Home / அரசியல் / நாட்டு நடப்புகள்

நாட்டு நடப்புகள்

November, 2016

 • 1 November

  ஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு

  bakucollage

  ஐ எஸ் அமைப்புடன் பங்காண்மை அடிப்படையில் நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவரை ஐ எஸ் அமைப்பினர் மாற்றியதைத் தொடர்ந்து இந்தப் பிளவு உருவாகியுள்ளது. நைஜீரியாவில் தனித்துச் செயற்பட்டு வந்த பொக்கோ ஹரம் அமைப்பு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்பட்டு வந்த ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புடன் இணைந்து கொண்டது. ஐ …

July, 2016

 • 7 July

  அவர்கள் உயிரோடு உள்ளனரா ?

  mullivaikal

  இது ஆரம்பிக்கப்பட்டுள்ள பரப்புரைப் போராட்டத்தின் தலைப்பு. அது மக்களிடம் சரியாக போய் சேரவேண்டும் என்று, அப்போராட்டத்திற்கான விளக்கமும் பின்வருமாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டு போரின் இறுதியில் 18000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள் அல்லது சிறிலங்கா அரசிடம் தம்மை விசாரணைக்கு இணங்கி ஒப்படைத்தார்கள். அவர்களின் கதிஎன்னவென்று இதுவரை யாரும் அறியவில்லை. சிறிலங்கா அரசின் தகவல்களின் அடிப்படையில் 146.679 பேரின் கதி என்ன வென்றுஇன்னமும் தகவல் இல்லை என மன்னார் ஆயர்வணக்கத்துக்குரிய …

March, 2016

 • 10 March

  காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா ?

  kanamal-po

  போர் நடந்துகொண்டிருந்த காலத்திலும், குறிப்பாக அதன் இறுதிக்கட்டத்திலும், பெருமளவிலான தமிழர்கள் காணாமற்போனார்கள் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். இவர்களைப்பற்றிய சரியான புள்ளவிபரங்களை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும். அவர்களது உறவினர்கள் நண்பர்கள் மூலம்விபரங்கள் வெளிவந்தன. இவர்களது நிலையினை அறிந்துகொள்ள முடியாத நிலையிலும் அவர்களைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை அவர்களது அன்புக்குரியவர்களிடம் இன்றுவரை இருந்து வருகிறது. இங்கு காணாமற் போனவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் எவ்வாறு காணமற்போனார்கள் என்பது பற்றிய விபரம் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால்காணாமற்போகச் …

January, 2016

 • 14 January

  குறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்

  07lanka.xlarge1

  மழை நின்றாலும், தூறல் நின்றபாடில்லை என்று எம்மில் சிலர், தாயகநிலைபற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள். புதிதாக போட்ட றோடும், சொகுசு வண்டியும், தங்குமிடங்களில் நீச்சல் தடாகங்களும், தமிழ் பாராளமன்ற உறுப்பினரின் புதியநல்லாட்சிக்கான ஏகோபித்த ஆதரவும், உங்களை மழைநின்று போனதாகவும்,அங்காங்கே துÖறல்கள் மட்டும் தான் இருப்பதாக நினைக்கவைத்திருக்கும். ஆனால் எதுவுமே மாறவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை. வெளிநாடுகளின் பொருளாதாரமுதலீட்டு அபிலாசைகளை, முதலில் திருப்திப்படுத்துவதற்காக செய்யவேண்டியதுகளை என்னமோ செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவை தமிழரின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதற்காகச் …

 • 12 January

  தீராத காயங்களும் மாறாத வடுக்களும்

  Thamby-14

  வாழ்தல் இல்லை. ஏனெனில் வாழ்வுக்கான சுகந்திரம் இல்லை. எங்கு பார்த்தாலும் இராணுவம், இராணுவமுகாம் அகற்றப்பட்ட இடங்களில் எல்லாம் சிவில் உடையில் இராணுவ உளவாளிகள் என, மக்கள் நமக்கேன் வம்பு என ஓட்டுக்குள் முடங்கியிருக்கும் ஆமைபோல, வாழ்க்கையை செலுத்துகிறார்கள். வெளிநாட்டுக்கு தெரியும் அளவிற்கு உங்கள் பெயர் அடிபட்டால், உங்களை அவ்வளவாக ஒன்றும்செய்யமாட்டார்கள், செய்தால் வெளிநாடுகளுக்கு தெரியவந்து பிரச்சனையாகப்போய்விடும் என்று. சாதாரண மக்களின் பாடு, அதுவும்வாழ்க்கை வசதியில்லாவிட்டால் அவ்வளவுதான். அவர்களுக்கு ஒன்று நடந்தால் …

