Home / அரசியல் (page 5)

அரசியல்

அரசியல்

சர்வதேச நீதி சறுக்குமா ?

அமெரிக்க தூதுவரின் வசிப்பிடத்தில் சுமணசிறி தேரோ , தூதர் அதுல் கிஷப்,  சம்பந்தன்

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நடந்த ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனிதவுரிமைச் சபையின்ஆணையாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை இம்மாதம் வெளியிடவுள்ளது. அந்த வகையில் செப்ரெம்பர் 14ம் திகதி ஆரம்பமாகும் ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் முப்பதாவது கூட்டத்தொடர் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனத்திற்குரிய ஒரு நிகழ்வாகஅமையவுள்ளது. ஆறுமாத காலம் தாமதித்து வெளியிடப்படும் இவ்வறிக்கை பற்றியும், விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் …

Read More »

கட்சிகளைக் கடந்து பிரச்சினைகளில் மையம் கொள்ளும் ஈழத்தமிழர் தேசிய அரசியல்

Rajavarothayam Sampanthan

ஈழத் தமிழ் மக்களின் தேசிய அரசியல், கட்சிகளில் மையம் கொள்ளாது பிரச்சினைகளில்மையம் கொள்ளும் போக்கிலேயே எதிர் காலத்தில் வளர்ச்சியடையும் என்பதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. இது தமிழ் மக்களின் தேசிய அரசியலை ஆரோக்கியமான வழிமுறையில் வளர்த்துச் செல்வதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வாக்களித்து அமோக வெற்றியினை வழங்கியிருந்தனர். “எமது வாக்குகள் மூலம் எமது சார்பில் இயங்கும் உரித்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கி …

Read More »

அமெரிக்காவின் விமான மேலாதிக்கம் தொடருமா?

f-35_SU_T-50

வாஷிங்டனில் நடந்த வான் மற்றும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்குமான அமெரிக்க வான் படைத் தளபதி ஜெனரல் பிராங் கொரேங் இரசியா அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான வான்வலு இடைவெளியை தனது புதிய தரையில் இருந்து வானை நோக்கிச் செலுத்தும் ஏவுகணை முறைமை மூலம் குறைத்து விட்டது என்றார். நீண்ட காலமாக உலக வான் பரப்பில் தன்னிகரில்லாமல் இருந்த அமெரிக்காவிற்க்கு இரசியாவும் சீனாவும் பெரும் சவால் விடக்கூடிய வகையில் …

Read More »

கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டிக் தோல்வியா ?

gajendra-kumar-620x413-720x480

நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த இதழில் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம்புரளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது துணை புரியும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைவெற்றி கொள்ளும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. இதனை கஜேந்திரகுமார் …

Read More »

மேற்கின் ஒழுங்கிற்குள் சிறிலங்கா : பத்து வருட வேலைத்திட்டம் நிறைவுக்கு வருகிறது

ranil-us

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று இன்று இரணில் விக்கிரமசிங்க பிரதம அமைச்சர் பதவியை ஏற்றிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி இராஜபக்சவினால் ஆட்சியமைக்க முடியாமற் போனமை விருப்பு வாக்களிப்பில் முன்னாள் அமைச்சர்கள் தோல்வியடைந்தமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தோல்வி எனத் தேர்தல்முடிவுகள் பற்றிய பல்வேறு விடயங்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக அலசப்படுகின்றன. 2005ம் ஆண்டு நொவெம்பர் பதினேழாம் திகதி நடைபெற்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த இரணில் …

Read More »

ரணிலின் கிராம ராஜ்யத்தில் கோழி மேய்க்கப்போகிறதா கூட்டமைப்பு

Ranil-And-TNA

தேர்தல் சந்தடியில் இரண்டு சில்லு ஒரு சைக்கிளா? ஒரே வீடு தனித்தனி அறையா?என தமிழர்கள் அதிகாரப் பகிர்வு குறித்த கனவில் தேர்தல் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருக்க, அனைத்தையும் தவிடுபொடியாக்கும் தனது நரித்திட்டத்தை திருவாய் மலர்ந்தருளியிருந்தார் பிரதமர் ரணில் அவர்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த சமஷ்டி தீர்வு, சுயநிர்ணய உரிமை என்பன கடைசியில் அவரது வாயை திறந்து விட்டிருந்தது. விழுந்தாலும் தன் மீசையில் இன்னமும் மண் பிரளவில்லை என்கின்ற …

Read More »

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை

IATAJ_4

இந்நிகழ்ச்சி ஜுலை 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு லண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் ( Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD) இல் நடைபெற்றது. தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாறு, தீர்வுக் கோட்பாடுகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் உட்பட பல விடயங்கள் பற்றி தனது உரையில் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வைக்காண தமிழ் மக்கள் …

Read More »

ஐ.நா. விசாரணை அறிக்கையின் தாமதம் வெளிப்படுத்தும் செய்தி

Mangala-Kerry

கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் 25வது கூட்டத் தொடரில், இலங்கைத்தீவில் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்பற்றி விசாரிக்க மனிதவுரிமைச்சபை ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் எனவும் அக்குழு தனது அறிக்கையை 2015 மார்ச் மாதத்தில் நடைபெறும் 28வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவந்தமை  தெரிந்ததே.  ஆனால், குறித்த காலக்கெடுவிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை  தாமதப்படுத்தி …

Read More »

ஒரு இனப் படுகொலையாளன் தண்டிக்கபட்டிருக்கிறான்

mahinda1

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த இராஜபக்ச தோல்வியைச் சந்தித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடகாலத்திற்கு முன்னரே தேர்தலைச் சந்திக்க அவர் முன்வந்த போது அவரது வெற்றி ஒரளவு உறுதி செய்யப்பட்டதாகவே தென்பட்டது. அதிகம் அறியப்படாதவராக இருந்த அவரது கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவினா பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டமை மாத்திரம் இன்றைய முடிவுகளிற்கு காரணமாக அமையவில்லை. இவ்விடயத்தில், சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் வேண்டி நின்ற வெளிச்சக்திகளின் பங்கினையும் நாம் குறைத்து மதிப்பிட …

Read More »

ஆட்சி மாற்றமும், மேற்குலகமும்

Kerry-1024x681

நேற்று (ஜனவரி 8) இரவு அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலியில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது தொடர்பான கருத்தாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது, பத்து முப்பது மணியளவில் எரிக் சொல்ஹெய்ம் அனுப்பிய ருவிற்றர் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அக்குறுஞ் செய்தி இவ்வாறிருந்தது “Going to bed with a clear lead for opposition in ‪#‎SriLanka‬ postal votes. The country may write history tomorrow!”. (தபால் மூலமான …

Read More »