Home / Blogs / நெஞ்சு பொறுக்குதில்லையே / எங்கே எமது தலைவர்கள்?

எங்கே எமது தலைவர்கள்?

சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்த்து. அதை அனுப்பியவருடய விபரங்கைளத் தவிர்த்துவிட்டு அவரது மின்னஞ்சலைக் கீழே தந்திருக்கிறேன். அவருடய மனவேதனை எனக்குப் புரிகிறது. அவரது கேள்வி நியாயமானதாகவே எனக்குப் படுகிறது. பதவிக்காக றோட்டில் இறங்கிப் போராடும் எமது தலைவர்கள், உண்மையான, பிரயோசனமான போராட்டங்களிலிருந்து ஒதுங்கி விடுகிறார்களே! அவருடைய கடிதத்தை நீங்களே வாசித்துப் பாருங்கள். இவர்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.!

“அன்புள்ள தமிழ் உறவுகளே,

புகழ் பெற்ற பல சர்வதேச நிபுணர்கள் அங்கம் வகிக்கும் நிறுவனம் ஒன்று சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு, பிரித்தானியாவை கோரும் மனுவுக்கு , ஆதரவளிக்க முன்வந்துள்ளது . விபரம் அறிய இங்கே அழுத்தவும் . http://www.srilankacampaign.org/advisorycouncilo.Htm மேலும் அவர்களது இணையத்தில் வெளியான செய்தியை படிக்க

 • இந்த விடயம் நண்பர் யார் பகைவர் யார் என்பதைத் தீர்மானிக்க வழி வகுக்கப் போகின்றது. .சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு பூரண ஆதரவு வழங்காத எவரும் தமிழர்களின் நலன் விரும்பிகள் என கருத முடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் .
 • 100000 இற்கும் அதிகமான பிரித்தானிய மக்கள் ஒரு கோரிக்கையைமுன்வைதால் அதனை அமுல் படுத்துவது தொடர்ப்பாக பாராளுமன்றத்தில் விவாதிப்பது என பிரித்தானிய அரசிடம் ஒரு கொள்கை உண்டு . http://epetitions.direct.gov.uk/how-it-works
 • அண்மையில் இலண்டன் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் சமூக நல கொடுப்பனவுகள் , சமூக நல வசதிகள் நிறுத்தப்படவேண்டும் என்ற மனுவுக்கு இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் ஆதரவு கொடுத்தனர் . http://epetitions.direct.gov.uk/petitions
 • அந்த கோரிக்கையையை , சமூக கொள்கை வகுப்பாளர்கள் , உத்தியோக பற்றற்ற முறையில் அமுல் படுத்தி வருகின்றார்கள் . விரைவில் பாராளுமன்ற விவாதத்தில் இது சட்டமாக வர உள்ளது .
 • சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது . http://epetitions.direct.gov.uk/petitions/14586
 • இதனை GTF எனப்படும் குளோபல் தமிழ் போரம் முன்னெடுக்கின்றது .இதுவரை 600 இற்கு குறைவான மக்களே ஆதரவு கொடுத்துள்ளார்கள் .ஏனைய நிறுவனங்கள் ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன .இதற்கு என்ன காரணம் ஊடுருவலா ? அறியாமையா ? எனத் தெரியவில்லை.
 • எனவே இந்த மனுவில் http://epetitions.direct.gov.uk/petitions/14586 கையெழுத்து இடுவதற்கு உங்கள் ஆதரவைக் கோருகின்றேன் மேலும் உங்களைப் பற்றிய விபரம் அத்தனையும் பிரித்தானிய அரசிடம் உண்டு .நீங்கள் பிரித்தானிய அரசுக்கு உங்களைபற்றி கொடுத்த தகவல்களை விட .நீங்கள் யாருடன் உறவு என்ன செய்கின்றீர்கள் என்பது அறியும் பலம் கொண்டது பிரித்தானிய அரசு .எனவே பெயரையும் கையெழுத்தையும் போடாமல் ஒழிப்பது படு முட்டாள் …..
 • இந்த விடயம் நண்பர் யார் பகைவர் யார் என்பதைத் தீர்மன்னிக்க வழி வகுக்கப் போகின்றது .சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு பூரண ஆதரவு வழங்காத எவரும் தமிழர்களின் நலன் விரும்பிகள் என கருத முடியாது.நாடுகடந்த அரசு முதல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை 75000 இற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தேர்தலை நடத்தின . ஆனால் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு 1000 வாக்குகள் கூட கிடைக்கவில்லை . சிரிஈலங்கா வுக்கு எதிரான செயல்பாடுகள் வீர வசனங்களாகவே இருக்கின்றன செயல் வடிவம் எதுவும் இல்லை. இதற்கு அறியாமை காரணமா? திட்டமிட்ட ஊடுருவல் காரணமா ? குழுமோதல் காரணமா ? சாதி ஊர் விடயங்கள் காரணமா ?
 • சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய தமிழர்கள் ஆதரவு இல்லையா ? சிறிலாங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியாவில் இது வரை 500 வரையான தமிழர்களே ஆதரவு தெரிவித்து ஒப்பமிட்டுள்ளனர் .See the petition here http://epetitions.direct.gov.uk/petitions/14586

