Home / தாய் நாடு

தாய் நாடு

June, 2016

 • 14 June

  கூத்துப் பாக்கப் போன கூத்து..

  mqdefault

  மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியில பொண்ணு வாறா பொண்ணு வாறா பொட்டு வண்டியில .. எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம்வராத வயசில் நான் இருக்கையில், வாசலை விட்டுக் கீழ இறங்கவே அம்மாவைத் துணைக்குக் …

 • 1 June

  வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு…

  1456265629_fa5bdc3932

  நாங்கள் முதலில் ஒரு சின்ன அறையும் ஒரு பெரியறையும் (சாமியறை)ஒரு விறாந்தையும் கொண்ட வீட்டில் குடியிருந்தோம்.. தனித்தனி அறைகள் கிடையாது.. அப்போதெல்லாம் தனித்தனி அறைகளும் தனிமையும் பெரும் வசதிகளைத் தரும் என்று நினைப்பிருந்து கொண்டிருக்கும்… ஆனால் அதெல்லாம் அமைந்த போது.. எங்களுக்குள் கொஞ்சம்விலகல் நிகழ்ந்துவிட்டிருப்பதை உணரமுடிந்தது… தனிமை வேண்டித் தவமிருந்த நாட்கள் என் வாழ்க்கையில் உண்டு.. ஒரு பாட்டுக்கேக்கிற பொட்டியோடும் (வோக்மேனோடும்) கொஞ்சப் புத்தகங்களோடும் எங்காவது தொலைந்து போய்விடவேண்டும் என்று …

May, 2016

 • 9 May

  நெல் அறுவடை நேரம்

  paddy harvest

  அறுவடைக்காலம், வயல் புறங்கள் எங்கும், கலகலப்பும், களிப்பும் மிகுந்து காணப்படும். ஐந்து மாதத்திற்கு பின் கடும் உழைப்புக்கு பயன்கிடைக்கும் காலம் இது. மழை வெய்யில், பனி என்று காலநிலையின் தாக்கத்திற்கு இடையும் பயிரை பருவத்திற்கு பருவம் நாசமாக்கும் பூச்சிகள், பங்கசுகள் ஊடறுத்து முளைக்கும் புல் இனங்கள் என்பனவற்றை எல்லாம் அகற்றி பயிரை வீறாக்குகின்ற கடும்உழைப்பில் இருக்கின்ற விவசாயி உற்பத்தியை பயனாகும் காலம் அது. இவ்வாறான பலஇடர்களை வென்று அறுவடை என்கின்ற …

April, 2016

 • 13 April

  குந்தியிருந்தது போய்..

  602761_518907011476424_1204477393_n

  வெள்ளைக்காரருக்கு பொதுவாகவே ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், நன்றாக யோசித்து எங்கிருந்து தொடங்கினால் அதுஎப்பிடிப்போய் முடியும் என்று சிந்தித்து. அந்தந்த சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களை பிடித்து, அவர்கள் ஊடாக, அவர்களை மாற்றுவதன் மூலமோ அல்லது அவர்களை நாம் விரும்பியதை பின்பற்ற வைப்பதன் மூலமோதாம் விரும்பும் மாற்றங்களை அச்சமூகங்களில் கொண்டுவருகிறார்கள். இதற்கு எமது சமூகமும் விதிவிலக்கல்ல. அவர்களின் மதம்,நடை உடை பாவனை, மொழி, பழக்கவழக்கம் என்று பலவற்றைக்குறிப்பிடலாம். அவர்கள் நன்றாக …

 • 13 April

  கீரிமலைக் கேணி

  Keerimalai-Tank-Pool

  கீரிமலைக் கேணியில் நீந்துவோர், நீந்தாதார் கூவிலடி சேராதார் என்பது அந்தக் கால தெருக்குறள். வடக்கே பாக்கு நீரிணையை எல்லையாகக் கொண்டு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை அருகாமை உள்ளது கீரிமலை. கீரிமலைக் கேணி ஒரு வற்றாத நன்னீர் ஊற்று, சில அடிகள் தள்ளி அலைபாயும் உப்புக்கடல். கீரிமலைக் கேணி பிரசித்தி பெற்ற பண்டைய ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத் திருத்தலத்தை தன்னகத்தில் கொண்டது. மூன்று மைல் தூரத்தில் மாவிட்டபுரம் திருத்தலம், குறுக்காக …

