Home / ப.வை.ஜெயபாலன்

ப.வை.ஜெயபாலன்

ப.வை.ஜெயபாலன்
கடல் கடந்தாலும் தாயகத்தின் நினைவுகளை மீட்டிப்பார்க் வைக்கும் கட்டுரைகளை தரும் எழுத்தாளர்...

நெல் அறுவடை நேரம்

paddy harvest

அறுவடைக்காலம், வயல் புறங்கள் எங்கும், கலகலப்பும், களிப்பும் மிகுந்து காணப்படும். ஐந்து மாதத்திற்கு பின் கடும் உழைப்புக்கு பயன்கிடைக்கும் காலம் இது. மழை வெய்யில், பனி என்று காலநிலையின் தாக்கத்திற்கு இடையும் பயிரை பருவத்திற்கு பருவம் நாசமாக்கும் பூச்சிகள், பங்கசுகள் ஊடறுத்து முளைக்கும் புல் இனங்கள் என்பனவற்றை எல்லாம் அகற்றி பயிரை வீறாக்குகின்ற கடும்உழைப்பில் இருக்கின்ற விவசாயி உற்பத்தியை பயனாகும் காலம் அது. இவ்வாறான பலஇடர்களை வென்று அறுவடை என்கின்ற …

Read More »

கீரிமலைக் கேணி

Keerimalai-Tank-Pool

கீரிமலைக் கேணியில் நீந்துவோர், நீந்தாதார் கூவிலடி சேராதார் என்பது அந்தக் கால தெருக்குறள். வடக்கே பாக்கு நீரிணையை எல்லையாகக் கொண்டு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை அருகாமை உள்ளது கீரிமலை. கீரிமலைக் கேணி ஒரு வற்றாத நன்னீர் ஊற்று, சில அடிகள் தள்ளி அலைபாயும் உப்புக்கடல். கீரிமலைக் கேணி பிரசித்தி பெற்ற பண்டைய ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத் திருத்தலத்தை தன்னகத்தில் கொண்டது. மூன்று மைல் தூரத்தில் மாவிட்டபுரம் திருத்தலம், குறுக்காக …

Read More »

தை பிறந்தது

IMG_5480

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வழக்கில் உள்ள முதுமொழி. எதிர்கால நம்பிக்கையை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊக்குவிக்கும் வாசகம் இது. புதிய வருடம் புதிய உற்சாகம், மாணவர்களுக்கு புதிய வகுப்பு. சாதித்து முடிக்க, கடந்த காலத்தை எடை போட துÖண்டலுக்குரியதாக எண்ணத்தை மனத்துக்குள் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஏற்படுத்துகின்ற ஒரு புது ஆண்டு. உத்தியோக உயர்வு, இடமாற்றம், உத்தியோக ஓய்வு போன்ற மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தும் தோற்றத்தோடு தை பிறக்கின்றது. நாற்றுமேடை, …

Read More »

முற்றத்து தைப்பொங்கல்

pongal

தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த இனிக்கும் நினைவுகள்சுவையானவை. போர்ச்சூழல் வாழ்விலும், புலம்பெயர்ந்த பின்னைய வாழ்விலும் அதனைப் போல ஊரே மகிழ்ந்து கொண்டாடிய தைப் பொங்கலை மீளக் காண முடியவில்லை. அம்மா, அண்ணைமார், சித்தி என்று ஒரே கூட்டுக்குடும்பமாக ஒரே உலைச் சோறு உண்ட காலம்.மாமி வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பு வீடு என்றுஅயல் வீடுக்கு …

Read More »

அம்மி – திருகை – ஆட்டுக்கல்

6308026224_9aa966c8eb_o

அண்மையில் சட்டன் மூத்தோர் வட்ட வழமை நிகழ்வில் ஒரு கண்காட்சி இடம்பெற்றது. போரில் முன்பு உபயோகத்திலிருந்த உபகரணங்களை நாங்கள் சேகரித்து காட்சிப்படுத்துவதாக ஒரு நிறுவனத்தின் இரு இஸ்லாமிய பெண்கள் வந்து சில பொருட்களைக் காட்சிப்படுத்தினார்கள். குழல் புட்டு அவிக்கப் பயன்படுத்தப்படும் புட்டுக்குழல், இடியப்பத்தட்டு, நீத்துப்பெட்டி என்பன போன்ற சிலதே அவை. ஊரில் அன்று முதல் பேராசிரியர் ராகுபதிபோன்றவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது நினைவுக்கு வந்தது. ஆர்வமே மூலதனமாகக்கொண்டு இருபலம் இல்லாத …

Read More »