Thursday , February 20 2020
Home / நிகழ்வுகள் / நடந்த நிகழ்வுகள் (page 2)

நடந்த நிகழ்வுகள்

August, 2016

 • 28 August

  காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  27 (15) (Copy)

  பிரித்தானியாவில் காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் (28.08.2016 )இன்று ஒழுங்கமைக்கப்பட்டது. மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானியாவின் பிரதமர் இல்லமான 10 Downing Streetக்கு அருகாமையில் நடைபெற்றது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.    

July, 2016

 • 25 July

  33ம் ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை நிகழ்வு – பிரித்தானியா

  IMG_0545

  இன்று (23-07-16) பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட 33ம் ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை நிகழ்வு பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு மாலை 6 மணிக்கு அகவணக்கத்துடன்  ஆரம்பித்தது.

 • 7 July

  டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் மெய்வல்லுனர் போட்டி

  IMG_2189

  டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 3வது வருட அண்இமையில்ல்ல இடம்பெற்றது. போட்தடிகள்மி ழீழத் தேசியக் கொடியேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி மாலை 9 மணியளவில் நிறைவாகியது. ஆண்கள் பெண்களுக்களுக்கான 25, 50, 100, 200m ஓட்டங்கள், தடை தாண்டல் அஞ்சல் ஓட்டம் பழம் பொறுக்குதல், தண்ணீர் நிரப்புதல் அணி நடை என்று எல்லா விளையாட்டுக்களும் இடம்பெற்றது. Dartford Harriers Athletic Ground இல் இடம்பெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானியக் …

 • 7 July

  குறோளி தமிழ்க் கல்விக்கூட 10 வது ஆண்டின் நிறைவு கலைவிழா

  IMG_0056

  குறோளி தமிழ்க் கல்விக்கூட 10 வது ஆண்டின் நிறைவு கலைவிழா இன்று (02/07/2016) நடைபெற்றது. நிகழ்வை மங்கல விளக்கேற்றி MS. Vikki Folds (Crawley Brough Council) தொடக்கிவைத்தார் பிரதம விருந்தினராக குறோளி நகர பிதா ராஜ் சர்மா பங்கு கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். குறோளி தமிழ்க் கல்விக் கூடத்தின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் ஆசிரியர்களின் திறமையான பயிற்சியாலும் வழிகாட்டுதலினாலும்மி கவும் சிறப்பாகவும் திறமையாகவும் நடைபெற்றது.

May, 2016

 • 23 May

  இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  may_22 (14)

  இலங்கையில் கடந்த அரசைப் போலவே “நல்லாட்சி அரசாங்கம்” என்று சொல்லிக்கொள்ளும் அரசிலும் தொடரும் கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நேற்று (22-05-2015) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. லண்டனின் WESTMINISTER பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலமான NO 10 DOWNING STREET பகுதியில் பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் காலத்திலும் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும் வெள்ளைவான் …

October, 2014

February, 2014

 • 14 February

  லண்டனில் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு

  பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கடந்த அறுபத்தாறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், நீர்ப்பாசனஅபிவிருந்தித்திடடங்கள் என்ற போர்வையிலும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. போரின் முடிவிற்குப்பின்னர், இராணுவ முகாம்களின் விரிவாக்கம், இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களை அமைத்தல் எனமுன்னெப்பொழுதிலும் இல்லாதளவு நிலப்பறிப்பு நடாத்தப்பட்டு வருகிறது. உலகின் மற்றைய நாடுகளில் நடைபெறும் நிலப்பறிப்புடன் இணைத்து இவ்விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்தில் கொண்டுவரும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர்களுக்கான …

December, 2012

 • 5 December

  யாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிரித்தானியாவில் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலையும் மாணவர்களின் விடுதலையும் வேண்டி பிரித்தானியாவில் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களும் மாணவர்களும் பங்கேற்றிருந்தார்கள். மாவீரர் நாளன்று யாழ் பல்கலைகழக மாணவர்கள் தங்கள் விடுதிகளில் வீர மறவர்களுக்கு திருவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தியமைக்காக மாணவர்கள் மீது சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் கட்டவிழ்த்துவிட்டிருந்த தாக்குதல்களை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 18 பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் மாணவ ஒன்றியங்கள் …