Home / Blogs / கவிதைகள்

கவிதைகள்

May, 2016

 • 9 May

  தாய்மடி – புதுவை இரத்தினதுரை

  25

  எட்டாம் போர், பத்தாம் போர், பதினெட்டாம் போர் என வெள்ளையனையே கதிகலக்கிய வீதி இது. இன்று அந்தரத்தில் ஆடும் எங்கள் அவல வாழ்வை எண்ணி வீழ்ந்து எந்தப் பொழுதிலும் இடிந்து விடாதீர்கள். இன்றைய வதை பிரசவ வலியைப் போன்றது வலியைத் தாங்குவதே சுகப் பிரசவத்திற்கான வழி புதிய உயிர்ப்பொன்று வேண்டுமெனில் அதற்குப் பொறுமை வேண்டும். பல்லைக் கடித்துத் தாங்கும் பக்குவம் வேண்டும். விடுதலைக்கான வழி நடத்தல் என்பது ஊரிப்பட்ட ஆக்கினைகளை …

November, 2015

 • 25 November

  வீரத் தெய்வங்களே வெளியே வருக….

  1048

  கண்ணைப்பறிக்கும் மின்னல் வெட்டுக. கருமோகங்கள் கட்டிப்புரள இடியெழுக. பூமிகுளிர மழைபொழிக. கோபுரமணிகள் அதிர குத்துவிளக்குகள் ஒளிர கருவறைக் கதவுகள் திறந்து தெய்வங்கள் தெருவிலிறங்குக. தம்புரா வீணை மத்தளமேந்திய சாந்தசொரூபங்கள் சன்னதிக்குள்ளே தூங்கிக் கிடக்க. வேலும் வாளும் சூலமும் ஏந்திய வீரத்தெய்வங்கள் வெளியே வருக. புழுதி எழுத்துப்போய்ச் சூரியனைத் திரையிட கோபவிழிகள் குருதி நிறமாக தண்டையும் சிலம்பும் சப்திக்க சக்திகள் தாண்டவமாடுக. ஊழிக்கூத்து இதுவென உலகம் வேகமெடுத்துச் சுழல்க. பகைவனுக்கருள் செய் …

 • 1 November

  கல்லறைக் கதவுகள் திறக்கும் காணிக்கைத் திருநாள்..

  tnrf (2)

  சாமம் பேயுலவும் சவக்காலை என்ற பழிச்சொல் போய் மறையலானது. வீரர் துயிலுகின்ற இல்லம் என்ற புனிதச் சொல் வாய் நிறையலானது. கார்த்திகை மாதத்திலேன் கனத்த மழை? ஏனிந்தப் பச்சை விரிப்பு? நிலமேன் நெக்குருவிக் கிடக்கிறது? சூரியமேன் சுட்டெரிப்பதில்லை? அயர்ந்துறங்கும் ஆலகண்டருக்கு இயற்கையின் இந்த மாத அஞ்சலியது. ஓவென்றிரையும் ஊதற்காற்றே! வேகம் குறைந்து வீசு. தேவகுமாரர்கள் இங்கே தூங்குகின்றனர். துயில் கலைத்துத் தொலைக்காதே. கல்லெறியும் பொல்லாக் கனத்த மழையே! மெல்லப் பூவெறிதல் …

 • 1 November

  விடுதலைக்கானதே விதைப்பு…

  1038

  வந்து போகும் ஒவ்வொரு மாரியும் எம்மண்ணுக்குத் தந்து போகும் வசீகரம் தாராளம். மூன்று மாதங்கள் மட்டுமே மேகம் கசியும் நிறையா வரம் பெற்ற நிலமிது. கோடை வறுத்தெடுக்கும் காலத்தில் ஆடையவிழக் கிடப்பாள் அன்னை. வாரியடித்துலுப்பும் காற்றின் வன்மம் புழுதியிறைத்துவிட்டுப் போகும். வீட்டின் தலைவாசல் மூக்கின் நுளைவாசல் வீதிமருங்குள மரங்கள் யாவிலும் புழுதிசொருகிவிடும் கோடை. ஐப்பசியானதும் மேலே மேகம் கறுக்கம். தீபாவளியுடன் துமிவிழத் தொடங்கினால் வரண்ட மேனி வனப்புறும். கார்த்திகை மாதம் …

 • 1 November

  மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே….

  tnrf (24)

  சிறு கூட்டுக் குருவிக்கும் சிறகடிக்க ஆசை ஒரு கூட்டுப் புழுவிற்கும் சிறை உடைக்க ஆசை எம் ஈழத் தமிழர்க்கும் விடுதலை வேட்கை எனத் திரியாகிக் கரியாகிப் போனீரே மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே குண்டு மழையிடை கந்தகம் சந்தணமாக வெந்தகம் நீறாக தாயத்தாகம் தாரகமாக தாராள மனத்துடன் – நாம் பாராள வேண்டி நின்றீரே மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே பெற்றவரைப் பிரிந்து உற்றவரை மறந்து மற்றவர் விடியலுக்காய் கதிரோடு …

January, 2013

 • 28 January

  தை பிறந்தால் வழி பிறக்கும்

  தை பிறந்தால், தை பிறந்தால் எதையும் இருமுறை அழுத்திச் சொல்லின் அதுவும் கவியாகும் என்ற வழக்கமிருப்பதால் இதையும் இரு முறை அழுத்திச் சொல்லியாயிற்று எனவே இதுவும் கவியாயிற்று உழவர்க்கெல்லாம் தமிழருக்கெல்லாம் ஒரு திருநாள், பெருந்திருநாள், ‘எங்கள் தைத்திருநாள்’ வேலைத்தலத்து பண்டிகை உபரித் தொகையென்றும் வீதிகளில் வான வேடிக்கைகள் என்றும் தீபாவளி தலை நிமிர்த்தி நிற்க எங்கள் தைத் திருநாள் கைபேசிக் குறுஞ் செய்தியாய் சுருங்கிப்போய் விட்டது. சமணம் சமயத் தீபாவலி …

November, 2012

 • 27 November

  கேள்விகள் கேட்பர்

  மாவீரம்

  வீரத்திலும், பொருளாண்மையிலும் வெற்றிக் கொடி பறக்க வாழ்ந்தவோர் இனம் உலகப் பந்தின் ஓர் இருண்ட மூலையில் வலி தாங்கி நிற்கும் ஓர் அவலப்பட்ட இனம் விடுதலைக்காய் எதையும் விடாது வீழ்ந்தும் மீண்டும் மிடுக்குடன் எழும் இனம் உலக முறைமைக்குள் சுழன்றிடாததால் அடித்து வீழ்த்தப் பட்டும் அசையா நம்பிக்கைத் தூண் பற்றி நிற்கும் இனம் மீதித் தூரம் கொஞ்சமெனும் ஆசை பற்றிக் கொண்ட இனம் ஒவ்வொன்றாய்க் கொடுத்தும் கொத்துக் கொத்தாய்க் கொடுத்தும் …

 • 27 November

  எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்….!!!

  10402763_937595772924913_148069813822055961_n

  எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன…? உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய். அதை நாங்கள் மட்டுமே அறிவோம். எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விட்டுப்போகாது. …