Thursday , January 23 2020
Home / அரசியல் / அலசுவாரம்

அலசுவாரம்

திராவிடம் செய்த துரோகம்

230182-karunanidhijayalalithaa

தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போதிய பணபலத்தோடும் ஊடகங்களின் உதவியுடனானபிரச்சார பலத்தோடும் பெருந்தலைவர்கள் வரும் தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு பணங்கொடுத்து ஆட்களைத் திரட்டி சனநெரிசலை ஏற்படுத்தி, தங்களுக்கிருக்கும் ஆதரவை பிரமாண்டப்படுத்தி மக்கள்முன் காட்டுகிறார்கள். தலைவர்களைப் பார்க்கவும்,கூட்டத்தில் பங்குபற்றும் சினிமாப் பிரபலங்களைப் பார்க்கவும், பணத்திற்காகவும், சாப்பாட்டுப் பார்சலுக்காகவும், கொடுக்கப்படும் பலஅன்பளிப்புகளுக்காகவும் என்று, பல்வேறுபட்ட நோக்கங்களோடு சனங்கள் இந்தப் பணபலமிக்க கட்சிகளின் கூட்டங்களுக்கு முண்டியடித்துக்கொண்டு …

Read More »

மாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்

Sri-Lanka-Politics2-1880x1157-800x365

அலசுவாரம் வாசகர்களுக்கு புனித நத்தார் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இன்னும் இரு வாரங்களுள் நிறைவெய்த விருக்கும் 2015 குறிப்பிடத்தக்க நன்மைகளெதையும் தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லாவிடினும் ஓர் அமைதியான சூழலை எமது தாயகத்தில் உருவாக்கிவிட்டே செல்கிறது என்பதை மறுக்க முடியாது. பழைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தின் போதிருந்த கட்டற்ற வன்முறைகளுக்கு முடிவுகட்டப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு ஓர் அரசியல் கௌரவம், அதாவது எதிர்க்கட்சி ஆசனங்களும் தலைமையும் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கின்றது. …

Read More »

மாவீரம் போகவில்லை

மாவீரம்

வடக்கு முதல்வருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்குமிடையே தேவையற்ற முரண்பாடுகள் உருவாகி அதனைப் பத்திரிகைகள் வேறு ஊதிப் பெரிது படுத்திக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மாவீரர் நினைவு வாரம்வந்திருக்கிறது. சிவ பூசைக்குள் கரடி நுழைந்தது போல என்பார்கள், அவ்வாறுதான் இந்த முரண்பாடுகளும் காணப்படுகின்றன. தமிழினம் ஒற்றுமைப்பட்டு நின்று தனது உரிமையை வென்றெடுக்க வேண்டிய முதற்தேவையை மறந்துவிட்டு, சிறீலங்காப் பிரதமரின் வாலைப் பிடித்துக்கொண்டு, வடமாகாணசபை முதல்வரின் தலைமையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் …

Read More »

முதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்

tamilini

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிரணியின் அரசியற் துறைப் பொறுப்பாளராயிருந்த தமிழினியும் மற்றுமோர் விடுதலைப் போராளியான தாருஜாவும் மிக இளம் வயதில் மரணத்தைத் தழுவிக்கொண்டது மிகவும் வேதனையளிப்பதாகவுள்ளது. அவர்கள் பல துன்பங்களைத் தாங்கி அந்த விழுப்புண்களாற்தான் இவ்வாறு இறந்து போனார்கள் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் அவர்கள் சரணடைந்தபோது செய்யப்பட்ட சித்திரவதைகளே அவர்களின் இளவயது மரணத்திற்கான காரணம் என்பதை இலகுவில் மறுத்துவிட முடியாது. இருப்பினும் அதற்கான போதிய …

Read More »

மாவீரர்களைப் பிரிக்காதீர்!

மாவீரர் தினம் வரப்போகிறது இந்த முறை இரு பிரிவுகளாகப் பிரிந்து லண்டனில் அதனை நடத்தப்போகிறர்ர்களாமென்று தெரிய வருகின்றது. யூரோப்பில் பலநாடுகளிலும் இவ்வாறு தனித்தனியாக நடப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதில்லை, ஆனால் யுகேயில் இவ்வாறு நடக்கப் போவதாகச் சொல்லப்படுவதுதான் ஆச்சரியமாகவிருக்கிறது. தமிழீழம் என்கின்ற ஒரே குறிக்கோளை அடைவதற்கான வேலைத்திட்டங்களை முடிவுசெய்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் இப்படிச் சில பிரச்சனைகள் உருவாகி மாவீரர் தினமும் இரு இடங்களில் நடக்க வேண்டியிருந்தால் அதனை ஓரளவு …

