிக்கொண்டு போனார்கள். கட்டாயம் அவைக்கு சீனி வருத்தம் வந்திருக்கும்.. மிச்ச பரல்களை இந்தியனாமி காவலரணிலை பாதுகாப்பிற்கு அடுக்கி வைச்சிருந்தாங்கள். அதே மாதிரி சண்டிலிப்பாயிலை வடிசாராய நிலையம் ஒண்டு இருந்தது பனங்கள்ளை காச்சி வடிச்சு சாராயம் தயாரிப்பினம். பாதி பதப்படுத்தப் பட்ட கள்ளை தண்ணீர் ராங்குகள் மாதிரி உயரத்திலை கட்டியிருந்த பல ராங்குகளிலை சேமிச்சு வைச்சிருந்தவை.

இந்தியனாமி அடிச்ச செல் ஒண்டு அங்கையிருந்த ராங்கிலை பட்டு அது உடைஞ்சு புளிச்ச கள்ளு ஒழுகிக் கொண்டிருந்தது அதை பலபேர் ஓடிப்போய் வாளி குடம் எண்டு அம்பிட்டதிலை ஏந்திக் கொண்டு ஓட எதுவுமே கிடைக்காதவை ராங்கிற்றக கீழை போய் அண்ணாந்து ஆவெண்டு வாயை திறந்து குடிச்சுக் கொண்டிருந்திச்சினம். அப்பிடி குடிச்ச சிலர் கோமாவாகி அங்கையே விழுந்து கிடக்க பிறகு அங்கை வந்த இந்தியனாமி போட்டுத் தள்ளிட்டு போயிட்டான்.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

சிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக்கான சவாலா?

நிர்மானுசன் பாலசுந்தரம் (தினக்குரல் பத்திரிகைகாக நிர்மானுசன் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தினை அதன் முக்கியத்தவம் கருதி இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். நன்றி …

Leave a Reply