Thursday , January 23 2020
Home / Blogs / மாவீார்கள்

மாவீார்கள்

November, 2016

July, 2016

 • 7 July

  புறநானூற்றின் புதிய வேதம்

  millor copy

  நேரம் நடுஇரவை நெருங்கிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் வல்வைவெளியூடாக வடமராட்சி நோக்கிச் செல்லுகின்ற நீண்ட சாலையில் இரண்டு வண்டிகள் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு வேகமாய் விரைந்து கொண்டிருக்கின்றன. முன்னால்போய்க் கொண்டிருந்த வண்டி சற்றும் வழிவிட்டுக் கொடுக்காமல் வாயு வேகத்தில் பறந்துகொண்டிருந்தது. பின்னால் போய்க் கொண்டிருந்த வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்களிடையே சின்னதாய் ஒரு பதட்டம். தலைவன் பயணம் செய்து கொண்டிருந்த வண்டிஅது என்பதால், பாதுகாப்பு பேணப்பட வேண்டிய அவசியம் அந்த மெய்ப் …

November, 2015

 • 23 November

  போராளிகள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள்

  queimada

  போராளிகள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் 1969ல் மார்லின் பிராண்டோ நடித்து வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளான படக்கதையின் அடிப்படை கருத்துக்களுடன் மாவீரர்களுக்கான அகவணக்கத்தைச் செலுத்த விரும்புகின்றேன். 1840க்கும் 50க்கும் இடைப்பட்ட காலம். இடம்கரிபியனில் உள்ள ஒரு கற்பனைத்தீவு. போர்த்துக்கேயக் காலணியான இத்தீவின் கறுப்பினஅடிமைகள் அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பிரித்தானியா அங்கு `வாக்கர்’ என்னும் கூலிப்படைப்பிரதிநிதியை அனுப்புகிறது. அவர் கிளர்ச்சியாளருக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கி, …

 • 9 November

  கார்த்திகை மாதமும் கல்லறைகளும்

  maaveerar

  லண்டனில் ஒரு சுடலையின் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். அது ஒரு குளிர்கால காலை நேரம், அத்தோடு வானமே திறந்தது போல மழை பெய்து கொண்டிருந்தது. ஊரில் பெண்கள் சுடலைக்கு போகக்கூடாது என்பர். ஒரே இனம் என்பதால் பெண்ணைப்பேய் பிடித்துவிடும் என்று அதற்கு என் நண்பன் விளக்கம் சொன்னான். மழையில் நனைந்தபடி வாசலை கடந்து தனியே நடக்கத் தொடங்கினேன். என்னைச் சுற்றி இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருந்தார்கள் என் கண்ணில் பட்ட முதலாவது …

 • 1 November

  மாவீரம் போகவில்லை

  மாவீரம்

  வடக்கு முதல்வருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்குமிடையே தேவையற்ற முரண்பாடுகள் உருவாகி அதனைப் பத்திரிகைகள் வேறு ஊதிப் பெரிது படுத்திக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மாவீரர் நினைவு வாரம்வந்திருக்கிறது. சிவ பூசைக்குள் கரடி நுழைந்தது போல என்பார்கள், அவ்வாறுதான் இந்த முரண்பாடுகளும் காணப்படுகின்றன. தமிழினம் ஒற்றுமைப்பட்டு நின்று தனது உரிமையை வென்றெடுக்க வேண்டிய முதற்தேவையை மறந்துவிட்டு, சிறீலங்காப் பிரதமரின் வாலைப் பிடித்துக்கொண்டு, வடமாகாணசபை முதல்வரின் தலைமையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் …

 • 1 November

  விடுதலைக்கானதே விதைப்பு…

  1038

  வந்து போகும் ஒவ்வொரு மாரியும் எம்மண்ணுக்குத் தந்து போகும் வசீகரம் தாராளம். மூன்று மாதங்கள் மட்டுமே மேகம் கசியும் நிறையா வரம் பெற்ற நிலமிது. கோடை வறுத்தெடுக்கும் காலத்தில் ஆடையவிழக் கிடப்பாள் அன்னை. வாரியடித்துலுப்பும் காற்றின் வன்மம் புழுதியிறைத்துவிட்டுப் போகும். வீட்டின் தலைவாசல் மூக்கின் நுளைவாசல் வீதிமருங்குள மரங்கள் யாவிலும் புழுதிசொருகிவிடும் கோடை. ஐப்பசியானதும் மேலே மேகம் கறுக்கம். தீபாவளியுடன் துமிவிழத் தொடங்கினால் வரண்ட மேனி வனப்புறும். கார்த்திகை மாதம் …

 • 1 November

  மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே….

  tnrf (24)

  சிறு கூட்டுக் குருவிக்கும் சிறகடிக்க ஆசை ஒரு கூட்டுப் புழுவிற்கும் சிறை உடைக்க ஆசை எம் ஈழத் தமிழர்க்கும் விடுதலை வேட்கை எனத் திரியாகிக் கரியாகிப் போனீரே மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே குண்டு மழையிடை கந்தகம் சந்தணமாக வெந்தகம் நீறாக தாயத்தாகம் தாரகமாக தாராள மனத்துடன் – நாம் பாராள வேண்டி நின்றீரே மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே பெற்றவரைப் பிரிந்து உற்றவரை மறந்து மற்றவர் விடியலுக்காய் கதிரோடு …

October, 2015

 • 28 October

  முதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்

  tamilini

  தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிரணியின் அரசியற் துறைப் பொறுப்பாளராயிருந்த தமிழினியும் மற்றுமோர் விடுதலைப் போராளியான தாருஜாவும் மிக இளம் வயதில் மரணத்தைத் தழுவிக்கொண்டது மிகவும் வேதனையளிப்பதாகவுள்ளது. அவர்கள் பல துன்பங்களைத் தாங்கி அந்த விழுப்புண்களாற்தான் இவ்வாறு இறந்து போனார்கள் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் அவர்கள் சரணடைந்தபோது செய்யப்பட்ட சித்திரவதைகளே அவர்களின் இளவயது மரணத்திற்கான காரணம் என்பதை இலகுவில் மறுத்துவிட முடியாது. இருப்பினும் அதற்கான போதிய …

 • 9 October

  அமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா ? தொடரும் அவலமா ?

  holding-hands

  தமிழ் ஈழ போராட்டத்தில் வீர மரணமடைந்த முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவுநாள் நெருங்குகின்றது.  இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ஒக்டோபர் 10ம்திகதி 1987ம் ஆண்டு நடுராத்திரி தாண்டிய நேரம் 1.15 க்கு தமிழ் பெண்கள் பலரை வன்புணர்வுக்கு ஆளாக்கிய இந்திய இராணுவத்தை கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்து எதிர்கொண்டாள்.  நாட்டின் விடுதலையோடு, பெண்ணின் விடுதலையையும் கருத்தில் தாங்கி ஆயுதம் ஏந்தியவள் அதே இலட்சியக் கனவோடு வீரச்சாவை எதிர்கொண்டாள். …