Thursday , January 23 2020
Home / Blogs

Blogs

Blogs

November, 2016

July, 2016

 • 7 July

  புறநானூற்றின் புதிய வேதம்

  millor copy

  நேரம் நடுஇரவை நெருங்கிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் வல்வைவெளியூடாக வடமராட்சி நோக்கிச் செல்லுகின்ற நீண்ட சாலையில் இரண்டு வண்டிகள் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு வேகமாய் விரைந்து கொண்டிருக்கின்றன. முன்னால்போய்க் கொண்டிருந்த வண்டி சற்றும் வழிவிட்டுக் கொடுக்காமல் வாயு வேகத்தில் பறந்துகொண்டிருந்தது. பின்னால் போய்க் கொண்டிருந்த வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்களிடையே சின்னதாய் ஒரு பதட்டம். தலைவன் பயணம் செய்து கொண்டிருந்த வண்டிஅது என்பதால், பாதுகாப்பு பேணப்பட வேண்டிய அவசியம் அந்த மெய்ப் …

June, 2016

 • 1 June

  சிங்கள வரலாற்றின் சீரின்மை

  sinhalese

  வங்கத்திலிருந்து சகாக்களுடன் விரட்டப்பட்ட விஜயன் என்னும் இளவரசனும் அவன் சகாக்களும் பேசிய மொழிதான் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்றது என்கிறார்கள். இது ஒரு சர்ச்சைக்கு உரிய விடயம். சிங்களம் ஒரு இந்திய ஆரிய மொழி. காலத்தை வைத்து அவற்றை பழைய, மத்திய, புதிய என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். இதில் புதிய பிரிவு என்ற கடைசி மாற்றம் ஏற்படு முன்னரே சிங்களம் அம்மொழிகளிலிருந்து விலகிவிட்டது என்பதைக்கூட நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்கள். …

May, 2016

 • 23 May

  இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  may_22 (14)

  இலங்கையில் கடந்த அரசைப் போலவே “நல்லாட்சி அரசாங்கம்” என்று சொல்லிக்கொள்ளும் அரசிலும் தொடரும் கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நேற்று (22-05-2015) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. லண்டனின் WESTMINISTER பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலமான NO 10 DOWNING STREET பகுதியில் பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் காலத்திலும் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும் வெள்ளைவான் …

 • 9 May

  தாய்மடி – புதுவை இரத்தினதுரை

  25

  எட்டாம் போர், பத்தாம் போர், பதினெட்டாம் போர் என வெள்ளையனையே கதிகலக்கிய வீதி இது. இன்று அந்தரத்தில் ஆடும் எங்கள் அவல வாழ்வை எண்ணி வீழ்ந்து எந்தப் பொழுதிலும் இடிந்து விடாதீர்கள். இன்றைய வதை பிரசவ வலியைப் போன்றது வலியைத் தாங்குவதே சுகப் பிரசவத்திற்கான வழி புதிய உயிர்ப்பொன்று வேண்டுமெனில் அதற்குப் பொறுமை வேண்டும். பல்லைக் கடித்துத் தாங்கும் பக்குவம் வேண்டும். விடுதலைக்கான வழி நடத்தல் என்பது ஊரிப்பட்ட ஆக்கினைகளை …

April, 2016

 • 13 April

  ஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

  UKumar

  நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழககட்சிகளுக்கும் மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக மூன்று நிலைப்பாடுகளை தங்களது தேர்தல்அறிக்கையில் உள்ளடக்குமாறும் அரசியல் கட்சிகளைக் கோரியுள்ளது. இதுதொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் : தமிழ்நாட்டு மக்கள் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைபிரியாத அங்கமாக உள்ளார்கள். அதன் அடிப்படையில்எதிர்வரும் …

 • 13 April

  பிறக்கிறது துன்முகி! (கலியுகம் 5118)

  09212015_EclipticPathbyTauOlunga

  வருகிற சித்திரை முதலாம் திகதி துன்முகி ஆண்டு பிறக்கிறது. மாதத்தின் முதலாம் திகதிதான் ஆண்டுப்பிறப்பு என்பது ஒரு மாறாத,திடமான கூற்று. சித்திரை முதலாம் திகதி எப்போ என்பதில் எமக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் சில குழப்பவாதிகள். நாட்காட்டிகளைப் பாருங்கள். சிலவற்றில் ஏப்ரல் 13ம்திகதி புதன் கிழமையை சித்திரை ஒன்று என்கிறார்கள். சிலவற்றில் ஏப்ரல் 14ம் திகதி வியாழக்கிழமையை சித்திரை ஒன்று என்கிறார்கள்.தமிழில் ஒரு பழமொழி உள்ளது. கையாலாகாதவன் பெண்டாட்டி…… …

March, 2016

 • 10 March

  சொல்லி வேலையில்லை..

  sri-lankan-refugees

  வீதியில் இருமருங்கிலும் மக்கள், தோளில் சிறுகுழந்தைகள் இருந்து கையசைக்க, முதியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசம் இல்லாது, ஆரவாரவொலி, ஓரிருவர் கைகளில்வெள்ளைக்கொடிகளும், பூக்களுமென, வேறும் சிலர், இனிமேல் எமக்கு விடிவுதான், கடவுளே, என்று இனி நிம்மதியாக இருக்கலாம் என்று தத்தம் மனஆசைகளை, அபிலாசைகளை இவர்கள் நிச்சயம் நிறை வேற்றுவார்கள் என்ற தொனியில் ஆணித்தரமான கருத்துப்பகிர்வுகள். இவ்வளவும் இந்திய அமைதிப்படை, Indian Peace Keeping Force என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்டு எம்மண்ணில் …

 • 10 March

  தமிழ் மொழியும், எம் பிள்ளைகளும்

  tamillanguage

  தாய் மொழி என்பது ஆங்கிலத்தில் mother tongue என்பர். ஆங்கில அகராதியில் ஒரு பிள்ளை வளரும் பருவத்தில் பேசப்பட்ட மொழி என்கிறார்கள்.(The language which a person has grown up speaking from early childhood). ஆராட்சியாளர்கள் ஒரு குழந்தைக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசவும், கற்கவும் ஆளுமைஉள்ளது என்கிறார்கள். ஆனால் எம்மவர்களோதமிழைப் படிப்பித்தால் ஆங்கிலம் சரியாக கற்கமுடியாமல் போய்விடும் என்று ஆங்கிலத்திலேயே தாமும் வீட்டில் பிள்ளைகளுடன் கதைப்பதுடன், …