Thursday , January 23 2020
Home / அரசியல் / அரசியல் ஆய்வு

அரசியல் ஆய்வு

அரசியல் ஆய்வு

April, 2016

 • 13 April

  சேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா ?

  hugo-swire

  கடந்த இதழில், இப்பத்தியில் கொழும்பின் அரசியல் முன்னெடுப்புகள் அரசியற் தீர்வைக் காட்டிபொறுப்புக்கூறல் பொறிமுறைகளை இழுத்தடிக்கவும், நல்லிணக்கத்தைக் காட்டி அரசியற் தீர்வை தட்டிக்கழிக்கும் நடவடிக்கைகளாக அமைகின்றன எனக்குறிப்பிட்டிருந்தேன். சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்ளும்போது மேற்குலகத் தரப்புகளின் நிலைப்பாடு எவ்வாறிருக்கிறது ?மார்ச் 23ம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் வைபவத்தில் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் திரு. ஹியூகோ ஸ்வையர் ஆற்றிய உரை இவ்வினாவிற்கு …

February, 2016

 • 11 February

  ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா ?

  scotland

  கடந்தவாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காக எடின்பரோ நகரிற்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்கொற் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம்பற்றிய விபரமறியாத சில தமிழ் இணையதளங்கள் உலகில் அதியுயர் சமஸ்டி நிலவுகிற ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காவே இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. செய்திகளை வெட்டி ஒட்டும் இவ்விணைய தளங்களைப்போலன்றி, அறுபத்தேழு …

January, 2016

 • 14 January

  2016 : அரசியற்தீர்வு கிட்டுமா ?

  Ranil_Maithri_sad

  2016 இல் தீர்வு ஏற்படும் எனவும்,தேசிய இனப்பிரச்சனைக்கு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அரசியற் தீர்வினைப் பெறுவதற்கான `புனிதமான’ கடமையில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனவும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இரா. சம்பந்தன் விடுத்திருக்கும் புதுவருடச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதுவருடத்தில் தீர்மானங்கள் எடுப்பதும்பின்னர் அவற்றை நிறைவேற்றாது அடுத்த வருடஆரம்பத்தில் மீண்டும் அதே தீர்மானங்களைஎடுப்பதும் பெரும்பாலான மனிதர்களின் வழக்கமாக உள்ளதுபோன்று சம்பந்தனும் கடந்தவருட ஆரம்பத்திலும் இவ்வாறு கூறியிருந்தார்.இருப்பினும் இவ்வருடம் புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று …

 • 12 January

  தொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்

  Ranil-kerry

  இலங்கைத்தீவின் அரசியலோ, அல்லது தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைகளோ தனித்துவமான விடயங்களாக நோக்கப்படாமால், இவைஉலகின் பல்வேறுநாடுகளின் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படவேண்டும் என்ற கருத்தை இப்பத்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கைத்தீவில் நடைபெற்ற `ஆட்சி மாற்றத்தை’ மற்றைய நாடுகளில் நடைபெற்றுவரும் ஆட்சிமாற்றங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில் பார்த்தால் இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்தி மற்றைய நாடுகளிலும் பிரயோகிக்கப்பட்டு வருவதனை நாம் …

November, 2015

 • 23 November

  போராட்ட வடிவத்தை தீர்மானிப்பது யார் ?

  gajan

  தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிரையீர்ந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் இந்நாட்களில்,விடுதலைப்போராட்டத்தையும் எம்மாவீரர்கள்ஏற்று நடந்த வழிமுறைகளையும் விமர்சனம்செய்வபவர்களின் பக்கமும் சற்று கவனத்தைத்திருப்ப வேண்டியுள்ளது. இயங்கும் எல்லாவிடயங்களையிட்டும் மனிதர்கள் குறை நிறை காண்பதுஇயற்கையே. ஆனால் விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைவோரின் இலக்கு பொதுவான விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. போராட்டத்தின் விளைவாகப் உருப்பெற்ற தேசக்கட்டுமானங்களை தகர்க்கும் உள்நோக்கம் கொண்டது. இங்குகட்டுமானங்கள் எனக் கூறும்போது அவை வெறுமனே பௌதீக கட்டுமானங்களாக இல்லாமல்சமூக, அரசியற் தளத்தில் தமிழ் மக்கள் தம்மைஒரு தேசமாக …