March, 2016

 • 10 March

  தமிழ் மொழியும், எம் பிள்ளைகளும்

  tamillanguage

  தாய் மொழி என்பது ஆங்கிலத்தில் mother tongue என்பர். ஆங்கில அகராதியில் ஒரு பிள்ளை வளரும் பருவத்தில் பேசப்பட்ட மொழி என்கிறார்கள்.(The language which a person has grown up speaking from early childhood). ஆராட்சியாளர்கள் ஒரு குழந்தைக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசவும், கற்கவும் ஆளுமைஉள்ளது என்கிறார்கள். ஆனால் எம்மவர்களோதமிழைப் படிப்பித்தால் ஆங்கிலம் சரியாக கற்கமுடியாமல் போய்விடும் என்று ஆங்கிலத்திலேயே தாமும் வீட்டில் பிள்ளைகளுடன் கதைப்பதுடன், …

 • 10 March

  அகதி வாழ்வும், அடுத்த தலைமுறையும்

  photo_verybig_4388

  பிறந்த இடத்தில் இருந்து உயிரையும், மானத்தையும் காக்க என, நாடு விட்டு, நாடு வந்து,பிறகு வந்த நாடு பிடிக்கவில்லை, பிள்ளைகளுக்கென வேறு நாடு என்று, என நாம் விரும்பிஅலைந்தது ஒரு புறம், எம்மை பாதுக்காப்பான இடத்தில் சேர்க்கின்றோம் என்று நாடு நாடாக காசும் புடுக்கிய ஏனென்சி புண்ணியவான்கள் ஒருபுறம் என நாம் அலைந்துலைந்த அகதிவாழ்வு ஒருமாதிரியாக அந்தந்த நாட்டு பிரஜாவுரிமை பெற்றதும், முன்னாள் அகதி என்ற பட்டத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. …

January, 2016

 • 14 January

  தை முதலாம் திகதி தைப்பொங்கல்

  Pongal_Image

  உழவர் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் இது தமிழில் உள்ள ஒரு கூற்று. அறுவடைச் செல்வம் வீட்டுக்கு வந்ததும் நிலம், நீர், கதிரவன், உழவு சாதனங்கள் ஆகியவற்றிற்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாவே பொங்கற் பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பாகவும் தை முதலாம் திகதி அறிவிக்கப் பட்டுள்ளதால் இப் பெருநாளின் பெருமை மேலும் உயர்ந்துள்ளது. பொங்கல் பற்றி விபரமாக எதிர்பார்த்தால் ஏதோ அர்த்தமற்ற தலையங்கம் அல்லவோ …

 • 14 January

  தை பிறந்தது

  IMG_5480

  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வழக்கில் உள்ள முதுமொழி. எதிர்கால நம்பிக்கையை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊக்குவிக்கும் வாசகம் இது. புதிய வருடம் புதிய உற்சாகம், மாணவர்களுக்கு புதிய வகுப்பு. சாதித்து முடிக்க, கடந்த காலத்தை எடை போட துÖண்டலுக்குரியதாக எண்ணத்தை மனத்துக்குள் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஏற்படுத்துகின்ற ஒரு புது ஆண்டு. உத்தியோக உயர்வு, இடமாற்றம், உத்தியோக ஓய்வு போன்ற மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தும் தோற்றத்தோடு தை பிறக்கின்றது. நாற்றுமேடை, …

 • 12 January

  முற்றத்து தைப்பொங்கல்

  pongal

  தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த இனிக்கும் நினைவுகள்சுவையானவை. போர்ச்சூழல் வாழ்விலும், புலம்பெயர்ந்த பின்னைய வாழ்விலும் அதனைப் போல ஊரே மகிழ்ந்து கொண்டாடிய தைப் பொங்கலை மீளக் காண முடியவில்லை. அம்மா, அண்ணைமார், சித்தி என்று ஒரே கூட்டுக்குடும்பமாக ஒரே உலைச் சோறு உண்ட காலம்.மாமி வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பு வீடு என்றுஅயல் வீடுக்கு …