Home / Blogs / செய்திகள்

செய்திகள்

May, 2016

 • 23 May

  இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  may_22 (14)

  இலங்கையில் கடந்த அரசைப் போலவே “நல்லாட்சி அரசாங்கம்” என்று சொல்லிக்கொள்ளும் அரசிலும் தொடரும் கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நேற்று (22-05-2015) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. லண்டனின் WESTMINISTER பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலமான NO 10 DOWNING STREET பகுதியில் பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் காலத்திலும் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும் வெள்ளைவான் …

April, 2016

 • 13 April

  ஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

  UKumar

  நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழககட்சிகளுக்கும் மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக மூன்று நிலைப்பாடுகளை தங்களது தேர்தல்அறிக்கையில் உள்ளடக்குமாறும் அரசியல் கட்சிகளைக் கோரியுள்ளது. இதுதொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் : தமிழ்நாட்டு மக்கள் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைபிரியாத அங்கமாக உள்ளார்கள். அதன் அடிப்படையில்எதிர்வரும் …

November, 2015

 • 9 November

  தமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு

  தமிழ் மொழியியல், சமயம் போன்ற துறைகளில் ஆய்வுகளைச் மேற் கொண்ட புலமையாளர் பேராசிரியர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை நொவெம்பர் முதலாம் திகதி சான்பிரான்சிஸ்கோவில் காலமானார். இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், இந்தியாவில் கேரளா பல்கலைக்கழகம், சுவீடன் உப்சாலா பல்கலைக் கழகம், ஜக்கிய அமெரிக்காவில் வேர்ஜீனியா, அரிசோனாபல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய பேராசிரியர் வேலுப்பிள்ளை மொழியியல்தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1990 களில் சுவீடன் உப்சாலா பல்கலைக்கழக்கத்தில் அவர் பணியாற்றியபோது பேராசிரியர் பீற்றர் சால்க் …

 • 6 November

  எமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்

  lakshmana-photo-kovan-tamil-photo-folk-singer_5bfe9146-7fdf-11e5-ba56-8cfa9414553d

  எமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்! கலை என்பது பிழைப்பிற்கானது அல்ல! மக்களுக்கானது! நமது காலத்தில் கோவன் என்ற கலைஞன் அதனை எமது கண்முன்னே நிறுவியுள்ளார். தமிழ் நாடு மானில அரசால் கைதுசெய்யப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவன் என்ற கலைஞன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். தொண்ணுறுகளில் ரஜீவ் கொலையின் பின் ஜெயலலிதா அரசால் ஈழத் தமிழர்களும், ஈழ …

October, 2015

 • 28 October

  நம் சிறுவர்களும் பிரித்தானியாவின் வதிவிட உரிமையும்

  first-british-passport

  பிரித்தானியாவின் சட்டதிட்டங்களின் படி, சில சிறுவர்களும், குழந்தைகளும் அவர்கள் யாருக்கு, எங்கே, எப்போது பிறந்தார்கள் என்பதற்கு இணங்க, இயல்பாகவே பிரித்தானியாவின் பிரஜையாகுகிறார்கள். பின்வரும் சந்தர்ப்பங்களின் அவர்கள் அப்படி ஆகுவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. பிறந்த உடனே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் பிரிந்தானியாவில் 1/7/2006 க்கு முன், பிரித்தானிய பிரஜையான தாய்க்கு அல்லது indefinite leave to remain or enter   உள்ள தாய்க்கு பிறந்த பிள்ளைகள் பிரித்தானியாவில் 1/7/2006 க்கு …

 • 21 October

  தமிழினியின் எண்ணங்கள் ஈடேற இதயசுத்தியோடு உழைக்கவேண்டும்! – முதல்வர் இரங்கல் செய்தி!!

  thamilini

  ‘உணர்வும் அறிவும் ஆளுமையும் கொண்ட ஒரு ஜீவன் எம்மை விட்டு ஏகிவிட்டது. இடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த நெஞ்சுரம்மிக்க தமிழினி அவர்களின் எண்ணமெல்லாம் தமிழ் மக்களின் விடுதலை பற்றியும் தமிழ்ப் பெண்களின் உயர்ச்சி பற்றியதாகவுமே இருந்திருக்கின்றன. அவரது எண்ணங்கள் ஈடேற இதயசுத்தியோடு நாம் அனைவரும் உழைக்கவேண்டும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு …

 • 19 October

  தமிழீழத்திருநாட்டை தன் சிந்தையில் நிர்மாணித்து அழகு பார்த்தவர் தேசப்பற்றுள்ள டேவிட் ஐயா!

  ayya

  தமிழீழத்திருநாட்டை தன் சிந்தையில் நிர்மாணித்து அழகு பார்த்தவர் தேசப்பற்றுள்ள டேவிட் ஐயா! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!! அடிமைப்பட்டு அடங்கிப்போகும் இனமல்ல நாம், எமக்கான தனித்துவத்துடன் வாழ தமிழீழ தேசம் அமைப்பது ஒன்றே தீர்வாகும் என்ற இலட்சியத்தில் இறுதி மூச்சுவரை உறுதியுடன் இருந்து வந்தவர்தான் முதுபெரும் சுதந்திர போராளியான தேசபிமானி டேவிட் ஐயா அவர்கள். கட்டட நிர்மாணத்துறையில் வரைகலை நிபுணராக உலகம் முழுதும் ஆளுமை செலுத்திவந்த டேவிட் ஐயாவின் திறமைகளை …

 • 11 October

  டேவிட் ஐயா அவர்கள் காலமானார்

  4

  ஈழத்தமிழினம் மறந்து போகக் கூடாத ஈழப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூத்த போராளியும் ஈழத்து காந்தியவாதியுமான டேவிட் ஐயா கிளிநொச்சியில் (வயது 91) நேற்று (11-10-2015) காலமானார்.

 • 7 October

  தனித்துவத்துடன் வாழ்வதனையே தமிழ்மக்கள் விரும்புகின்றனர்

  wig

  தனித்துவத்துடன் வாழ்வதனையே தமிழ்மக்கள் விரும்புகின்றனர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் “பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்நாட்டில் பலர் மத்தியிலும் இருந்து வந்திருக்கின்றது. வடகிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்க வில்லை. ஏற்கவும் முடியாது. இரு மரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எம்மக்கள் விரும்புகின்றனர். பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை.” இவ்வாறு இரணைமடுவில் நடைபெற்ற “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான …

December, 2014

 • 30 December

  கூட்டமைப்பு பா.உ. சரா மகிந்தவிற்கு ஆதரவு?

  saravanapavan1

  சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பாக சரவணபவன் தரப்பிலிருந்து எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை. இராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்புகளைப் பேணிவரும் சரவணபவன் மகிந்த இராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவரைச் சந்திப்பதந்காக இன்று (டிசம்பர் 30) காலையில் அலரிமாளிகைக்குச் சென்றதனை கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினர். …