Home / இந்திய அரசியல்

இந்திய அரசியல்

May, 2016

 • 9 May

  கழகங்களின் கட்டமைப்பும் சீமானுக்கு எதிரான சதிகளும்

  seeman

  சீமானின் நாம் தமிழர்கட்சிக்கு பெரும் தடையாக இருப்பவை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் கட்டமைப்பும் அவருக்கு எதிராக பல தரப்பில் இருந்தும் செய்யப்படும் சதிகளும் ஆகும். இந்தப் பெரும்தடைகளை தாண்டி தேர்தலில் காத்திரமான வெற்றி பெறுவது மட்டுமல்ல சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு என ஒரு வாக்கு வங்கி உண்டுஎன்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் சீமானுக்கு உண்டு. வலிமை மிக்க ஊடகங்கள் பக்கத் துணையாக இல்லாமல் …

 • 9 May

  தமிழ்நாட்டுத் தேர்தலும் மதுபானமும் பார்ப்பனியமும்

  படம் : கார்ட்டூனிஸ்ட் பாலா

  தமிழ்நாடு சட்டசபைக்காக நடந்த கடந்தசில தேர்தல்களில் இலவசங்கள் வழங்குவதற்கான வாக்குறுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. இம்முறைத் தேர்தலில் மது விலக்கு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுபான விற்பனைக்குஎதிராக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடக்கின்றன. 1937-ம் ஆண்டு அப்போதைய காங்கிரசுக் கட்சி முதலமைச்சர் சி இராஜகோபாலாச்சாரி மதுவிலக்கை தமிழ்நாட்டில் அறிமுகம்செய்தார். மது குடிப்பதற்கு அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். பின்னர் 1971-ம்ஆண்டு கலைஞர் கருணாநிதியின் …

April, 2016

 • 13 April

  தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் ?

  TN General Election 2016

  கலைஞரை, ஜெயலலிதாவை, வைகோவை இன்னும்மற்றும் பிறத்தாரை அவர் இன்னார் என்று தெரிகின்றபக்குவம் வந்துவிட்டது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரிகிறது. என்ன செய்ய மாட்டார்கள் என்றும்தெரிகிறது. இவர்கள் எவரும் தமிழ் நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. தமிழ் நாட்டு மக்கள் மீது படர்ந்திருக்கின்ற இருள் இப்பொழுது விலகுவதாக இல்லை. அந்த விளக்கத்துடனும், தெரிதலுடனும், புரிதலுடனும், அறிதலுடனும் ஒரு கருத்தை முன் வைக்கின்றேன். தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் …

 • 13 April

  தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்: திராவிடக் கட்சிகளின் முடிவா ?

  tamil-nadu-polls-759

  1966-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஓர் அரசியல்புரட்சி ஏற்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காங்கிரசுக் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணா தலைமையிலான கூட்டணி தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை தமிழ் நாட்டில் அசைக்க முடியாது என்றார் அறிஞர் அண்ணா. அதன் படி திமுகாவும் அதில் இருந்துஎம் ஜி ராமச்சந்திரன் உருவாக்கிய அண்ணா திமுகாவும் தமிழ்நாட்டை 1966இல் …

November, 2015

 • 24 November

  மோடியின் பிரித்தானியப் பயணம் இந்திய ஏழைகளுக்கு உதவுமா ?

  நரேந்திர மோடி

  இந்தியாவின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் மிக அவசியமானதும் அவசரமானதுமாகும். உட்கட்டுமான அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடு ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. இந்திய உட்கட்டுமானங்களில் முதலீடு செய்த பல உள்நாட்டுப் பெரு நிறுவனங்கள் கடன் பளுவில் அவலப்படுகின்றன. சரியான திட்டமிடல் இல்லாமை, சிவப்பு நாடா, ஊழல், நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலுள்ள இழுபறி போன்றவை இந்தியாவின் கட்டுமான வளர்ச்சிக்கு மட்டுமல்ல மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கே தடையாக …

November, 2014

 • 26 November

  இந்தியாவைக் கையாளும் புதிய ‘பெருமாள் அவதாரம்’ வெற்றி பெறுமா?

