Thursday , January 23 2020
Home / அரசியல் / விடுப்பு

விடுப்பு

விடுப்பு

April, 2014

 • 28 April

  தென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்

  ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் வெயில் காலம் தொடங்கி விட்டால் களியாட்டநிகழ்ச்சிகளுக்கு குறைவிராது. வார இறுதிநாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். தென்னிந்தியாவிலிருந்து சினிமாக்கலைஞர்களை அழைத்துவந்து இங்குள்ளவர்களை மகிழ்விப்பார்கள். இங்கு நிகழ்ச்சி நடத்த வருபவர்களை முன்பு சின்ன மேளக்காரர், பெரிய மேளக்காரர் என்று வகைப் படுத்துவதுபோல் தரப்படுத்தப்பட்டாலும் எல்லோருமே கோடம்பாக்கத்தை அண்டியவர்களாகவே இருப்பார்கள். தென்னிந்திய சினிமாக்காரர் கலந்து கொள்ளும் பெரும் நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்ததும் கூடவே இன்னொரு அறிவுப்பும் வரும். …

July, 2013

 • 9 July

  குடும்பத்திற்கு ஒன்றா ? குடும்பத்தில் ஆளுக்கொன்றா ??

  எங்களின் சமூகத்திற்கு, மற்றைய இடம் பெயர்ந்த சமூகங்களைச்சார்ந்தவர்கள் போன்று,எமது இங்குள்ள சமூகத்திற்கோ, அல்லது தாய்நாட்டில் சொல்லொண்ணா அடங்குமுறைக்குள் புழுப்போல வாழும் எங்களின் சமூகத்திற்கோ உதவவேண்டும் என, ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ஆளுக்கொரு நிறுவனமோ, உதவி நிறுவனமோ, கோயிலோ, பள்ளிக்கூடமோ என்று பலவிதமான சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டு, அதிலேயே அவர்களுக்கென தனியாக இருக்கும் நேரத்தில் (Me-Time)) பெரும் பகுதியையோ அல்லது முழுநேரத்தையுமோ இதற்கெனச் செலவு செய்கிறார்கள். முன்பு …

April, 2013

 • 19 April

  இலக்கியச் சந்திப்பா? வீணர்களின் சந்திப்பா ?

  இலக்கியச் சந்திப்பா?  வீணர்களின் சந்திப்பா ? நிவேதா உதயராயன் லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் எப்ரல் 6,7 ம் திகதிகளில் ‘40வது இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவது ‘இலக்கியச் சந்திப்பு’ யேர்மனியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் அது இலக்கியம் பற்றியதாக இல்லாமல் வெறும் புலிஎதிர்ப்பாளர் சந்திப்பாகவும், மாற்று இயக்கங்களின் சண்டைக் களமாகவும் இருந்தபடியால் தொடர்ந்து அங்கு செல்வதில் பயனில்லை என எண்ணி போகாமலே விட்டுவிட்டேன். …

April, 2012

 • 22 April

  கோழியும் குஞ்சுகளும்…

  கோழியும் குஞ்சுகளும்… (ஒரு பேப்பருக்காக சுகி) நாடு விட்டு நாடு வந்து நாம் படுகிறபாடு கொஞ்ச நஞ்சமில்லை என்று நாம் எல்லோருமே அலுத்துக் கொண்டாலும், இயல்பாகவே நாட்டில் ஏறக்குறைய எல்லா விடையங்களுமே ஒரு சின்ன போராட்டமாகவோ, போட்டியாகவோ அல்லது எமது பங்கை நாம் எடுத்து சேமித்து வைக்காவிட்டால், பிறகு வந்து எடுக்க இருக்கமாட்டாது என்ற நிலைமைக்குள் வளர்ந்ததால், ஒரு விழிப்புணர்வும், உசார்தன்மையும் அத்தோடு சின்ன வயதில்; இருந்தே நீதிக்கதைகளையும், நல்வழி, …

 • 8 April

  ஐபோனில் மன்னர் மகிந்தரும் மனிதவுரிமை அமைச்சர் சமரசிங்கவும்

  சதா [ ஒரு பேப்பருக்காக ] மகிந்த: ஹலோ சமரசிங்க. ஒண்ணை நம்பி ஐ.நா.வுக்கு அனுப்பினது என்னோட முட்டாள்தனம்தானே. சொளை சொளையாய் சல்லியும் கொடுத்து எழுபது ஆக்களையும் கூட்டி கொடுத்து குண்டிலே எனக்கு நானே ஆப்பு சொருகினதுதானே. பீரிசு சொன்னது ஒண்ணை நம்பினா எனக்கு ஆப்புத் தான் எண்டு நான்தான் அவரை பேசி அடக்கிப்போட்டுது. சமரே: மாத்தயா நான் எல்லா நாட்டுக்காரன்களிட்டையும் எங்கட நெலமையை எடுத்து சொன்னது. தாமரா நோனா கூட …

September, 2011

 • 15 September

  Mouseஐத் தொடுவானேன், கவலைப்படுவானேன்……

  நவீன தொடர்பாடல், உலக சுற்றளவை உள்ளங்கைக்குள் அடக்குவதுபோல வந்துவிட்து. அவுஸ்ரேலியாவில் உள்ள பேத்திக்கு குழந்தை பிறந்து 5 நிமிடங்களில்; பின்லாந்தில் உள்ள பாட்டிக்கு, கைத்தொலைபேசியில் படம் எடுத்து முகநூலில் (Facebook) இல் தரவேற்றம் செய்து அனுப்புவதோடு, அவவோடு கதைக்கக்கூடியதாகவும் உள்ளது. நாம் இல்லாநாடு இல்லை, ஆனாலும் நமக்கென ஒருநாடு இல்லை என்று (பரதேசிகள் போல) பரந்திருக்கும் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கும், எமது ஒன்றுவிட்ட சகோதரத்தின் பிள்ளைகளையும், அவர்களின் …

 • 11 September

  ‘குட்பாய்’ லண்டன்

  ‘குட்பாய்’ லண்டன் கலை மா(மா)மணியின் பேட்டி நாங்கள் இன்று பேட்டி காண இருப்பது குட்பாய் லண்டன் நிகழ்சியின் ஒருங்கணைப்பாளர் கலைமாமணி, கலைக்குயில் கலைக்காக்கா கலைக்கோழி கலைக்குருவி ஸ்நேக் பாபு அவர்களை புலம் பெயர்ந்த மண்ணில் நீங்கள் செய்து வரும் கலைச்சேவைக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் செல்வோம். வணக்கம் க………… முதலாவதாக உங்களிடம் ஒரு கேள்வி ஸ்நேக் பாபு என்பது உங்கள் சொந்தப் பெயரா?? அல்லது வடைகைக்கு வாங்கிய …