Home / எழுதுவது என்னவெனில் .. (page 2)

எழுதுவது என்னவெனில் ..

September, 2014

 • 23 September

  விரலுக்கு ஏற்ற வீக்கம்

  VPG72212

  இப்படித் தலைப்பிட்டால் அடிக்கத் தான் வருவார்கள். சொல்ல வேண்டியதை சொல்லித் தான் ஆகவேண்டும். நேற்று தம்பி சயந்தனுடன் (ஆறாவடு) உரையாடியபோது ஈழத்துத் தமிழ் நாவல்களின் போதமை பற்றிய என் ஆதங்கத்தை நான் தெரிவித்தேன். “அஞ்சத் தேவையில்லை, தரமானவை வரும்” என்கின்ற மாதிரிச் சொன்னார், தன்னை நம்பிச் சொன்னாரோ அல்லது தன் போன்ற ஏனைய படைப்பாளிகளை நம்பிச் சொன்னாரோ தெரியவில்லை. “வந்ததால் வலு வலு சந்தோஷம்” என்று மாத்திரம் சொல்லி விடை …

August, 2014

 • 18 August

  செல்லும் வழி இருட்டு

  loyola

  சென்ற முறை எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவும் இதனைக் கொள்ளலாம். ஆயினும் இது தமிழகச் சினிமா, அதன் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்கு னர்கள் சம்பந்தப்பட்டது. இன்னும் சொல்வதானால் அவர்களது தமிழ் இன உணர்வு சம்பந்தப்பட்டது. நேரடியாகவே விசயத்திற்கு வருகின்றேன். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சிலரிடம் ஒரு கருத்து இருக் கின்றது. “எங்களிடம் நிறையப் பணம் இருக்கின்றது, அதே சமயம் தமிழ் உணர்வும் இருக்கின்றது. எங்களுடைய தமிழ் உணர்வைப் பயன்படுத்தி, தமிழ்ச் சினிமா …

 • 9 August

  வெளித்தோலோடும் உள் வண்டோடும்

  புனைவு இலக்கியம் ஒன்றினைத்தவிர எதை எழுதுவதற்கும் எனக்குத் தயக்கம் உண்டு. அவ்வாறு எழுதி வீணே பொழுதை அவமாய்க் கழிக்கிறேன். பொழுதை அவமாய்க் கழிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆயினும், எழுதியே ஆக வேண்டும் எனும் சூழல் இப்பொழுது. இணையத்தளங்களும் முகநூலும் இயங்கத் தொடங்கியதில் உலகம் மிக மிகச் சிறிதாயிற்று. லண்டனில் இருந்து கொண்டு இலங்கையில் இருப்போரின் கருத்தை அறிவதற்கோ கனடாவிலுள்ளோரின் கருத்தை அறிவதற்கோ ஒரு நிமிடம் தானும் தேவைப்படவில்லை. அதற்கு …

November, 2013

 • 25 November

  தாயகம் காத்தோரை தாள் பணிவோம்

  இரவி அருணாசலம் எழுதுவது என்னவெனில் மாவீரர்களை நினைவு கூருகின்ற நாட்கள் நம்மை நெருங்குகின்றன. அதற்குத் துக்கம் காப்பது நம் கடன், `துக்கம் காப்பது என்பது துக்கப்பட்டு அழுது கொண்டே இருப்பது என்ற பொருள் அல்ல. அவர்களது தியாகத்தை, வீரத்தை நெஞ்சு உறுதியை, ஓர்மத்தை நினைவு கூர்ந்த வண்ணம், அந்த நாட்களை கடப்பது என்றே அதனை கருதுகின்றேன். அவ்வாறு நினைவு கூருவது என்பது, துக்கத்துடன் தான் கழியும் என்பது இயல்பு. முதன் …

October, 2013

 • 7 October

  எந்த மண்ணில் இது விளைந்தது

  செப்ரெம்பர் 26ஆம் நாள் திலீபனை நினைவு கொள்ளத்தொடங்கினேன். என் மைந்தர் விலங்கியல் விஞ்ஞானம் படித்தவர்கள், அவர்களிடம் சொன்னேன்.`திலீபன் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் பன்னிரண்டுநாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார் என்று.அவர்கள் அதனை நம்பவில்லை, நம்பவேயில்லை.`தண்ணீர் குடிக்காமல் எவரும் உண்ணாவிரதம் இருக்கமுடியாதுபீ என்று அடித்துச் சொன்னார்கள். எனக்கோ கடும்கோபம் `அப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? என்று கத்தினேன். அது தான் விசயம். எவரினாலும் நம்ப முடியாத உன்னததியாகம் புரிந்தவர் …

