Home / கோபி (page 3)

கோபி

‘இனப்படுகொலை’ என்று கூறுவதில் ஏன் இந்தக் குழப்பம் ?

imageafc

ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள், தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு (structural genocide) உட்பட்டுவருகிறார்கள் என்ற விடயத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் உறுதியான கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். நடைபெற்றது, நடைபெறுவது இனப்படுகொலையே, இதுவிடயத்தில் வேறு கேள்விகளுக்கு இடமில்லை என்பதே அவர்களது நிலைப்பாடு. இன்னொரு சாரார் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும், `இனப்படுகொலை’ (genocide) என்ற பதத்தினை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டிவருகிறார்கள். இனப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை, நடைபெற்றது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறுபவர்களும் தமிழ்மக்கள் மத்தியில்இருக்கிறார்கள் …

Read More »

நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறையும், தமிழர்களின் அரசியல் உரிமைகளும்

58c55e713

கடந்த  ஒருபேப்பரில் இப்பத்தி சிறிலங்காவின் அதிபர் தேர்தல் பற்றியதாகவே எழுதப்பட்டது. இம்முறையும் அது தொடர்பாகவே எழுதப்படுகிறது. இலங்கைத் தீவு தொடர்பான நடப்பு அரசியல் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்ற இத்தேர்தல் பற்றியதாக அமைந்திருக்கிறது. அரசியல் கட்சிகளினதும்,அதன் தலைவர்களின் நடவடிக்கைகளும் இத்தேர்தலை ஒட்டியதாகவே அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதுவொருமுக்கியத்துவமில்லாத விடயமாக இருப்பினும், சில தமிழ்த்தரப்புகள், குறிப்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை இத் தேர்தலை எதிர்கொள்கின்ற முறை …

Read More »

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு

International Association of Tamil Journalists | Annual conference 2014 Saturday, 11 October 2014 – 9.30 a.m. – 5.00 p.m. West London University St Mary’s Rd, London, W5 5RF United Kingdom Opening Morning Session : Media’s role in Democratisation and Human Rights Protection in the Age of the ‘ Global War …

Read More »

The media in post war Sri Lanka: supporting democratisation in the era of the ‘War on Terrorism’

International Association of Tamil Journalists Annual conference 2014 Saturday, 11 October 2014 9.30 a.m. – 5.00 p.m. West London University St Mary’s Rd London W5 5RF United Kingdom Opening Ms. Abinaya Kumargurunathan [title style=’1′]Morning Session : Media’s role in Democratisation and Human Rights Protection in the Age of the ‘ …

Read More »

சிறிலங்காவின் அதிபர் தேர்தலும், ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியப்பாடும்

maxresdefault

2010 ஜனவரியில் நடைபெற்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலின்போது, அதுதொடர்பாக `பொங்குதமிழ்’ இணையதளத்தில் ஒரு கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். மகிந்த இராஜபக்சவே தேர்தலில் வெல்லவேண்டும், அதுவும் தனித்து சிங்கள மக்களின் வாக்குப்பெரும்பான்மையால் வெல்ல வேண்டும் என்ற கருத்துப்பட அக்கட்டுரை அமைந்திருந்தது. இக்கட்டுரையை, திரு. நடேசன் சத்தியேந்திரா தனது tamilnation.org  இணையதளத்தில் மீள் பிரசுரம் செய்திருந்தார். பின்னர், தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் `வணக்கம் மாமன்னரே’ என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரையை அதே இணையத்தளத்திற்காக …

Read More »

