Thursday , January 23 2020
Home / வேல் தர்மா

வேல் தர்மா

வேல் தர்மா
"தமிழன் இல்லாத நாடில்லை". "தமிழனுக்கு என்று ஒரு நாய் கூட இல்லை" கருத்துக்களுக்கு : [email protected]

2016 ஒரு மீள் பார்வை

2017-01-02-12-09-44

2016-ம் ஆண்டு கொலைகளுடன் ஆரம்பமானது. ஒரு புறம் இஸ்லாமிய அரசு தம்மிடம் அகப்பட்ட மேற்கு நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொன்றது. மறு புறம் ஐக்கிய அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் தான் பயங்கரவாதிகள் எனக் கருதுவோரை எந்தவித விசாரணையும் இல்லாமல் கொன்றுகொண்டிருந்தது. 2016 ஜனவரி இரண்டாம் திகதி சவுதி அரேபியாவில் 47 பேர் கொல்லப் பட்டனர். இதில் சியா இஸ்லாமிய மத போதகரான ஷேக் நிமர் அல் நிமர் …

Read More »

சீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்

ecd0cd810ce4ed11520f6a70670092cd_c0-167-4884-3014_s885x516

2017-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சீன அதிபர் தெரிவில் ஷி ஜின்பிங் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. 2012-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து ஷி ஜின்பிங் இரண்டு பணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றார். ஒன்று சீனாவில் தனது பிடியை இறுக்குவது. இரண்டாவது சீனாவில் ஊழலை ஒழித்தல். சீனாவில் ஆட்சியில் இருப்பவர் கட்சியையும் படைத்துறையையும் தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும். சீனாவில் நடக்கும் ஊழல்களால் சீன மக்கள் ஆண்டு …

Read More »

ஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு

bakucollage

ஐ எஸ் அமைப்புடன் பங்காண்மை அடிப்படையில் நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவரை ஐ எஸ் அமைப்பினர் மாற்றியதைத் தொடர்ந்து இந்தப் பிளவு உருவாகியுள்ளது. நைஜீரியாவில் தனித்துச் செயற்பட்டு வந்த பொக்கோ ஹரம் அமைப்பு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்பட்டு வந்த ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புடன் இணைந்து கொண்டது. ஐ …

Read More »

பாக்கிஸ்த்தானிலும் சீனாவிற்கு அமெரிக்கா ஆப்பு வைக்குமா?

hq

எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும் பகுதியை ஒதுக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா …

Read More »

ஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா?

mosul

சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர். 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் …

Read More »

உலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்

british-sas

சிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள், தொழில்நுட்பங்கள், போன்றவற்றைப் பாவித்து தனித்துவமானதும் மிக இரகசியமானதுமான தாக்குதல்களை செய்ய சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட படையணியாகும். இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய முன்னணி நாடுகள் எல்லாம் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கும் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கும் என சிறப்புப் படையணிகளை அமைத்தன. தற்போது பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் செய்வதற்கும் அவர்களின் தாக்குதல்களை …

Read More »

கஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது? அது போரைக் கொண்டுவருமா?

arried

இந்திய கஷ்மீரில் எல்லை தாண்டிச் சென்று செய்த தாக்குதல் சிறியதென்றாலும் அது உலகிலேயே மிகவும் பிரச்சனைக்குரிய எல்லையில் செய்த தாக்குதலாகும். உளவாடல் தகவல் திரட்டல் திட்டமிடல் இரகசியம் பேணல் வேவுபார்த்தல் இரகசியமான ஊடுருவல் ஆகியவற்றை இந்தியப் படையினர் திறம்படச் செய்துள்ளனர். அதையும் ஆளணி இழப்பு ஏதும் இன்றிச் செய்துள்ளனர். பாக்கிஸ்த்தானின் உளவாடலிலும் வேவுபார்த்தலிலும் மோசமாகக் கோட்டை விட்டுள்ளது. செய்த தாக்குதல் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) என இந்தியத் …

Read More »

உலக நகரங்களும் அச்சத்திற்குள்ளான இலண்டனின் உச்ச நிலையும்

2FB6E85B00000578-0-image-a-46_1451641650185

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெள்யேற வேண்டும் என்ற கருத்துக் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் இலண்டன் மாநகர் உலகின் முன்னணி நகரமாக தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறிய பின்னர் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிதிச் சந்தையைக் கொண்டிருக்கும் இலண்டனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருக்கும் வரையில் இலண்டன் பொருளாதாரத்தைப் …

Read More »

கடன் கொடுத்துக் கலங்கும் சீன வங்கிகள்

china2

சீனாவின் வங்கித் துறை 29ரில்லியன் டொலர்கள் பெறுமதியானது அதாவது 29இலட்சம் கோடி. சீன வங்கித் துறையின் கடன்களின் 20 விழுக்காடு அறவிட முடியாத நிலையில் இருக்கின்றது. சீனாவின் கிராமிய வர்த்தக வங்கிகளின் அறவிட முடியாக் கடன்கள் அதிகரித்துக் கொண்டே போக வங்கிகளின் இலாபங்களும் குறைந்து கொண்டே போகின்றன. சீன வங்கிகளின் அறவிடமுடியாக் கடன்களை உலக நிதி ஊடகங்கள் non-performing loans என்ற பெயரும் NPLs என்ற சுருக்கப் பெயரும் இட்டுள்ளன. …

Read More »

கழகங்களின் கட்டமைப்பும் சீமானுக்கு எதிரான சதிகளும்

seeman

சீமானின் நாம் தமிழர்கட்சிக்கு பெரும் தடையாக இருப்பவை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் கட்டமைப்பும் அவருக்கு எதிராக பல தரப்பில் இருந்தும் செய்யப்படும் சதிகளும் ஆகும். இந்தப் பெரும்தடைகளை தாண்டி தேர்தலில் காத்திரமான வெற்றி பெறுவது மட்டுமல்ல சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு என ஒரு வாக்கு வங்கி உண்டுஎன்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் சீமானுக்கு உண்டு. வலிமை மிக்க ஊடகங்கள் பக்கத் துணையாக இல்லாமல் …

Read More »