Read More »

வழுவல் அள்ளிய குரங்காய்விட்ட பெரும்பான்மை

போர் முடிந்துவிட்டது, சமாதானம் பிறந்து விட்டது, நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என்பதை ஆராய்வதுதானாம் அரசாங்கம் அமைத்த தெரிவுக்குழுவின் நிகழ்ச்சி நிரல். கொழும்புத் தமிழ் ஊடகமொன்றிற்கு கூட்டணித்தலைமை கொடுத்த செய்தியொன்று இப்படிக் கூறுவதாக இணையச் செய்திகள் கூறுகின்றன. அந்தக் கொழும்புத் தமிழ் ஊடகம் எதுவென்று அறியமுடியவில்லை. இந்தியாவிலிருந்து இலங்கை வந்துவிட்டுப் போன அரசப் பிரதிநிதியிடம் இனப்பிரச்சனை தொடர்பாக தெரிவுக்குழுவை அமைக்கப் போகிறோமென்று கூறிவிட்டு, வழக்கம் போல இலங்கையரசு செய்த கபட …

Read More »

தன் வலிமையை இனங்காட்டும் தமிழர் தேசியம்.

    இது அலசுவாரத்தின் நூறாவது தொடர். நான் சில அத்தியாய இலக்கங்களைக் குறிக்க மறந்ததால், சில அத்தியாயங்கள் மீண்டும் அதே இலக்கங்களிலேயே வெளிவந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் பிரசுரமான அத்தியாயங்கள் நூற்றிலும் அதிகம். அந்தத் தவறுகளுக்கு நானே முழுப்பொறுப்பு. ஏனெனில் கம்பியூட்டரில் இருந்து பைலை எடுத்து முன்பு எழுதியவைகளை அழித்துவிட்டு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கும்போது முகப்பில் அத்தியாய இலக்கத்தை மாற்ற மறந்துபோனதால் இது நேர்ந்துவிட்டது. ஒரு பேப்பர் நிர்வாகத்தினரிடமும் …

Read More »

தமிழர் தேசியக் கோரிக்கையின் அவசர அவசியம்

    அலசுவாரம் – 98 யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒன்பதாகவிருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஐந்தாகக் குறைக்கப்படப் போகிறது.  இனச்சுத்திகரிப்பின் மிகப்பிரதான நடைமுறையான இந்தப் பிரதிநிதித்துவக் குறைப்பு மிக இலகுவாக நடந்தேறியிருக்கிறது.   முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகத் தமிழ்மக்கள பெரு வாரியாகத் தமது வாழிடங்களைவிட்டு வெளியேறி விட்டதன் மூலம்; தங்களது எண்ணிக்கையைத் தாம் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசத்தில்  தாங்களாகவே குறைத்துக் கொண்டார்கள்.  மறைந்த ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவால் கொண்டுவரப்பட்ட …

Read More »

தேசியத்தைக் கெடுக்கும் சாதீயம்

அலசுவாரம் – 97 உள்ளுராட்சித் தேர்தல்கள் முடிந்துவிட்டன.  வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.  ஆனாலும் தீவுப்பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் மக்கள் கணிசமான அளவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பான ஆளும் தரப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.  அவர்கள் தீவுப்பகுதிகளில் வெற்றியடைந் திருப்பதோடு மட்டுமல்லாமல் வடபகுதியின் கணிசமான உள்ள+ராட்சிச் சபைகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 20 வீதத்த்திற்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளார்கள்.  அதற்கும் மேலாய் தெற்கில் அனைத்துச் சபைகளையும் ஆளும் தரப்பு …

Read More »

எமக்கான இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு

    அலசுவாரம் – 96 முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான சனல்-4 காணொளி உலகம் முழுவதும் காட்டப்பட்டுவிட்டது.  இந்தியாவிலும் அது காட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதமொன்றில் கலந்துகொண்ட இலங்கை யரசின் இராணுவப் பேச்சாளர், பங்குபற்றிய ஏனையோர் கேட்ட கேள்விகளுக்கு சொதப்பலான பதில்களைக் கூறிக் காரியத்தைக் கெடுத்துவிட்டதாக வேறு விமர்சிக்கப்படுகிறது.  ஆக மொத்தத்தில் இலங்கையரசு நடத்தி யிருக்கும் அராஜகங்களையிட்ட வாதங்களும் பிரதிவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றதேயொழிய, அவ்வராஜகங்களை நடத்திய மனித வர்க்கத்திற்கெதிரான நாகரீகமற்ற …

Read More »