Home / கோபி (page 4)

கோபி

‘புலி நீக்க அரசியல்’ எனப்படுவது யாதெனில்…

தமிழ் மிதவாதிகளின், குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கொழும்புத் தலைமையின் தற்போதைய அரசியல் அணுகுமுறையினைப் பற்றிகருத்து வெளியிடும் சில (தமிழ்) அரசியல் விமர்சகர்கள் அல்லது பத்தி எழுத்தாளர்கள், அவர்கள்`புலி நீக்கம் செய்யப்பட்ட’ அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆயுதரீதியான போராட்டத்தை முன்னெடுக்கிற வீரியமோ, அதற்கான விருப்போ கொண்டிராத அமைப்புகளால் புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலைத்தான் கடைப்பிடிக்க முடியும் எனச் சிலர் வாதிடலாம். ஆனால் இங்கு புலிநீக்க அரசியல் எனக்குறிப்பிடப்படுவது என்ன என்பதனையிட்டு நாம் …

Read More »

இல்லாத புலியை வலிய அழைக்கும் சிறிலங்கா

ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் ஒரளவுக்கு நிலைதடுமாற ஆரம்பித்துள்ளதனை அவதானிக்கலாம். அமெரிக்கத் தீர்மானம் ஒரு ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டுள்ளது என்பதனால் சிறிலங்கா அரசாங்கம் கலக்கம் அடைவதனையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு ஆட்சி மாற்றம் என்று குறிப்பிடும்போது வெறுமனே அரசாங்கக் கட்சியை மாற்றுவதல்ல, அதற்கு மேலும் சென்று ஆட்சியமைப்பை மாற்றி, சிறிலங்காவை தாராண்மைவாத ஒழுங்குக்குள் கொண்டு வருவது என மேற்குலகத்தின் ஆட்சிமாற்ற முயற்சிகளுக்கு …

Read More »

தாராண்மைவாத உலக ஒழுங்கும், தமிழரின் ‘வழி’ காட்டிகளும்

ஐநா மனிதவுரிமைச்சபையில் சிறிலங்கா மீதானதீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சிறிலங்காவின் மக்களுக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் டேவிட்கம்ரன் தெரிவித்துள்ளார். இத்தீர்மானம் சிறிலங்காவிற்கு எதிரானது அல்ல, இது சிறிலங்காவிற்கானது எனக் கூறியுள்ளார் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் மிஷேல் சிஷன். இவர்களைப்போலவே இத்தீர்மானம் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காகப் போராடும் சிறிலங்காவின் மக்களுக்கு கிடைத்த வெற்றி என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தன், காலனித்துவ விசுவாசத்துடன் மேற்குலக …

Read More »

அமெரிக்கத் தீர்மானமும் அதையிட்டு மோதிக்கொள்ளும் தமிழர்களும்.

இன்னும் ஐந்து தினங்களில் நிறைவுக்கு வரவுள்ள ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடர் இலங்கைத்தீவுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சுவாரசியமானதாக அமைந்துள்ளதுபோல் தெரிகிறது. ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களும் தமது கவனத்தைஜெனிவாவில் குவித்திருக்கின்றன. தாயகத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அதன் மாகாணசபை உறுப்பினர்கள், சட்டவாளர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நடைப்பயணம் செய்பவர்கள், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் என ஜெனிவாவிற்கு பலரும் சென்று திரும்புகிறார்கள். பலருக்கு ஜெனிவா …

Read More »

மேற்குலகின் எதிர்பார்ப்புக்களும், தமிழர்களின் ஏமாற்றமும்

ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத் தொடரில் அமெரிக்கா, பிரித்தானியாஆகிய இருநாடுகளும் கூட்டாகக் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் வரைபு ஒன்றின் நகல் இவ்வாரம் கசியவிடப்பட்டது. இத்தீர்மான வரைபின் பங்காளிகளாக மொன்ரனீக்ரோ, மசடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகளும் உள்ளதாக இவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது பெரும்பாலும் முன்னைய இருநாடுகளின் கூட்டுத் தீர்மானமாக அமைந்திருக்கிறது என உறுதியாகக் கூறமுடியும். கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் இத்தீர்மானம் கொண்டுவரப்படும்போது இவ்வரைபில் காணப்படும் வார்த்தைப் பிரயோகங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டலாம். …

Read More »

சிறிலங்கா அரசின் இரட்டை முகம்

’66ஆவது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தி, மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு, எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்.’ இவைசிறிலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் மகிந்தஇராஜபக்ச ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டவை. இவ்வுரையின் இன்னொரிடத்தில் புவெளிநாட்டிலிருந்து வருகின்றவர்கள் மனித உரிமை,ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திக்கொண்டே நாட்டுக்குள் உள் நுழைகின்றனர்.பீபீ எனஅவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, இலங்த் …

Read More »

சர்வதேச நகர்வுகளுயும் : அதையொட்டிய மிகைப்படுத்தல்களும்

வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் இம்முறையும் இலங்கைத்தீவு தொடர்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் பற்றிய பரபரப்புச் செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அடுத்து வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் உண்மை நிலையினைத் தெளிவுபடுத்துவதே இப்பத்தியின் நோக்கமாக அமைகிறது. அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம்பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லையாயினும், இது தொடர்பாக அமெரிக்க …

Read More »

சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும் சில தமிழரமைப்புக்களும்

இறுதி யுத்ததின் போது ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலமானது அறுபதாண்டுகளாகத் தொடரும் இனவழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கை என உலகத்தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதனை சர்வதேச அரங்கில் எடுத்துச் சொல்லி தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள அவர்கள்முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். சர்வதேசஅளவில் பக்கச்சார்பற்ற முறையில் ஒரு விசாரணை நடாத்தப்படுவதன் மூலமே தமது அரசியல் கோரிக்கைகளின் நியாயத்தன்மை வெளிப்படுத்தப்படும் என்று அவர்கள் எண்ணுகிறார்களே தவிர, எவரையும் பழிவாங்கும் எண்ணத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. …

Read More »

பாதை தெரிந்த பின்பும் பயணத்தில் ஏன் தயக்கம் ?

தமிழீழ நினைவெழுச்சி நாட்களை உணர்வுபூர்வமாக எதிர்கொள்ளும் தருணத்தில், நிகழ்காலநிலவரத்தையும் எதிர்காலம்பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இப்பத்தி அமைகிறது. `மீகாமன் இல்லாத கலமாக’ ஈழத்தமிழினம் தடுமாறிக் கொண்டிருப்பதாக நம்மத்தியில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இன்னொரு புறத்தில் தவறான தீர்மானங்களால் இந்நிலைக்குத் தள்ளப்படடு விட்டோம் என்ற கருத்தும் உள்ளது. வந்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு விட்டு வருந்திக் கொண்ருக்கிறோம் என்று கூறுபவர்களும் உள்ளனர். இக்கருத்துகள் யாவும் அவரவர் பார்வையில் சரியாகத் …

Read More »

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் ?

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களின அதிருப்பதியை தேடிக்கொண்டார். இந்நிகழ்வை தமிழ் அரசியலில் ஏற்பட்ட சுனாமிப் பேரவலம் என தமிழ் அரசியலில் மிகுந்த ஈடுபாடுடைய செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். இனப்படுகொலையாளன் என தமிழ்த்தரப்பால் அழைக்கப்படும் மகிந்த இராஜபக்சவினை ஏற்றுக்கொண்டு அவருக்கு மதிப்பளிக்க தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் கட்சி முன்வந்தமை தமிழ்த் தேசியஅரசியலில் பின்னடைவினை …

Read More »