Thursday , January 23 2020
Home / இரவி அருணாசலம்

இரவி அருணாசலம்

இரவி அருணாசலம்
இருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்

தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் ?

TN General Election 2016

கலைஞரை, ஜெயலலிதாவை, வைகோவை இன்னும்மற்றும் பிறத்தாரை அவர் இன்னார் என்று தெரிகின்றபக்குவம் வந்துவிட்டது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரிகிறது. என்ன செய்ய மாட்டார்கள் என்றும்தெரிகிறது. இவர்கள் எவரும் தமிழ் நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. தமிழ் நாட்டு மக்கள் மீது படர்ந்திருக்கின்ற இருள் இப்பொழுது விலகுவதாக இல்லை. அந்த விளக்கத்துடனும், தெரிதலுடனும், புரிதலுடனும், அறிதலுடனும் ஒரு கருத்தை முன் வைக்கின்றேன். தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் …

Read More »

ஓலமிட்டு எழுந்த ஒப்பாரிப் பாடல்

hkhk

இப்போது இதனைக் குறித்துக் கொள்ள வேண்டும், ஒருபேப்பர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த சயந்தன் அவர்கள் `ஆதிரை’ என்ற புனைவுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த பத்தி எழுத்தே இது. சயந்தனுக்கு இது முதலாவது நெடுங்கதையல்ல, ஏலவே, `ஆறாவடு’ என அறியப்பட்டவர். `ஆறாவடு’ புதினத்தை வாசிப்பதற்கு முன்னர் சயந்தனையிட்டு எனக்கு அவ்வளவாக நம்பிக்கை எழவில்லை. அதனை வாசித்துமுடித்த கணத்திலிருந்து எனது கருத்தை நான் மாற்றிக் கொண்டேன். `கணிப்புக்குரிய கதைஞன்’ …

Read More »

தூரத்தில் இருந்த நம் துயர்

AP_128986554617

அந்தப் பேரிடர் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, மூன்று மாதங்களாக கொட்டவேண்டிய பெருமழை ஒரு சில நாட்களில் சென்னை, கடலூர் போன்ற மாவட்டங்களில் கொட்டிய பேரிடரைச் சொல்கின்றேன். அந்தப்பேரிடரில் துக்கிற்றுத் தவித்த சென்னை, கடலுார் வாழ் மக்களுக்கு ஓர் ஆறுதலாகவும், சிறிய நிதி உதவியாகவும் செய்வதைத் தவிர வேறு எதைச் செய்ய முடியும்? ஆனால், அவை குறித்த சில விடயங்களைப் பகிரலாம் எனவிரும்புகிறேன். இந்தப் பெருமழையை யாரினாலும்தடுத்து நிறுத்தி …

Read More »

வீரர்களை வரலாறு விடுதலை செய்யும்

three3

தமிழீழ படுகொலைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றினை தயாரிப்பதற்காக பிரதியொன்று எழுத வேண்டியிருந்தது. அதற்காக சில தகவல்களைச் சேகரித்தேன். ஈழத்தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளிலிருந்து சிங்கள தேசத்தின் கோர முகத்தை கண்ணுற்றேன். வேறோர் உண்மையினையும் அது சொல்லாமல் இல்லை. இப்போது மாவீரர்களாகி விட்ட போராளிகளின் எழுச்சி இவ்வாறான இனப்படுகொலைகளை வெகுவாக தளர்த்தி விட்டிருக்கிறது. 1948 பெப்ரவரி 4ஆம் நாள் இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றார்கள். ஆனால், 1940 லேயே விவசாய அமைச்சராக …

Read More »

எல்லோரும் கொண்டாடுவோம்

teepi-gavvalu

யார் பெயரைச் சொல்லியாயினும், எதன் பொருட்டாக இருந்தாலும் எல்லோரும் கொண்டாடுவோம். அது தான் மிகமுக்கியமானது. கொண்டாட்டங்கள் சும்மா உருவானவையல்ல. இயல்பு வாழ்விலிருந்து ஒரு போது விலகி,மனதை மகிழ்வித்து, உடலை புத்துணர்வாக்கி, மீண்டும் இயங்குவதற்கான ஒரு எரிபொருள் தான் கொண்டாட்டங்கள். கொண்டாட்ட மனநிலை தான், கொன்றுபோடும் கொடுமைகளிலிருந்து நம்மை மீட்கின்றது. மனிதரின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று கொண்டாட்டம். ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடியாது என்று நினைத்த மனிதர் ஒரு திருப்பத்தை, வளைவை …

Read More »

