Home / கோபி (page 5)

கோபி

வடமாகாண சபைத் தேர்தல்களும், அதிகார மையங்களும்

கிடைக்கப்பெறும் தகவல்களிலிருந்து, நாளை (செப்ரெம்பர் 21) நடைபெறவுள்ள பிரிக்கப்பட்ட வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றியீட்டும் என அனுமானிக்க முடிகிறது. இத்தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும், என்பதனைக்காட்டிலும் தமிழ்பிரதேசத்தின் ஆட்சியதிகாரம் யாருடைய கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழ்மக்கள் மிகுந்த தெளிவாக இருப்பதனால்கூட்டமைப்பின் வெற்றி இலகுவானதாக அமையவுள்ளது எனக் குறிப்பிடமுடியும். தேர்தல் பரப்புரைகளில் சில நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைகூட்டமைப்பின் தலைமைப்பீடம் வழங்கியுள்ள போதிலும், இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் கூட்டமைப்பு …

Read More »

யாரை திருப்திப்படுத்த இந்த விஞ்ஞாபனம்?

பின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை நிலைப்பாட்டை சரியாக அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு முறை குறிப்பிட்டதை இன்னொரு இடத்தில் மறுத்தும், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுவதாகக் கூறியும், இடத்திற்கு ஏற்றமாதிரி கருத்துகள் வெளியிட்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது …

Read More »

கேள்விக்குள்ளாகும் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அவரது உதவியளார்போல் செயற்படும் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட மதியாபரணம் சுமந்திரனும் அண்மையில் கனடாவிற்கும்,ஐக்கிய இராட்சியத்திற்கும் பயணம் மேற்கொண்டிருந்தனர். பிரிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கப்பதற்காகவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக கூட்டமைப்புத் தரப்பில் கூறப்பட்டாலும், தேர்தல் செலவுக்கான நிதியினைச் சேகரிப்பதற்காகவே அவர்கள் இருவரும் இங்கு வந்ததாகத் தெரியவருகிறது. இலண்டனில் நடைபெற்ற கூட்டங்களில் மக்களை தமக்கு நிதியுதவி செய்யுமாறு வெளிப்படையாககே …

Read More »

ஈழத்தமிழர்களின் அதிகாரமையம் மீண்டும் கொழும்புக்கு

இலங்கைத்தீவு காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்திலும், அதற்கு பிற்பட்ட காலத்திலும்,ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மையமாக கொழும்பு இருந்து வந்தது. தலைநகர் என்ற வகையிலும், பாராளுமன்றம், அமைச்சரவை அலுவலகங்கள், அரச பணியங்கங்களின் தலைமையங்கள் என்பவை கொழும்பில் இருப்பதாலும், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாத ஒற்றையாடசி முறையில் இது இயற்கையான நடைமுறையாகவே தென்படுகிறது. இருப்பினும் சமஸ்டி பின்னர் தனிநாடு என அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொண்ட தமிழர் தலைமை கொழும்பில் மையங் கொண்டிருந்தமை, அதன் நடைமுறைக்கும் கொள்கைகளுக்கும் இடையில் …

Read More »

இலக்குத்தவறிச் செல்லும் தமிழர் அமைப்புக்கள்

தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் செயற்படும் தமிழத்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் அல்லது செயற்பாடின்மை, அதன் உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகள் என்பனவற்றில் விமர்சனம் கொண்டுள்ளவர்களும்,இவை அனைத்தினதும் இறுதி இலக்கு ஒன்று என்றே நம்புகிறார்கள். ஆதலால், அரசியல் பணிகளை இவ்வமைப்புகளிடம் விட்டுவிட்டு, தமது அன்றாட வாழ்வில் கவனம் செலுத்துகிறார்கள். அவ்வப்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சிறுதொகையிலான மக்களும் அத்துடன் தமது பணி முடிவுற்று விட்டதாக எண்ணுகிறார்கள். தம்மை பிரதிநிதித்துப்படுத்துவதாகக கூறிக்கொள்ளும் அமைப்புகள், …

Read More »

ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்

கடந்த இதழில், தமிழ் அமைப்புகளுக்கும் குழுக்களுக்குமிடையில் கொள்கையளவிலான ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள்பற்றி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். இந்நடவடிக்கைகளுக்கு தடைக்கற்களாக சில தனிநபர்களினதும், குழுக்களினதும் சந்தர்ப்பவாதச் செயற்பாடுகளே அமைந்துள்ளன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வாறனவர்களை கொள்கைப்பிடிப்பவற்றவர்கள் அல்லது அரசியல் தெளிவு இல்லாதவர்கள் இலலாதவர்கள் என ஒதுக்கி விடமுடியாது, மாறாக இவர்கள் அமைப்புகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் …

Read More »

பொதுப்பிரகடனம், சுதந்திர சாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்

தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி  அவர்களிடையே காணப்படும் முரண்பாடுகளைக் களையும் சில முயற்சிகள் கடந்த நாலாண்டுகளில் நடைபெற்று அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன. இங்கு குறிப்பிடப்படும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகள் யாவும் நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரணியில் நின்றன, அல்லது ஒரணியாக இயங்கின என்பதனை கவனத்தில் எடுத்தால், அவற்றிடையே கொள்கையளவிலாவது ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு உள்ளது என்பதனை நாம் உணர முடியும். இருப்பினும் அவ்வாறான …

Read More »

நாடு கடந்த அரசாங்கம் மீதான எதிர்பார்ப்புகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றபோது, இதுவே நடப்பு அரசாங்கத்தின் இறுதி அமர்வு என அதன் முதல்வர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இந்நிலையில்,கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு கடந்த அரசாங்கம் அதன் இலக்கினை நோக்கி நகர்ந்திருக்கிறதா எனபதனை காய்த்தல் உவத்திலின்று ஆராய வேண்டியுள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் பின்னாலிருந்தவர்கள், குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்பு படைகளுடன் இயங்கும் கே.பி. உடன் தொடர்புடையவர்களுக்கும் இக்கட்டமைப்புக்கும் உள்ள …

Read More »

மாற்றம் பெறாத சர்வதேச அணுகுமுறையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களும்

ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தந்தை செல்வநாயகம் கூறிய ஒரு வாக்கியம் அடிக்கடி தமிழ் அரசியல் தளத்திலும், வெகுமக்களாலும் நினைவு கூரப்பட்டு வருகிறது. “தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என்ற அந்த வாசகத்தை அரசியல் வங்குரோத்து நிலையில்,விரக்தியின் விளிம்பில் நின்று தந்தை செல்வா குறிப்பிடப்பட்டதாகவே பலரும் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். தந்தை செல்வா இவ்வாறு கருத்து வெளியிடும் போது, அவரும் அவரது கட்சியினரும் ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் …

Read More »

‘கொழும்புடன் பேசுதல்’ என்பதன் பின்னாலுள்ள அரசியல்

புலம்பெயர் தமிழர்களிடம் தமது அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும்,இம்முயற்சிக்கு மகிந்த ஆதரவளித்துள்ளதாகவும் சிறிலங்காவின் அமைச்சரவை பேச்சாளாரன கெஹலிய ரம்புக்வெல என்பவர் அண்மையில் தெரிவித்த கருத்து மீதான அதிர்வலைகளை தமிழ் ஊடகங்கள் பிரதிபலித்தன. எந்த எந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அல்லது தனிநபர்கள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரங்களையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. இவ்வற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது என்பது ஒருபுறமிருக்க, இவ்விதம் தொடர்புபட்டவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் உடனடியாகவே மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டமையானது …

Read More »