வலுப்பெறும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை

ஸ்கொற்லாந்து வாக்கெடுப்பு முடிவிற்கு வந்து கொண்டிருக்கிற மாலைப்பொழுதில் இக்கட்டுரை எழுதப்படுவதனால், அனைத்துலக அரங்கில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை எவ்வாறு வலுப்பெறுகிறது என்பதனை விளக்குவதற்கு அவசியம் ஏற்படவில்லை. கடந்த சில வாரங்களாகவே பிரித்தானிய மைய ஊடகங்களும் பன்னாட்டு ஊடகங்களும், ஐக்கிய இராட்சியத்திலிருந்து ஸ்கொற்லாந்து பிரிந்து செல்வதா, இல்லையா என்பது பற்றி பல்வேறு ஆய்வுகளையும், கருத்துகளையும் வெளியிட்டு வந்தன. இவற்றுள் பெரும்பாலான கட்டுரைகள் ஸ்கொற்லாந்து தனிநாடாக பிரிந்து செல்வதால் அப்புதிய நாடு எதிர்நோக்கவிருக்கும் …

Read More »

இலக்கின்றி பயணிக்கிறதா தமிழர் அரசியல் ?

விடுதலைப்புலிகள் களத்தை விட்டகன்ற கடந்தஐந்து வருடகாலத்தில் தமிழ் அரசியல் அமைப்புகள் ஏதாவது அரசியல் இலக்குடன் செயற்படுகின்றனவா என்றால் அதற்கு நேரிடையாகப் பதிலளிக்க முடியாதுள்ளது. விடுதலைப்புலிகள் தன்னாட்சி அலகான தமிழீழத் தாயகம் என்பத னையேதமது இறுதி இலக்காக வைத்திருந்தார்கள். இருப்பினும், அரசியல் தீர்வுவிடயத்தில் குறைந்தபட்சமாக எவற்றை ஏற்றுக்கொள்வது என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இந்நிலப்பாட்டை பெரும்பாலான தமிழ்மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிறிலங்கா அரசாங்கங்களும், வெளித்தரப்பிலிருந்து மத்தியஸ்தம் வகிக்க வந்திருந்தவர்களும்கூட இதனை நன்கறிந்து …

Read More »

ஆட்சி மாற்றத்தை நோக்கிய அரசியல் நகர்வுகளும் கூட்டமைப்பினரின் வாக்கு அரசியலும்

இலங்கைத்தீவில், அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடைபெறவிருப்பதாகத் நம்பப்படும் நிலையில், அங்கு நடப்புஅரசியல் இத்தேர்தல்களை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தாம் பாராளுமன்றம் செல்வதாகக் கூறும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் தத்தமது ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கூட்டமைப்பின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாய்ப்பான பிரதேசங்களில் கட்சிப் பணிமனைகளை அமைப்பதும், கூட்டமைப்பில் அங்கம் …

Read More »

சிறிலங்காவின் ‘இனநல்லிணக்க’ முயற்சிகள்அம்பலப்பட்டுநிற்கின்றன

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு யுத்தத்தை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம், போர் முடிவுக்கு வந்ததும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் உட்கட்டுமானங்களை மேம்படுத்துகிறோம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளில் இறங்கியுள்ளோம் என்ற பரப்புரைகளில் இறங்கியது. போர்க்குற்றங்கள் தொடர்பில், பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணை நடாத்தப்பட்டால் அது தாம் மேற்கொண்டுவரும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதித்துவிடும்  என சிறிலங்கா வாதிட்டு வருகிறது. இந்தவாதத்தினை மேற்குலகம் புறந்தள்ளினாலும், அதனை கியூபா, …

Read More »

இந்தியாவில் ஆட்சி மாற்றமும் ஈழத்தமிழர்களும்

india-flag

இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி பெற்ற மாபெரும் வெற்றி முழு உலகத்தினது கவனத்தையும் அதன்பால் ஈர்த்திருக்கிறது.மோடி என ஒற்றைச் சொல்லால், அதாவதுஅவரது குடும்பப்பெயரால் அழைக்கப்படும் அறுபத்தி மூன்று வயதான நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையில் பாரதீய ஜனதா பெற்ற வெற்றியானது இந்திய சுதந்திரத்திற்கு பின்னரான அறுபத்தியாறு வருடங்களில் கொங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றி எனக்கருதப்படுகிறது. இந்திய நடுவன் அரசாங்கம் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவிடம் சென்றுள்ளமையினால் …

Read More »