Home / Blogs / நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே

March, 2016

 • 10 March

  சொல்லி வேலையில்லை..

  sri-lankan-refugees

  வீதியில் இருமருங்கிலும் மக்கள், தோளில் சிறுகுழந்தைகள் இருந்து கையசைக்க, முதியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசம் இல்லாது, ஆரவாரவொலி, ஓரிருவர் கைகளில்வெள்ளைக்கொடிகளும், பூக்களுமென, வேறும் சிலர், இனிமேல் எமக்கு விடிவுதான், கடவுளே, என்று இனி நிம்மதியாக இருக்கலாம் என்று தத்தம் மனஆசைகளை, அபிலாசைகளை இவர்கள் நிச்சயம் நிறை வேற்றுவார்கள் என்ற தொனியில் ஆணித்தரமான கருத்துப்பகிர்வுகள். இவ்வளவும் இந்திய அமைதிப்படை, Indian Peace Keeping Force என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்டு எம்மண்ணில் …

 • 10 March

  தமிழ் மொழியும், எம் பிள்ளைகளும்

  tamillanguage

  தாய் மொழி என்பது ஆங்கிலத்தில் mother tongue என்பர். ஆங்கில அகராதியில் ஒரு பிள்ளை வளரும் பருவத்தில் பேசப்பட்ட மொழி என்கிறார்கள்.(The language which a person has grown up speaking from early childhood). ஆராட்சியாளர்கள் ஒரு குழந்தைக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசவும், கற்கவும் ஆளுமைஉள்ளது என்கிறார்கள். ஆனால் எம்மவர்களோதமிழைப் படிப்பித்தால் ஆங்கிலம் சரியாக கற்கமுடியாமல் போய்விடும் என்று ஆங்கிலத்திலேயே தாமும் வீட்டில் பிள்ளைகளுடன் கதைப்பதுடன், …

 • 10 March

  அகதி வாழ்வும், அடுத்த தலைமுறையும்

  photo_verybig_4388

  பிறந்த இடத்தில் இருந்து உயிரையும், மானத்தையும் காக்க என, நாடு விட்டு, நாடு வந்து,பிறகு வந்த நாடு பிடிக்கவில்லை, பிள்ளைகளுக்கென வேறு நாடு என்று, என நாம் விரும்பிஅலைந்தது ஒரு புறம், எம்மை பாதுக்காப்பான இடத்தில் சேர்க்கின்றோம் என்று நாடு நாடாக காசும் புடுக்கிய ஏனென்சி புண்ணியவான்கள் ஒருபுறம் என நாம் அலைந்துலைந்த அகதிவாழ்வு ஒருமாதிரியாக அந்தந்த நாட்டு பிரஜாவுரிமை பெற்றதும், முன்னாள் அகதி என்ற பட்டத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. …

December, 2015

 • 8 December

  மாவீரர் நினைவெழுச்சிநாளும், தமிழ்மக்களும்

  maaveerar_2015-102-1024x683

  மாவீரர் நாள் பற்றியும், அதை நடாத்துவது பற்றியும் சில சர்ச்சைகள் உள்ளன. அதுபற்றிபார்க்க முன்பு, வழமைபோல இந்த முறையும்,வேலை, மற்றும் பாடசாலை நாள் என்றும் பாராமல், புலம் பெயர் தேசம் எங்கும் மாவீரர் நினைவு எழுச்சியாக நினைவு கூரப்பட்டது. அதுமட்டும்மன்றி இம்முறை தாயகத்திலும் பல பிரதேசங்களில் பலத்த கட்டுப்பாடுகள் மத்தியிலும் மக்களால் திறந்த வெளியிலும், அவர் தம் இல்லங்களிலும் நினைவு கூரப்பட்டது. அவர்தம் கல்லறைகளை இராணுவம் இடித்து, அழித்து தரைமட்டம் …

October, 2015

 • 2 October

  யார் பிழைப்புவாதிகள் ?

  3510056877_6764990844

  கடலுக்குள் இருக்கும் இறால் மற்ற உயிரினங்களைப் பார்த்து உனது உடல் ரொம்ப அழுக்காயிருக்கின்றது என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்குமாம். அதை மற்ற உயிரினங்கள் பொருட்படுத்துவதில்லை. காரணம் அப்படிச் சொல்லும் இறாலின் முகத்தில் எப்போது அழுக்கான சேறு இருக்குமாம். அது போலத்தான் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழ்த் தேசியத்திற்காக பாடுபடுவர்களை சில முற்போக்கு முகமூடி போட்ட அரை வேக்காடுகள் பிழைப்புவாதிகள் என்று சொல்லிப் பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஐ-பாட்டையும் ஐ-போனையும் வைத்துக் …