  india-flag

  ஒடுக்குமுறைக்கு எதிராகப் பெரும்போர் புரிந்த ‘மாவீரம்’ மௌனித்து ஐந்து ஆண்டுகளிற்கு மேலாகிறது. அவ் விதைகள் வீழ்ந்த காரணங்களை மக்கள் நன்கறிவர். இருப்பினும் அக் காரணிகளை பேரினவாதம் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் அரசியல் அதிகாரப்போட்டிக்கு ‘அது’ தேவைப்படுவதை புதிதாக முளைக்கும் உறுமயாக்களும், பலயாக்களும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. தம்புல்லையிலிருந்து மன்னார் வரை, அம்பாறையிலிருந்து தென்னமரவாடிவரை அதன் நச்சுவேர்கள் பரவிப்படர்ந்திருக்கின்றன. இதுவரை வீழ்ந்ததெல்லாம் விதையென்று உரைத்தால், இல்லையில்லை அது ஜனநாயகம் அற்ற விதையென்று வியாக்கியானம் …

 • 13 November

  மும்பையில் மோதும் இந்துத்துவாவும் சிவசேனாவும்

  bjp1

  2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க) முக்கிய பிரச்சனைகளாக அமைந்தவை:- 1. காங்கிரசுக் கட்சி பதவியில்அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் 2. இரு நூற்று ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.கவிற்கு 43உறுப்பினர் மட்டுமே இருப்பது 3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை. …

October, 2014

 • 27 October

  ஜே.ஜே.. சில அரசியல் குறிப்புக்களும் அதிகார மோதலும்

  TN_CM_Jayalalitha

  தேர்தலில் வெல்வதற்கு, வழக்கில் ஜெயிப்பதற்கு என்று நடாத்தப்பட்ட யோகம் தரும்யாகங்கள் ஏராளம். ஆனால் இப்போது இந்தியாவிலுள்ள `சட்டமா முனிவர்கள்’ ஒன்று கூடி யாகம் நடத்தவில்லை. ‘அம்மா’ வை எவ்வாறு வெளியில் கொண்டுவரலாமென்று ஒன்றுகூடிப்பேசிக் கொண்டிருக்கிறார்கள். குன்ஹா எழுதிய தீர்ப்பின் மை காய்ந்துபோகமுன்னர், போயஸ் கார்டனிற்கு `அம்மா’ திரும்பிவர வேண்டுமென்கிற தன்மான அரசியல் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. பலருடைய வாழ்க்கைப் பிரச்சினையும் அதில் உள்ளடங்கியுள்ளது. `அம்மா’ வீழ்த்தப்பட்டாரென்று `ஐயா’வும், அம்மாவின் சிறைவாழ்வு நீடித்தால் …

June, 2014

 • 24 June

  இந்தியாவில் ஆட்சி மாற்றமும் ஈழத்தமிழர்களும்

  india-flag

  இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி பெற்ற மாபெரும் வெற்றி முழு உலகத்தினது கவனத்தையும் அதன்பால் ஈர்த்திருக்கிறது.மோடி என ஒற்றைச் சொல்லால், அதாவதுஅவரது குடும்பப்பெயரால் அழைக்கப்படும் அறுபத்தி மூன்று வயதான நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையில் பாரதீய ஜனதா பெற்ற வெற்றியானது இந்திய சுதந்திரத்திற்கு பின்னரான அறுபத்தியாறு வருடங்களில் கொங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றி எனக்கருதப்படுகிறது. இந்திய நடுவன் அரசாங்கம் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவிடம் சென்றுள்ளமையினால் …

April, 2014

 • 9 April

  ஜெனீவாவில் இந்தியா வாக்காமையினால் இந்தியப் பலவீனம் அம்பலமானது

  விகடனில் பல்துலக்கி, குமுதத்தில் முகம் கழுவி, கல்கியில் விபூதி பூசி, காந்தியினதும் நேருவினதும் படங்களைப்பார்த்து, நாட்களை ஆரம்பித்த ஈழத்தமிழினத்தில் இன்னும் சிலர்தமக்கான விடிவு இந்தியாவில் இருந்து உதயமாகும் என நம்புகின்றனர். நிலாந்தன் என்பவர்புது டில்லி நகர்ந்தால் தான் ஜெனிவா நகரும்என்று எழுதிய மை காயமுன்னர் இந்தியாவின்ஆதரவின்றி இலங்கை தொடர்பான தீர்மானம்ஒன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தியா வாக்களித்த முன்மொழிவு ஒன்றுதோற்கடிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கைத் தீவில் போரின் போது நடந்த மனித …