December, 2015

 • 8 December

  மிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்

  Wigneswaran

  மிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய இன்னொரு சொல் பயங்கரவாதிகள். யாரைப் பயங்கரவாதிகள் என்ற வகைக்குள் அடக்குவது என்பதற்கு தெளிவான வரவிலக்கணம் எதுவும் இல்லாவிடினும் பயங்கரவாதச் செயலகள் எனச் சில வன்முறை நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். அதே பயங்கரவாதச் செயல்களைப்புரியும் அரசாங்கங்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது அதன்வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தது. பெரும்பாலும் வன்முறை தழுவிய அரசற்ற தரப்புகளைமட்டுமே …

October, 2015

 • 1 October

  தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் போராட்டத்தில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்களா ?

  tamils

  ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியில் வெவ்வேறுவகையான கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இவ் அறிக்கை சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்தமையினை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர். இதேவேளை கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் ஆணையாளரின் அறிக்கையின் நம்பகத்தன்மையும் நன்மதிப்பும் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையினை நிராகரித்தமையிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொள்வுதற்கு ஒரு எடுகோள் …

 • 1 October

  கட்சிகளைக் கடந்து பிரச்சினைகளில் மையம் கொள்ளும் ஈழத்தமிழர் தேசிய அரசியல்

  Rajavarothayam Sampanthan

  ஈழத் தமிழ் மக்களின் தேசிய அரசியல், கட்சிகளில் மையம் கொள்ளாது பிரச்சினைகளில்மையம் கொள்ளும் போக்கிலேயே எதிர் காலத்தில் வளர்ச்சியடையும் என்பதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. இது தமிழ் மக்களின் தேசிய அரசியலை ஆரோக்கியமான வழிமுறையில் வளர்த்துச் செல்வதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வாக்களித்து அமோக வெற்றியினை வழங்கியிருந்தனர். “எமது வாக்குகள் மூலம் எமது சார்பில் இயங்கும் உரித்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கி …

 • 1 October

  அமெரிக்காவின் விமான மேலாதிக்கம் தொடருமா?

  f-35_SU_T-50

  வாஷிங்டனில் நடந்த வான் மற்றும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்குமான அமெரிக்க வான் படைத் தளபதி ஜெனரல் பிராங் கொரேங் இரசியா அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான வான்வலு இடைவெளியை தனது புதிய தரையில் இருந்து வானை நோக்கிச் செலுத்தும் ஏவுகணை முறைமை மூலம் குறைத்து விட்டது என்றார். நீண்ட காலமாக உலக வான் பரப்பில் தன்னிகரில்லாமல் இருந்த அமெரிக்காவிற்க்கு இரசியாவும் சீனாவும் பெரும் சவால் விடக்கூடிய வகையில் …

December, 2014

 • 8 December

  மாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை

  lathan

  ச.ச.முத்து 2008 மாவீரர் நாளுக்கு பின்பாக இப்படியான ஒருஉரை மிக அரிதாகவே கேட்கமுடிகின்ற சூழலில் சுவிற்சலாந்தில் வாழும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்கள் ஆற்றி உரை பற்றிய ஒரு சிறு பகுப்பை இதனூடுசெய்ய முனைகிறது இந்த பொழிப்புரை. வெறும் உணர்ச்சிகர உரைகளும், திருக்குறள் மேற்கோள்களும் நிறைந்துவிட்ட மாவீரர்நாள் உரைகளுள் அடுத்த போராட்டத்துக்கான பயணக்குறிப்பு சம்பந்தமான ஒரு உரையாகவே லதனின் உரையை பார்க்கலாம். என்ன இருக்கப்போகிறது. வீரமுடன் …