Home / நிகழ்வுகள் / நடந்த நிகழ்வுகள்

நடந்த நிகழ்வுகள்

May, 2017

 • 18 May

  ஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

  IMG_5202

  ஸ்கொட்லாண்டில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

 • 18 May

  பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

  mullivaaikkal-2018 (1)

  இலங்கையில் தனி தமிழீழம் கோரி போராடி வந்த தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக இன்று 8வது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புலம் பெயர் நாடுகளிலும் ஈழ மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழீழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சாவின் ராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட …

 • 12 May

  IMG_4699

  அன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவு நினைவு வணக்க நிகழ்வானது 29/04/2017 அன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு லேய்ஸ்ட்டர் பிராந்திய பகுதியினரால் முன்னெடுக்கப்பட்டது. வணக்கநிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளி மாவட்ட இணைப்பாளர் திரு நவம் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றலோடு ஆரம்பமானது தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு லேய்ஸ்ட்டர் பிராந்திய பொறுப்பாளர் திரு மனோ அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகை சுடரினை லெப்.பன்னீர் செல்வம் …

March, 2017

 • 20 March

  இலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

  oru (7)

  பிரித்தானியாவில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழி உண்ணாவிரத போராட்டமானது தற்போது எதிர்ப்பு போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னிறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த 26ஆம் திகதி தொடங்கிய உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து 10 டவுனிங் வீதியில் பிரதமர் இல்லத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.

December, 2016

 • 21 December

  பிரித்தானியாவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு

  img_1748-copy

  தமிழீழ தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு Positive Network Center,Mitcham CR4 3JR என்னும் இடத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 6.00 மணிக்கு இடம்பெற்றது. முதலில் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்களால் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. தனது வாழ்க்கையை, தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த பாலா அண்ணாவின் வாழ்க்கைப் பயணத்தையும், தமிழ் மக்களின் விடுதலைக்கான …

 • 16 December

  அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம்!

  bala-annan-3

  நல்லாட்சியின் பெயரில் கபட நாடகமாடி உலகைத் தனது பக்கம் வளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறியும் அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இதற்கான அரசறிவியல் ஆய்வரங்கம் இன்று (14.12.2016) புதன்கிழமை இலண்டன் Rayners Lane பகுதியில் நடைபெற்றது. அரசறிவியலாளர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் முதலாவது அமர்வாக …

 • 11 December

  பிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016

  dsc01143

  லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்சியொன்றை சர்வதேச மனிதவுரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. வடமேற்கு லண்டன் Burnt Oak பகுதியில் அமைந்திருக்கும் St.Alphage திருச்சபை மண்டபத்தில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொணடனர். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மலர் வணக்கத்துடன் …

November, 2016

 • 25 November

  லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வார நிகழ்வுகள்

  img_2251

  தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில் ஒரு பேப்பர் கோபி அண்ணா, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி ஜெகன் , சத்தியசீலன் அண்ணா மற்றும் தமிழ்வாணி …

 • 25 November

  டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு

  img_9857

  டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 19.11.2015 அன்று காலை 11.00 மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வி விபுஷா சிவகுமார் ஏற்றிவைத்தார். அதன்பின்பு அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் வார தொடக்க நிகழ்வாக இடம்பெற்ற இந் நிகழ்வில் ஈகைச்சுடரினை மண்மீட்புப் போரினில் …

September, 2016

 • 19 September

  இந்திய அரசுக்கெதிராக த்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

  17-1

  தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாக கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் 16ஆம் திகதி பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.