ஊடகங்கள் பல மவுனம், துண்டு பிரசுரம் எதுவும் இல்லை , மக்கள் பிரதிநிதி வீடுவீடாக செல்வதைக் காணோம் ,
ஆனால்,நாடுகடந்த அரசுக்கு , பிரித்தானியா தேர்தலில் கிடைத்த வாக்குகள் 76 ஆயிரத்துக்கும் அதிகம்.
நாடுகடந்த அரசின் இரு கோஷ்டிகளும் தேர்தலில் இறங்கி வேலை செய்தது போல் ஏன் இந்த விடயத்தில் இறங்கி வேலை செய்யவில்லை ? முன்னைய வேகத்தை விட அதிகமாக அல்லவா செயலபட்டிருக்க வேண்டும்?. வட்டுக் கோட்டை தீர்மானத்திற்கு கிடைத்த வாக்குகள் 70 ஆயிரம் வரை, வட்டுக் கோட்டை தீர்மானம் தொடர்பாக செயல் பட்டது போல் ஏன் இதில் மக்களவை ஆர்வம் காட்டவில்லை ? அதற்கு மேலாக அல்லவா செயல்பட்டிருக்க வேண்டும் ? http://www.guardian.co.uk/world/2010/feb/01/british-tamil-state-sri-lanka

வட்டுக் கோட்டை தீர்மானம் தொடர்பாகவும் , நாடு கடந்த அரசு தேர்தல் தொடர்பாகவும் பிரித்தானியா வாழ் தமிழர்கள் வேறு வேறு அணிகளாக பிரிந்து செயல் பட்டது உலகறிந்த உண்மை. இரண்டையும் சேர்த்தால் கிடைத்த மொத்த வாக்கு ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகம்; (150000 ) , ஜனனி ஜனநாயகத்துக்கு கிடைத்த வாக்குகள் 50000 இற்கு சற்று அதிகம் ,வேலை செய்தோர் பல ஆயிரம் , துண்டு பிரசுரம் , இணைய பிரச்சாரம் வேறு , ஜனனியும் அவருக்கு பின்னால் நின்ற சக்திகளும் ஏன் இந்த விடயத்தில் முன்னின்று மக்கள் மத்தியில் சென்று செயல்படவில்லை ? முன்னைய விட தீவிரமாக அல்லவா செயல்படவேண்டும் .

ஆனால் , சிறீலங்காவுக்கு எதிராக விசாரணைக்கு ஆதரவாக ஒப்பமிட்டவர் தொகை ஒரு 500 மட்டுமே !!!!!

என்ன நடந்தது என்றே புரியவில்லை , தமிழர்களை அணி பிரித்த எல்லா சக்திகளுமே ,
சிறிலங்காவுக்கு எதிரான ஆக்க பூர்வமான விசாரணைக்கு முன்னின்று உழைக்க தவறுகின்றன .
ஆனால் படம் காட்டுவதில் முன் நிற்கின்றன.

தமிழர்களின் அரசியல் தலைமையை தமது கையில் வைத்திருக்க ஓடித் திரியும் இந்த சக்திகள் ஏன் குளோபல் தமிழ் போரம் (GTF) இவர்களது உள்நோக்கம் தான் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது ???
இங்கே நாம் சில விடயங்களை புரிய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது …..

முள்ளிவாய்க்காலுக்கு காரணமான சக்திகள் இவர்களை கையள்கின்றதோ என்ற சந்தேகம் நியாயமாகவே எழுகின்றது .
பிரித்தானியாவில் வாழும் மூன்று லட்சத்துக்கு அதிகமான தமிழர்களில் ஆயிரத்துக்கு குறைவான தமிழர்கள் மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச விசாரணையை கோருகின்றனர் என்ற அபிப்பிராயத்தை இலங்கை அரசு முன்னெடுக்க ஏதுவாகிவிடும்.

ஆக மொத்தம் ஏதாவதொரு அணி விசுவாசமாக ஈடுபட்டு சனல் 4 கட்ட்சி ஆதாரங்களுடன் பிரித்தானியா வாழ் வேற்று இன மக்களையும் அணுகினால் இரண்டு இலட்சம் அல்ல அதற்கு மேலும் பெற்றுக் கொள்ள முடியும் .
எனவே பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே , மற்றும் வேற்று நாட்டுகளில் வாழும் தமிழ் மக்களே , இந்த தலைவர்களை ‘ தட்டி எழுப்புங்கள்’ .

குறிப்பு ;-

 1. TGTE வட கிழக்கு இலண்டன் கிடைத்த வாக்குகள் 24705
 2. TGTE மொத்தம் 76000 வாக்குகள்
 3. நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குகளையும் சேர்த்தல் ஒரு இலட்சத்துக்கும் அதிகம்

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

maaveerar_2015-102-1024x683

மாவீரர் நினைவெழுச்சிநாளும், தமிழ்மக்களும்

மாவீரர் நாள் பற்றியும், அதை நடாத்துவது பற்றியும் சில சர்ச்சைகள் உள்ளன. அதுபற்றிபார்க்க முன்பு, வழமைபோல இந்த முறையும்,வேலை, மற்றும் …

Leave a Reply