 • 1 October

  இயக்கம்

  04girls

  சுத்தும் பூமி நின்றுவிட்டது போன்ற ஒரு பிரமை, ஒரு சிலருக்கு மட்டும் தானா அல்லது மற்றவர்களுக்கும் இந்த உணர்வு உள்ளதா? செந்நீரால் ஊற்றி வளர்ந்த விடுதலைப் பயிரை எப்படி கிள்ளி எறிந்தார்கள். ஒரு பரிணாம வளர்ச்சி போல் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்இருந்து மேல் நோக்கி எழுந்த எழுச்சி, கடலில் சிறீலங்கா கடல்படையினரால் பிடிபட்டு அடுத்தநாள் உடலமாக கரையொதுங்கிய காலம் போய், சிறீலங்கா கடல்படையினர் எம்மை கலைத்தால் பிடிபடாவண்ணம் வளர்ந்து, மேலும் …

December, 2014

 • 8 December

  மாவீரர் தினம் – என்ன செய்ய வேண்டும்

  maaveerar_visuvamadu_dest_04

  மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் 1989 இல் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆவது ஆண்டான இந்த வருடத்தில் நின்று கொண்டிருக்கிறோம். 1989 ம் ஆண்டிற்கு முன்பு, போராளிகள் வீர மரணம் அடைந்தால், சந்தர்ப்பங்களை பொறுத்து இயலுமான வரை அவர்களின் குடும்பத்தினரிடம் போராளிகளின் உடல்களை ஒப்படைக்கப்பட்டு, குடும்பத்தினர் அவர்களின் குடும்ப வழமைக்கு உரிய வகையில் கிரியைகள் செய்வார்கள். 1990 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதுபுலிகளின் கொடியில் இருந்து நீக்கப்பட்டு எமதுதேசியக்கொடி மக்கள் …

November, 2014

 • 26 November

  விடுவிக்கப்பட்ட போராளிகளை நோக்கி நீளும் அரச பயங்கரவாதிகள்

  மனேதத்துவ ரீதியில் மிகவும் ஆழமாகவும் அமைதியாகவும் கையாளப்பட வேண்டிய ஓர் உணர்வின் வெளிப்பாட்டை, வழமையான அடக்குமுறையுடன் கூடிய அடாவடித்தனமானவன்முறைப் போக்கினால், சிறீலங்கா அரசு, மீண்டும் ஓர் வரலாற்று தவறை செய்கிறது. விடுதலை வீரர்களை அழித்து விடலாம் ஆனால்விடுதலை உணர்வையும் அழித்துவிடமுடியாது. தமிழ் மக்களை நிரந்தரமான இராணுவ ஆட்சிக்குள் வைத்துக் கொண்டு, ஆள் கடத்தல்,இரகசிய கொலைகள், பாலியல் வன்புணர்வுஎன்று தமிழர்கள் இனத்தை அழிப்பதோடு, தாராளமான மது, போதை பாவனைகளைஉண்டு பண்ணி கலாச்சார …

April, 2014

 • 28 April

  குடிப்பழக்கமும், தமிழ்ப்பெண்களும்

  அவ்வளவு மோசமாகவா இருக்கிறது என்றுநீங்கள் நினைக்கலாம். உண்மையில் இப் பழக்கம் தமிழ்ப் பெண்கள் மத்தியில் இருப்பதே தெரியாமல் பெற்றோர்கள் இருக்கும் போது,அது அதிகரித்து வருவது எங்கு தெரியப்போகிறது. இருந்தால் என்ன இப்போ, என்ன குடியா மூழ்கி விடப்போகிறது. ஆண்கள் குடிப்பது தெரியவில்லையா ? என்று பெண்ணியம் பேச வரவேண்டாம். ஊரில் கை லூசான ரவிக்கை மட்டும் ஒன்றை நடுமார்பில் ஒரு முடிச்சு போட்டு அணிந்து சேலையை சுத்தி முன்கொய்யகம் இல்லாது …

March, 2014

 • 24 March

  வாய் விட்டு அழமுடியாத தேசம்…

  தூ.. இந்த துத்தேரி நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி,அமைச்சரவை, நீதி, நிர்வாகம், மாகாணசபை, மண்ணாங்கட்டி. நல்ல புலவனாக இருந்தால் வசைபாடியே இந்த அரசின் சீர்கேட்டைப் பறைசாற்றியிருப்பான். ஆனால் அந்த காலம் எல்லாம் போய் நாம், பேய்களும், பிணந்தின்னி கழுகுகளும் வாழும் இந்த கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நல்லவர்கள், வல்வவர்கள், மாவீரர்கள், மகத்தான கனவுகளுடனும், அமைதியான, அழகான தமிழ் ஈழத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற தன்னலமற்ற தியாகங்களோடு மாவீரர் ஆகிவிட்டனர். யாருக்காக …