Saturday , February 22 2020
Home / சுகி

சுகி

Avatar

குந்தியிருந்தது போய்..

602761_518907011476424_1204477393_n

வெள்ளைக்காரருக்கு பொதுவாகவே ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், நன்றாக யோசித்து எங்கிருந்து தொடங்கினால் அதுஎப்பிடிப்போய் முடியும் என்று சிந்தித்து. அந்தந்த சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களை பிடித்து, அவர்கள் ஊடாக, அவர்களை மாற்றுவதன் மூலமோ அல்லது அவர்களை நாம் விரும்பியதை பின்பற்ற வைப்பதன் மூலமோதாம் விரும்பும் மாற்றங்களை அச்சமூகங்களில் கொண்டுவருகிறார்கள். இதற்கு எமது சமூகமும் விதிவிலக்கல்ல. அவர்களின் மதம்,நடை உடை பாவனை, மொழி, பழக்கவழக்கம் என்று பலவற்றைக்குறிப்பிடலாம். அவர்கள் நன்றாக …

Read More »

சொல்லி வேலையில்லை..

sri-lankan-refugees

வீதியில் இருமருங்கிலும் மக்கள், தோளில் சிறுகுழந்தைகள் இருந்து கையசைக்க, முதியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசம் இல்லாது, ஆரவாரவொலி, ஓரிருவர் கைகளில்வெள்ளைக்கொடிகளும், பூக்களுமென, வேறும் சிலர், இனிமேல் எமக்கு விடிவுதான், கடவுளே, என்று இனி நிம்மதியாக இருக்கலாம் என்று தத்தம் மனஆசைகளை, அபிலாசைகளை இவர்கள் நிச்சயம் நிறை வேற்றுவார்கள் என்ற தொனியில் ஆணித்தரமான கருத்துப்பகிர்வுகள். இவ்வளவும் இந்திய அமைதிப்படை, Indian Peace Keeping Force என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்டு எம்மண்ணில் …

Read More »

தமிழ் மொழியும், எம் பிள்ளைகளும்

tamillanguage

தாய் மொழி என்பது ஆங்கிலத்தில் mother tongue என்பர். ஆங்கில அகராதியில் ஒரு பிள்ளை வளரும் பருவத்தில் பேசப்பட்ட மொழி என்கிறார்கள்.(The language which a person has grown up speaking from early childhood). ஆராட்சியாளர்கள் ஒரு குழந்தைக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசவும், கற்கவும் ஆளுமைஉள்ளது என்கிறார்கள். ஆனால் எம்மவர்களோதமிழைப் படிப்பித்தால் ஆங்கிலம் சரியாக கற்கமுடியாமல் போய்விடும் என்று ஆங்கிலத்திலேயே தாமும் வீட்டில் பிள்ளைகளுடன் கதைப்பதுடன், …

Read More »

அகதி வாழ்வும், அடுத்த தலைமுறையும்

photo_verybig_4388

பிறந்த இடத்தில் இருந்து உயிரையும், மானத்தையும் காக்க என, நாடு விட்டு, நாடு வந்து,பிறகு வந்த நாடு பிடிக்கவில்லை, பிள்ளைகளுக்கென வேறு நாடு என்று, என நாம் விரும்பிஅலைந்தது ஒரு புறம், எம்மை பாதுக்காப்பான இடத்தில் சேர்க்கின்றோம் என்று நாடு நாடாக காசும் புடுக்கிய ஏனென்சி புண்ணியவான்கள் ஒருபுறம் என நாம் அலைந்துலைந்த அகதிவாழ்வு ஒருமாதிரியாக அந்தந்த நாட்டு பிரஜாவுரிமை பெற்றதும், முன்னாள் அகதி என்ற பட்டத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. …

Read More »

குறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்

07lanka.xlarge1

மழை நின்றாலும், தூறல் நின்றபாடில்லை என்று எம்மில் சிலர், தாயகநிலைபற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள். புதிதாக போட்ட றோடும், சொகுசு வண்டியும், தங்குமிடங்களில் நீச்சல் தடாகங்களும், தமிழ் பாராளமன்ற உறுப்பினரின் புதியநல்லாட்சிக்கான ஏகோபித்த ஆதரவும், உங்களை மழைநின்று போனதாகவும்,அங்காங்கே துÖறல்கள் மட்டும் தான் இருப்பதாக நினைக்கவைத்திருக்கும். ஆனால் எதுவுமே மாறவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை. வெளிநாடுகளின் பொருளாதாரமுதலீட்டு அபிலாசைகளை, முதலில் திருப்திப்படுத்துவதற்காக செய்யவேண்டியதுகளை என்னமோ செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவை தமிழரின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதற்காகச் …

Read More »