இலையுதிர் காலம்

6950566-autumn-leaf-background

ன்னைச் சூழ உள்ள இயற்கையில் இது ஒரு இலையுதிர் காலம். சருகுகளாகி காலடியில் நசிந்து, நொருங்கி, நசநசவென்று அழுகிய இலைகள் அழியுண்ட காலம். எனது ஆதர்சங்களும் மேலான ஆளுமைகளும் நான் வியந்து விழி பிதியப் பார்த்தவர்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றனர். அதனாலும் இது ஓர் இலையுதிர் காலம். புரிகின்றது, ஐம்பதுக்கும் மேற்பட்ட என் வயது அப்படி,பதினைந்து வயதுப் பருவத்தில் ஆதர்சங்களாகவும்வியந்து நோக்கியவர்களாகவும் இருப்பவர்களின் வயதுஎப்படியும் முப்பதுக்கும் மேற்பட்டது. எப்படிப் பார்த்தாலும்இப்போது …

Read More »

என் இனமே, எம் சனமே

1961_sathiyagiraham

நினைவுக் குறிப்புக்களான நூல் ஒன்று சமீபத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஐ.தி.சம்பந்தன் எழுதிய`நீங்காத நினைவுகள்’ என்கின்ற புத்தகமே அது. அந்நூலினை வாசித்துச் செல்கையில் சில விடயங்கள் என் கவனத்தை கோரியது. அதனை புரிவதற்கு வரலாறை ஒரு கதையாக நாம் பார்க்க வேண்டும். 1953 ஓகஸ்ட் 17ஆம் நாள், இலங்கை முழுவதும் கடையடைப்பு (ஹர்த்தால்) நடைபெறுகிறது. கொம்யூனிட்ஸ் கட்சி, சமசமாச கட்சி ஆகியன முனைந்து நடாத்தியகடையடைப்பு இது. அப்போதைய ஐக்கிய தேசியக் …

Read More »

ஓர் எழுத்தூழியனுக்கான என் வணக்கங்கள்

espo

2003இல் முதன்முதலாக அவரைப் பார்த்தேன்.எஸ்.பொ.வை இருபது வருடங்களுக்கு மேலாக பார்க்கவேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்தேன். 2003ஒக்டோபரில் சென்னை, கோடாம்பக்கம் மேம்பாலத்தின்கீழ் புழுக்கத்தைப் போக்க முடியாத மின்விசிறி சுழல்கின்ற அறையில் அவரைப் பார்த்தேன். `சேர் சேர்’ என்று அழைத்தவாறு என் உரையாடல் அமைந்தது அவருக்கு அது பிடிக்கவில்லை. `என்ன சேர்.. சேர்.. என்கிறாய்’ என்று சிறிது கோபம் காட்டினார். `வேறுஎப்படிக் கூப்பிடுறது சேர்..? `அண்ணை’ என்று கூப்பிடும் அளவு இடைவெளி …

Read More »

எல்லாரும் கொண்டாடுவோம்

Happy-diwali

தீபாவளி வருகின்றது எல்லோரும் கொண்டாடுவோம் என்று தான் சொல்கிறேன். அதனை செத்தவீடாகவோ, அல்லது திருநாள் விழாவாகவோ கொண்டாடுவோம். செத்தவீட்டையும் விழா நாளாக கொண்டாடும் மரபு நமக்குண்டல்லவா? அப்போது அகால மரணங்கள் அதிகம் நிகழவில்லை. தற்கொலையோ, விபத்துக்களால் நிகழ்ந்த மரணங்களோ மிகமிகக்குறைவு. இளைய வயதில் சிறகுகளை உதிர்த்து மண்ணில் வீழ்ந்தவர்கள் எவருமில்லை. சாவுகாலம் ஆகித் தான் அநேகமாக நேர்ந்தது. இந்த உடலைவைத்து, உலகிற்கு பாரமாக இருக்கக்கூடாது என்று “ஆண்டவனே என்னை அழைக்க …

Read More »

காலம் நமக்கொரு பாட்டு எழுதும்

book

இரவி அருணாசலம் எழுதுவது என்னவெனில் நண்பர்களே, நேரடியாகவே பேசுவோமே, ஈழத்துசிறுகதைகளின் வளம் குறித்து உரையாடும்எண்ணம் எனக்குண்டு. ஆனால், இது விமர்சனம் அல்ல.பத்தி எழுத்துக்குரிய பக்குவத்துடனும், ஒருபேப்பர் வாசகர்களின் பரப்பிற்குள்ளும் ஏற்ப வருகின்றது. ஈழத்துச் சிறுகதை என்றால் முதலிலும் முக்கியமாகவும் வரும் பெயர் இலங்கையர்கோன். அவரது ‘வெள்ளிப்பாதசரம்’ தொகுப்பை இப்பொழுது வாசித்தாலும் புத்துணர்வைத் தர தவறுவதில்லை. வெள்ளிப்பாதசரம் கதை இவ்வாறாக முடியும். “அவனுக்குப் பசியில்லை, தாகம் இல்லை, தூக்கம் இல்லை, எத்தனை …

Read More »