Home / அரசியல் (page 10)

அரசியல்

அரசியல்

அமெரிக்கத் தீர்மானமும் அதையிட்டு மோதிக்கொள்ளும் தமிழர்களும்.

இன்னும் ஐந்து தினங்களில் நிறைவுக்கு வரவுள்ள ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடர் இலங்கைத்தீவுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சுவாரசியமானதாக அமைந்துள்ளதுபோல் தெரிகிறது. ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களும் தமது கவனத்தைஜெனிவாவில் குவித்திருக்கின்றன. தாயகத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அதன் மாகாணசபை உறுப்பினர்கள், சட்டவாளர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நடைப்பயணம் செய்பவர்கள், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் என ஜெனிவாவிற்கு பலரும் சென்று திரும்புகிறார்கள். பலருக்கு ஜெனிவா …

Read More »

உக்ரேனின் கிறிமியாவின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலும்

விளக்கேந்திய சீமாட்டி எனப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புதிய தாதி முறைமையை உருவாக்கியவர். உருவாக்குதல்களும் கண்டு பிடிப்புகளும் தேவைகள் விஞ்சி நிற்கும் போது உருவாகும். தாதி முறைமையை உருவாக்க வேண்டிய தேவை கிறிமியாவை இரசியாவிடமிருந்து பறிக்கும் போர் 1853-ம்ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை நடந்தபோது ஏற்பட்டது. இதில் போர்வீரர்கள் காயப்படுவதும் இறப்பதும் அதிகமாக இருந்தது. கிறிமியப் போர் முனையில் பணியாற்றியவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இந்தப்போரில் இரசியா பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி …

Read More »

மேற்குலகின் எதிர்பார்ப்புக்களும், தமிழர்களின் ஏமாற்றமும்

ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத் தொடரில் அமெரிக்கா, பிரித்தானியாஆகிய இருநாடுகளும் கூட்டாகக் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் வரைபு ஒன்றின் நகல் இவ்வாரம் கசியவிடப்பட்டது. இத்தீர்மான வரைபின் பங்காளிகளாக மொன்ரனீக்ரோ, மசடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகளும் உள்ளதாக இவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது பெரும்பாலும் முன்னைய இருநாடுகளின் கூட்டுத் தீர்மானமாக அமைந்திருக்கிறது என உறுதியாகக் கூறமுடியும். கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் இத்தீர்மானம் கொண்டுவரப்படும்போது இவ்வரைபில் காணப்படும் வார்த்தைப் பிரயோகங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டலாம். …

Read More »

லண்டனில் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கடந்த அறுபத்தாறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், நீர்ப்பாசனஅபிவிருந்தித்திடடங்கள் என்ற போர்வையிலும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. போரின் முடிவிற்குப்பின்னர், இராணுவ முகாம்களின் விரிவாக்கம், இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களை அமைத்தல் எனமுன்னெப்பொழுதிலும் இல்லாதளவு நிலப்பறிப்பு நடாத்தப்பட்டு வருகிறது. உலகின் மற்றைய நாடுகளில் நடைபெறும் நிலப்பறிப்புடன் இணைத்து இவ்விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்தில் கொண்டுவரும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர்களுக்கான …

Read More »

சிறிலங்கா அரசின் இரட்டை முகம்

’66ஆவது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தி, மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு, எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்.’ இவைசிறிலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் மகிந்தஇராஜபக்ச ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டவை. இவ்வுரையின் இன்னொரிடத்தில் புவெளிநாட்டிலிருந்து வருகின்றவர்கள் மனித உரிமை,ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திக்கொண்டே நாட்டுக்குள் உள் நுழைகின்றனர்.பீபீ எனஅவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, இலங்த் …

Read More »

ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம்

ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம் – பரா பிரபா ஒருபேப்பர் – இதழ் 207 இல் `சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்பீ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவே இப்பத்தி அமைகிறது. சில தமிழர்அமைப்புக்களும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களும் தென்னாபிரிக்காவின் `உண்மையைக் கண்டறிதலும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுபீ (TRC – Truth and Reconciliation Commission) தொடர்பாக தமிழ் மக்களை …

Read More »

பூர்வீக நிலமெங்கும் மனிதப்புதைகுழிகள் !

பூர்வீக நிலமெங்கும் மனிதப்புதைகுழிகள் ! – இதயச்சந்திரன் மன்னார் மாந்தைப் பகுதியில் மனிதப்புதைகுழிகள் என்கிற செய்தி, ஊடகங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. தோண்டுதல் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பித்தபோது சிறுமி ஒருவரின் உடல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், நீதிவிசாரணைக்கு அகப்படாமல் புதைக்கப்பட்டால், அதனை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று சர்வதேச நீதி நியமங்கள் கூறும்.இது குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக திட்டமிட்டவகையில் செய்யப்பட்டால், இனவழிப்பு என்று அர்த்தப்படும். மாவிலாற்றில் …

Read More »

சர்வதேச நகர்வுகளுயும் : அதையொட்டிய மிகைப்படுத்தல்களும்

வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் இம்முறையும் இலங்கைத்தீவு தொடர்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் பற்றிய பரபரப்புச் செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அடுத்து வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் உண்மை நிலையினைத் தெளிவுபடுத்துவதே இப்பத்தியின் நோக்கமாக அமைகிறது. அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம்பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லையாயினும், இது தொடர்பாக அமெரிக்க …

Read More »

குழறுபடியே உன் மறுபெயர்தான் கூட்டமைப்போ

சிறிலங்கா பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை ஒரு விடுதலைப்போராட்ட வீரன் எனக்குறிப்பிட்டார். அடுத்தடுத்த தினங்களில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சிறிதரனின் கருத்தை மறுதலித்தனர். சிறிதரன் அவர்களது கருத்து தமது கட்சியின் கருத்து அல்ல என சம்பந்தனும், அவர் தீவிரவாதக் கருத்துடையவர் என சுமந்திரனும் கூறியிருந்தனர். ஆளுக்காள் முரண்பட்ட கருத்துகளைத் தெரவிப்பது …

Read More »

சீனக் கடலில் உருவாகும் ஈழ மக்களுக்கான ஆபத்து

தற்போது உலகத்திலேயே பெரும் போர் உருவாகும் ஆபத்து உள்ள இடங்களாக தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. பெரும் ஆதிக்கப் போட்டிக்கான எல்லா வியூகங்களும் அங்கு வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே பெரும் படைபலப் போட்டியும் படைவலுக் குவிப்பும் இப்போது ஆசியாவிலேயே நடக்கின்றது. ஈழ மக்களைப் பொறுத்த வரை தம்மைப்பாதிக்கக் கூடிய உலக அரசியல் என்றவுடன்திருக்கோணமலையைத்தான் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். ஆனால்தொழில்நுட்ப வளர்ச்சியும் மிக நீண்ட காலம்தரையில் தரிக்காமல் …

Read More »