தீராத காயங்களும் மாறாத வடுக்களும்

Thamby-14

வாழ்தல் இல்லை. ஏனெனில் வாழ்வுக்கான சுகந்திரம் இல்லை. எங்கு பார்த்தாலும் இராணுவம், இராணுவமுகாம் அகற்றப்பட்ட இடங்களில் எல்லாம் சிவில் உடையில் இராணுவ உளவாளிகள் என, மக்கள் நமக்கேன் வம்பு என ஓட்டுக்குள் முடங்கியிருக்கும் ஆமைபோல, வாழ்க்கையை செலுத்துகிறார்கள். வெளிநாட்டுக்கு தெரியும் அளவிற்கு உங்கள் பெயர் அடிபட்டால், உங்களை அவ்வளவாக ஒன்றும்செய்யமாட்டார்கள், செய்தால் வெளிநாடுகளுக்கு தெரியவந்து பிரச்சனையாகப்போய்விடும் என்று. சாதாரண மக்களின் பாடு, அதுவும்வாழ்க்கை வசதியில்லாவிட்டால் அவ்வளவுதான். அவர்களுக்கு ஒன்று நடந்தால் …

Read More »

மாவீரர் நினைவெழுச்சிநாளும், தமிழ்மக்களும்

maaveerar_2015-102-1024x683

மாவீரர் நாள் பற்றியும், அதை நடாத்துவது பற்றியும் சில சர்ச்சைகள் உள்ளன. அதுபற்றிபார்க்க முன்பு, வழமைபோல இந்த முறையும்,வேலை, மற்றும் பாடசாலை நாள் என்றும் பாராமல், புலம் பெயர் தேசம் எங்கும் மாவீரர் நினைவு எழுச்சியாக நினைவு கூரப்பட்டது. அதுமட்டும்மன்றி இம்முறை தாயகத்திலும் பல பிரதேசங்களில் பலத்த கட்டுப்பாடுகள் மத்தியிலும் மக்களால் திறந்த வெளியிலும், அவர் தம் இல்லங்களிலும் நினைவு கூரப்பட்டது. அவர்தம் கல்லறைகளை இராணுவம் இடித்து, அழித்து தரைமட்டம் …

Read More »

பரப்புரையும், அரசியல் தரகர்களும் (Lobby VS Lobbyist)

army_north_sri_lanka

எமது பிரச்சனைகளை பரப்புரை செய்யவேண்டியது மிகமுக்கியமானதொன்று. அதிலும் எமது பிரச்சனையை தெரியாதவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியது அவசியமானதொன்று. இங்கு யார் பார்வையாளர் என்பது முக்கியமானதொன்று. முன்பொருமுறை நலன்புரி அமைப்பொன்று எயிட்ஸ் நோய் பற்றியதமிழர்களுக்கான கூட்டம் ஒன்று நடாத்தியது.அக்கூட்டத்தில் மிகவும் அக்கறையோடு அந்நோய்பற்றி விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் பார்வையாளர்களில் 80 விகிதமானோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், மற்றையவர்கள் வைத்தியத்துறை சார்ந்தவர்களாகவும், வைத்தியர்களாகவும் இருந்தார்கள்.சில விடயங்களை நாம் தெரிந்தோ, தெரியாமலோ கொல்லர் தெருவில் ஊசிவிப்பது …

Read More »

கார்த்திகை மாதமும் கல்லறைகளும்

maaveerar

லண்டனில் ஒரு சுடலையின் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். அது ஒரு குளிர்கால காலை நேரம், அத்தோடு வானமே திறந்தது போல மழை பெய்து கொண்டிருந்தது. ஊரில் பெண்கள் சுடலைக்கு போகக்கூடாது என்பர். ஒரே இனம் என்பதால் பெண்ணைப்பேய் பிடித்துவிடும் என்று அதற்கு என் நண்பன் விளக்கம் சொன்னான். மழையில் நனைந்தபடி வாசலை கடந்து தனியே நடக்கத் தொடங்கினேன். என்னைச் சுற்றி இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருந்தார்கள் என் கண்ணில் பட்ட முதலாவது …

Read More »

அமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா ? தொடரும் அவலமா ?

holding-hands

தமிழ் ஈழ போராட்டத்தில் வீர மரணமடைந்த முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவுநாள் நெருங்குகின்றது.  இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ஒக்டோபர் 10ம்திகதி 1987ம் ஆண்டு நடுராத்திரி தாண்டிய நேரம் 1.15 க்கு தமிழ் பெண்கள் பலரை வன்புணர்வுக்கு ஆளாக்கிய இந்திய இராணுவத்தை கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்து எதிர்கொண்டாள்.  நாட்டின் விடுதலையோடு, பெண்ணின் விடுதலையையும் கருத்தில் தாங்கி ஆயுதம் ஏந்தியவள் அதே இலட்சியக் கனவோடு வீரச்சாவை எதிர்கொண்டாள். …

Read More »