Home / அரசியல் (page 4)

அரசியல்

அரசியல்

சமையலறைக் கத்திகளுடன் பலஸ்த்தீனியர்களின் எழுச்சி

S

ஜெருசலத்தில் இஸ்லாமியர்களால் மேதகு சரணாலயம் அதாவது Noble Sanctury எனவும் இஸ்ரேலியர்களால் Temple Mount எனவும் அழைக்கப்படும் புராதன புனித நிலையத்தில் வழிபாடு செய்வது தொடர்பாக இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்த்தீனியர்களுக்கும் இடையில் பெரும் மோதல் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. பலஸ்த்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையில் இருக்கும் Nablus உள்ள யூத இனத்தின் நிறுவனரானஜேக்கப்பின் சமாதிக்கு சில பலஸ்த்தீனியர்களால் தீயிடப்பட்டது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16-ம் திகதி …

Read More »

ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கற்ரலோனியர்கள்

Catalonia

இங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கற்ரலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும்பிரிந்து செல்ல வேண்டும் என்ற மனப்பாங்குடன் அப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள். இதில்அண்மைக்காலங்களாக செய்திகளில் கற்லோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கற்ரலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு …

Read More »

மாற்று அரசியல் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

oru_gopi

நடந்து முடிந்த சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடைந்த தோல்வி, ஈழத்தமிழரின் அரசியலில் பண்புமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதப்படவேண்டும். மாறாக இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாக வியாக்கியானப்படுத்தும் முயற்சிகள் இவ்விடயத்தில் தமது நலன்களைப் பேணும் தரப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. வெளித்தரப்புகளைப் பொறுத்தவரை, ஒரு தேர்தலில் மக்கள் யாரைத்தெரிவு செய்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளும் நடுவ நிலையையே அவை கொண்டிருக்க …

Read More »

முதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்

tamilini

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிரணியின் அரசியற் துறைப் பொறுப்பாளராயிருந்த தமிழினியும் மற்றுமோர் விடுதலைப் போராளியான தாருஜாவும் மிக இளம் வயதில் மரணத்தைத் தழுவிக்கொண்டது மிகவும் வேதனையளிப்பதாகவுள்ளது. அவர்கள் பல துன்பங்களைத் தாங்கி அந்த விழுப்புண்களாற்தான் இவ்வாறு இறந்து போனார்கள் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் அவர்கள் சரணடைந்தபோது செய்யப்பட்ட சித்திரவதைகளே அவர்களின் இளவயது மரணத்திற்கான காரணம் என்பதை இலகுவில் மறுத்துவிட முடியாது. இருப்பினும் அதற்கான போதிய …

Read More »

ஈழத்தமிழர் தேசத்தில் சமூக இயக்கங்கள் வளராதது ஏன் ?

civil

ஈழத் தமிழர் தேசத்தின் சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்ச்சியடையயாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ் வளர்ச்சிக்குரிய உள்ளார்ந்த பண்புகளை ஈழத் தமிழர் தேசம் போதியளவு கொண்டிருக்கவில்லையா? சிவில் சமூகத்தை விட அரசியற் சமூகம் பலமானதாகவும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கிறதா? சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்வதற்கு ஜனநாயகச் சூழல் அவசியமானது. இங்கு ஜனநாயகச் சூழல்என்பது தேர்தல் …

Read More »

அமெரிக்கத் தீர்மானமும் புவிசார் அரசியலும்

obama_mythiripala

கடந்தவாரம் ஜ.நா. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்காவின் இணக்கத்துடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருவதனை அவதானிக்க முடிகிறது. முன்னர்சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழ் அமைப்புகள் கூட இத்தீர்மானம் `ஒரு வரலாற்று நிகழ்வு’, `திருப்பு முனையானசம்பவம்’, `முதற்கட்டம் ? எனப் புகழ்வதை தமிழ்த்தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. மறுபுறத்தில், இந்தத் தீர்மானத்தையிட்டு ஏமாற்றமடைந்துள்ளவர்கள் கூட தமது கருத்துகளை பொதுத்தளங்களில் வெளியிடுவதனை தவிர்த்து வருகின்றனர். அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தினதும் …

Read More »

ஜெனிவாவிற்குப் போன நம்மாளுகள்

un_tna

ஜெனிவாவிற்குப் போன நம்மாளுகள் ஷெரின் நதானியல் வருடாவருடம் இரண்டு அல்லது மூன்றுதடவை சுவிற்சலாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் பணியகத்திற்கு சென்றுவருவது இப்போது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு திருவிழாக்காலத்து உற்சாகத்துடன் அங்கு சென்று வருபவர்கள் எதனைச் சாதிக்கிறார்கள் என்பதையிட்டு அங்கு போகாத தமிழர்களும் அறிந்து கொள்வதற்காக இது எழுதப்படுகிறதே தவிர யாரினதும் பிழைப்பில் மண்ணைப் போடுவது எனது நோக்கமல்ல என்பதனை முதலிலேயே கூறிவிடுகிறேன். தமிழினத்தின் விடிவு ஜெனீவாவில்தான் …

Read More »

நாடாளுமன்றத் தேர்தலின் பின் : ஏமாறப் போகிறோமா ? தற்காக்கப்போகிறோமா ?

Sri Lanka Election   EJX108

இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துகள், வாதங்கள், பரப்புரைகளைக் கடந்து தேர்தலின் பின் நடைபெறக்கூடிய விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பின்னர் நடைபெறக்கூடியவற்றையும் முன்னுணர்ந்து வாக்களிக்க எமது மக்கள் தவறுவார்களாயின் அதற்கான விலையினை ஈழத் தமிழ் மக்கள் ஒரு சமூகமாக அடுத்த ஐந்து வருடங்களில் செலுத்த வேண்டி வரும் என்பதனையும் நாம் …

Read More »

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜெரமி கோர்பின் ?

01_22031726_d89d95_2387491a

பிரித்தானிய அரசியலில் மாத்திரமல்ல, சர்வதேச மட்டத்திலும் கவனத்தைப் பெறுகிற ஒரு நகர்வாக திரு. ஜெரமி கோர்பினின் தெரிவு அமைந்திருக்கிறது. செப்ரெம்பர் 12ம் திகதி தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிற கோர்பினின் வெற்றியை தனியொருவரின் வெற்றியாகக் கருதமுடியாது. மாறாக, அவரது தெரிவு பிரித்தானியாவில் அரசியற்கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்பாகவே நோக்கப்படுவதனால், ஜரோப்பாவிலுள்ள மற்றைய நாடுகளின் அரசியற் தலைமைகளாலும் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இருப்பினும் அவரது தலைமைத்துவம் எத்தனை …

Read More »

தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் போராட்டத்தில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்களா ?

tamils

ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியில் வெவ்வேறுவகையான கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இவ் அறிக்கை சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்தமையினை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர். இதேவேளை கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் ஆணையாளரின் அறிக்கையின் நம்பகத்தன்மையும் நன்மதிப்பும் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையினை நிராகரித்தமையிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொள்வுதற்கு ஒரு எடுகோள் …

Read More »