July, 2013

 • 11 July

  உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்

  எனது நண்பரும், ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் அவர்களுடன் சமீபத்தில் உரையாடியபோது அவர் தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். “முதலில்அடிப்படையில் நான் ஒரு இடதுசாரி, பிறகு தான் தேசியவாதி” . அவரது எந்தக் கருத்துக்களிலும் நுழைந்து கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால், அவை குறித்த என் மனப்பதிவுகளை இதில் பதிய விரும்புகின்றேன். அது அரசியல் ஆரோக்கியம் கருதியே. முன்னர் ஒருபேப்பரில் எனது இப்பத்தியில் `கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தமிழ்த் தேசிய அடையாளம் தொடர்பான உறுதி …

May, 2013

 • 21 May

  முள்ளிவாய்க்கால் முடிவின் பிறகு….

  நண்பர் கோபி (ஒரு பேப்பர் ஆசிரியர்) ஒரு கருத்து கூறியிருந்தார். “முன்னாள் போராளி என்று எவரையும் குறிப்பிட முடியாது, போராளியானவர் எப்பொழுதும் போராளி, முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் இப்பொழுது போராட்டத்தை விட்டுக் கொடுத்தோ, காட்டிக் கொடுத்தோ செல்பவராக இருந்தால், அவரை முன்னாள்போராளி என்று எப்படி அழைக்க முடியும். போராளி என்ற சொல்லின் அர்த்தம் அதில் இழக்கப்படுகிறதல்லவா, எனவே போராளி என்பவர் எப்பொழுதும் போராளி. அவர் எந்த ஆயுதம் துÖக்குகின்றார் …

February, 2013

 • 5 February

  நாளை மற்றும் ஒரு நாள்

  கண்ணதாசன் ஒரு பாடலில் இவ்வாறு சில வரிகளை வைத்தான். ‘எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் எனக்காக உணவும் உண்ண எப்படி முடியும்? நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு. அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று’ இவ்வரிகளிலுள்ளே மிகமிக எளிய உண்மைகள் தான் அமைகின்றன. எனினும் அவை பேருண்மைகள். நம் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய மகா உண்மைகள். இவ்வரிகளை ஈழத்தமிழர் வாழ்வினுடனும் பொருத்திப் பார்க்கலாம். எமக்காக சர்வதேச சமூகம் …

November, 2012

 • 8 November

  ‘அ’ எழுதுதல்

  தமிழ்த் தேசியம் என்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பதே இம்மாவீரர் மாதத்தில் மாவீரர்களுக்கு நாம் வழங்கும் முதலாவது வணக்கம் என நம்புகின்றேன். மாவீரர்கள் யாபேரும் தமிழ்த்தேசியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் போராளிகளாகி தம்மை ஆகுதியாக வழங்கி மாவீரர்கள் ஆனார்கள் என் பது எனது கருத்து அல்ல. தமிழ்த் தேசியத்தின் புரிதலுடன் போர்க்களத்தில் அவர்கள் புகுந்திருப்பார் எனில் அதன் பரிநாணம் வேறு. ஏனென்றால் தமிழ் தேசியத்தை இலட்சிய நெறியிலிருந்து வழுவாது, கொள்கை பிடிப்பிலிருந்து …

October, 2012

 • 25 October

  அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்

  மிக மிக சமீபத்தில் ஓர் எதிர்வினை ஆற்றும் நோக்கம் கருதி, ‘பாலஸ்தீன கவிதைகள்’ என்ற மொழி பெயர்ப்பு கவிதை நுாலை வாசித்தேன். கவிஞரும் தமிழ்ப் பேராசிரியருமான எம்.ஏ.நுஃமான் அவர்கள் அதனை மொழிபெயர்த்திருந்தார். பலஸ்தீன இஸ்லாமிய மக்கள் படும் துன்ப துயரங்களையும் அவர்களது நாடு காண் விருப்பையும்,  அவர்களது எதிரி மீதான போர் பிரகடனங்களையும் அக்கவிதை கொண்டு இலங்குவதால் அக்கவிதைகள் நுஃமானால்  மொழி பெயர்க்கப்பட்டன போல் தெரிகின்றது ஏனென்றால், ‘காலச்சுவடு’ ஒக்டோபர் …