Home / மாசிலாமணி

மாசிலாமணி

போராளிகள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள்

queimada

போராளிகள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் 1969ல் மார்லின் பிராண்டோ நடித்து வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளான படக்கதையின் அடிப்படை கருத்துக்களுடன் மாவீரர்களுக்கான அகவணக்கத்தைச் செலுத்த விரும்புகின்றேன். 1840க்கும் 50க்கும் இடைப்பட்ட காலம். இடம்கரிபியனில் உள்ள ஒரு கற்பனைத்தீவு. போர்த்துக்கேயக் காலணியான இத்தீவின் கறுப்பினஅடிமைகள் அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பிரித்தானியா அங்கு `வாக்கர்’ என்னும் கூலிப்படைப்பிரதிநிதியை அனுப்புகிறது. அவர் கிளர்ச்சியாளருக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கி, …

Read More »

மெசப்பொட்டோமியா, சிந்துவெளி நாகரிகங்கள்

mohanchadaro_harappa_sinduveli

நாகரிகம் என்னும் சொல்லை உச்சரிக்கும்போது இதில் வரும் ரி என்னும் எழுத்து பலருக்கு ரீ யாகப் படுவதால் அவர்கள் எழுதும்போதும் தவறுதலாக நாகரீகம் என்றே எழுதுகிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நாகரிகம் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுப்பதானால் பல கோணங்களிலிருந்து கொடுக்கலாம். வேட்டையாடி நாடோடிகளாக அலைந்த மனித இனம் உணவுக்காக பயிர் செய்யத் தொடங்கி ஒரே இடத்தில் தங்கி குடியிருப்புக்கள் உருவாக்கி வாழத் தொடங்கிய நிலையையே இங்கு …

Read More »

பேசும் ஆற்றல் எப்போ பெற்றோம் ?

monkey

இது எப்போதென்பது எளிதில் பதில் சொல்லும் கேள்வி அல்ல. 1866 ல் மேற்குலக மொழி அறிஞர்கள், பாரிசில் இந்தக் கேள்விக்கு பதில்கண்டு கொள்ள முடியாதென்று கருதி அதுபற்றிய ஆய்வே தேவையற்றது என்று முடிவெடுத்தார்கள். கடந்த நூற்றாண்டில் அறிவியலும் தொழில்நுட்பமும் அடைந்த அதீத வளர்ச்சி காரணமாக இந்தக் கேள்விக்கு பதில் பெறமுடியும் என்ற நம்பிக்கையொளி தென்படுவதால் அந்த கருப்பொருள் பற்றி மீண்டும் பேசுகிறார்கள். ஆனாலும் மனிதர் எப்போதிலிருந்து பேசத்தொடங்கினார்கள் என்பது இன்றும் …

Read More »

மூலகங்களின் இணைவே உலகின் பொருட்கள்

உலகில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் 118 பொருட்கள்தான் மூலப்பொருட்கள். அவை மூலகங்கள் என்றழைக்கப்படும். இந்த மூலகங்களின் கூட்டுத் தான் இத்தனை ஆயிரம் பொருட்களும். எடுத்துக்காட்டிற்கு நீரை எடுப்போமானால், அது முதல் மூலகமான நீர்வளியின் (hydrogen) இருஅணுக்களினதும் உயிர்வளியின் (oxygen) ஒரு அணுவினதும் இணைவால் ஆன ஒரு பொருள்.அப்படியான இரண்டோ அதற்கு மேற்பட்ட மூலகங்களினதோ இணைவேதான் உலகின் இந்த பல்லாயிரம் வகையான பொருட்கள் அனைத்தும். அணு என்பது என்னவென்று …

Read More »

ஆண்டு என்றால் என்ன?

ஒரு கோள் கதிரவனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு தேவைப்படும் காலத்தையே ஒரு ஆண்டு என்பார்கள். பூமி ஒருமுறை சுற்றிவர 365.2425 நாட்கள் தேவைப்படுகிறது. இதையே நாங்கள் பூமியின் ஒரு ஆண்டு என்போம். இந்த வரிசையில் கதிரவனுக்கு அண்மையில் உள்ள கோள்களான புதனுக்கும் சுக்கிரனுக்கும் பூமியின் ஒரு ஆண்டுக்குக் குறைந்த காலமே தேவைப்படுகிறது. பூமியிலும் தொலைவிலுள்ள செவ்வாய்க்கு கிட்டத்தட்ட பூமியின் இரண்டு ஆண்டுகள் (687 நாட்கள்) தேவைப் படுகிறது. இந்த …

Read More »

மலேரியாவின் தாக்கம் குறைகிறது?

This close-up view of a Culex tarsalis mosquito resting on human skin, shows the dark-scaled proboscis which has a broad median white band. 

Other identifying characteristics include white scales around the joints of its tarsi, a line of white scales along the tibia and femur, and two silver dots on its scutum. The epidemiologic importance of C. tarsalis lies in its ability to spread Western Equine Encephalitis (WEE), St. Louis Encephalitis (SLE), and California Encephalitis, and is currently the main vector of West Nile virus in the Western United States.
 
Date:	2005
Content credits:	/ xxxxx
Photo credit:	James Gathany
Image storage:	xxxxxxxxxxxxx
Support File:	CD_120_DH/ 005

URL: 	http://www.cdc.gov/ncidod/dvbid/westnile/
URL Title: 	CDC – Division of Vector-Borne Infectious Diseases – West Nile Virus

அண்மைய புள்ளிவிபரப்படி மலேரியா காவிகளின் பெருக்கம், குறிப்பாக ஆபிரிக்காவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதற்கான காரணத்தைத்தான் ஆய்வாளர்களால் திடப்படுத்திக் கூற முடியாமல் உள்ளது.   முதலில் சுருக்கமாக மலேரியா பற்றிச் சிறிது பார்ப்போம். பிளாஸ்மோடியா என்னும் ஓரணு உயிரி (protozoa) ஒன்றுதான் இந்நோயை உண்டாக்குகின்றது. இரத்தத்தில் நுழையும் இவ் ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துள் ஈரலை அடையும். அங்கு ஒன்று ஒரு ஈரல் உயிரணுவுள் புகுந்தாலே போதும். அது பலவாக மாறி …

Read More »

யாழ் குடாவின் நீர் வளம்.

விவசாயமே இக்குடா நாட்டின் பொருளாதாரத் தளம். இங்குள்ள விவசாயக் கட்டமைப்பிலேயே ஒரு உயர்ந்த தன்மை காணப்படுகிறது. அதை விவசாயம் என்று சொல்வதிலும் பார்க்க தோட்டக் கலை என்பதுதான் சாலப் பொருந்தும்.. உலர் வலயத்தில் ஆறுகளோ அருவிகளோ இன்றி மழை நீரை மட்டும் நம்பி உள்ள பிரதேசம் மட்டும் அல்ல, இது நீர்த் தேக்கங்கள் எதுவுமே அமைக்க முடியாத அளவுக்கு சமதரை அமைப்புக் கொண்ட பிரதேசமுமாகும். கடல் மட்டத்திலிருந்து 35 அடி …

Read More »