October, 2015

 • 28 October

  மாற்று அரசியல் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

  oru_gopi

  நடந்து முடிந்த சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடைந்த தோல்வி, ஈழத்தமிழரின் அரசியலில் பண்புமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதப்படவேண்டும். மாறாக இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாக வியாக்கியானப்படுத்தும் முயற்சிகள் இவ்விடயத்தில் தமது நலன்களைப் பேணும் தரப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. வெளித்தரப்புகளைப் பொறுத்தவரை, ஒரு தேர்தலில் மக்கள் யாரைத்தெரிவு செய்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளும் நடுவ நிலையையே அவை கொண்டிருக்க …

 • 12 October

  அமெரிக்கத் தீர்மானமும் புவிசார் அரசியலும்

  obama_mythiripala

  கடந்தவாரம் ஜ.நா. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்காவின் இணக்கத்துடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருவதனை அவதானிக்க முடிகிறது. முன்னர்சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழ் அமைப்புகள் கூட இத்தீர்மானம் `ஒரு வரலாற்று நிகழ்வு’, `திருப்பு முனையானசம்பவம்’, `முதற்கட்டம் ? எனப் புகழ்வதை தமிழ்த்தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. மறுபுறத்தில், இந்தத் தீர்மானத்தையிட்டு ஏமாற்றமடைந்துள்ளவர்கள் கூட தமது கருத்துகளை பொதுத்தளங்களில் வெளியிடுவதனை தவிர்த்து வருகின்றனர். அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தினதும் …

 • 1 October

  சர்வதேச நீதி சறுக்குமா ?

  அமெரிக்க தூதுவரின் வசிப்பிடத்தில் சுமணசிறி தேரோ , தூதர் அதுல் கிஷப், சம்பந்தன்

  கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நடந்த ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனிதவுரிமைச் சபையின்ஆணையாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை இம்மாதம் வெளியிடவுள்ளது. அந்த வகையில் செப்ரெம்பர் 14ம் திகதி ஆரம்பமாகும் ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் முப்பதாவது கூட்டத்தொடர் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனத்திற்குரிய ஒரு நிகழ்வாகஅமையவுள்ளது. ஆறுமாத காலம் தாமதித்து வெளியிடப்படும் இவ்வறிக்கை பற்றியும், விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் …

November, 2014

 • 26 November

  இந்தியாவைக் கையாளும் புதிய ‘பெருமாள் அவதாரம்’ வெற்றி பெறுமா?

  india-flag

  ஒடுக்குமுறைக்கு எதிராகப் பெரும்போர் புரிந்த ‘மாவீரம்’ மௌனித்து ஐந்து ஆண்டுகளிற்கு மேலாகிறது. அவ் விதைகள் வீழ்ந்த காரணங்களை மக்கள் நன்கறிவர். இருப்பினும் அக் காரணிகளை பேரினவாதம் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் அரசியல் அதிகாரப்போட்டிக்கு ‘அது’ தேவைப்படுவதை புதிதாக முளைக்கும் உறுமயாக்களும், பலயாக்களும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. தம்புல்லையிலிருந்து மன்னார் வரை, அம்பாறையிலிருந்து தென்னமரவாடிவரை அதன் நச்சுவேர்கள் பரவிப்படர்ந்திருக்கின்றன. இதுவரை வீழ்ந்ததெல்லாம் விதையென்று உரைத்தால், இல்லையில்லை அது ஜனநாயகம் அற்ற விதையென்று வியாக்கியானம் …

 • 13 November

  ‘இனப்படுகொலை’ என்று கூறுவதில் ஏன் இந்தக் குழப்பம் ?

  imageafc

  ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள், தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு (structural genocide) உட்பட்டுவருகிறார்கள் என்ற விடயத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் உறுதியான கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். நடைபெற்றது, நடைபெறுவது இனப்படுகொலையே, இதுவிடயத்தில் வேறு கேள்விகளுக்கு இடமில்லை என்பதே அவர்களது நிலைப்பாடு. இன்னொரு சாரார் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும், `இனப்படுகொலை’ (genocide) என்ற பதத்தினை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டிவருகிறார்கள். இனப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை, நடைபெற்றது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறுபவர்களும் தமிழ்மக்கள் மத்தியில்இருக்கிறார்கள் …