Saturday , February 22 2020
Home / தாய் நாடு / ஊரின் வாசம் (page 2)

ஊரின் வாசம்

முடங்கிப் போகும் சடங்குகள்

Wedding photography

அண்மையில் உற்ற நண்பரது வீட்டில் பூப்புனித நீராட்டுவிழா நடந்தது. வழக்கம் போல 11 மணிக்கு வரும்படியாக அழைப்பிதழில் குறிப்பு இருந்தது. வந்தவர்கள் தங்கள்தங்கள் மேசையை சுற்றி இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று முன்னதாக 12 மணியளவில் தான் பூப்புப் பெண் வீடியோகாரரின் படப்பிடிப்புக்கமைய மண்டபத்திற்கு வருகை தந்தார். குத்துவிளக்கு ஏற்ற நின்றபெற்றோருக்கும் வீடியோ காரன் தான் சைகை காட்டி கட்டளைகளை இட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் வெவ்வேறு உடை அணிகளோடு முன்பு …

Read More »

எல்லாரும் கொண்டாடுவோம்

Happy-diwali

தீபாவளி வருகின்றது எல்லோரும் கொண்டாடுவோம் என்று தான் சொல்கிறேன். அதனை செத்தவீடாகவோ, அல்லது திருநாள் விழாவாகவோ கொண்டாடுவோம். செத்தவீட்டையும் விழா நாளாக கொண்டாடும் மரபு நமக்குண்டல்லவா? அப்போது அகால மரணங்கள் அதிகம் நிகழவில்லை. தற்கொலையோ, விபத்துக்களால் நிகழ்ந்த மரணங்களோ மிகமிகக்குறைவு. இளைய வயதில் சிறகுகளை உதிர்த்து மண்ணில் வீழ்ந்தவர்கள் எவருமில்லை. சாவுகாலம் ஆகித் தான் அநேகமாக நேர்ந்தது. இந்த உடலைவைத்து, உலகிற்கு பாரமாக இருக்கக்கூடாது என்று “ஆண்டவனே என்னை அழைக்க …

Read More »

யாழ் தபால் புகையிரத சேவை

train2

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் தபால் புகையிரதம் என்கின்ற மெயில் வண்டி ஓடப் போகின்றது என்பது சென்ற வாரச் செய்திகளில் ஒன்று. வவுனியாவரை, கிளிநொச்சி வரை என்று அண்மையில் கொழும்பிலிருந்து நீட்சி கண்ட இந்தப் புகையிரத சேவை யாழ்ப்பாணம் வரை நீடிக்கப்படுகிறது. காங்கேசன்துறை வரைநீட்சி கண்டால் இது பழைய பயணப் பாதையை முழுமை காணும். அந்த நாட்களில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மெயில் புகையிரதம் வடபகுதி மக்களுடன் ஐக்கியமான …

Read More »

திரைகடல் ஓடி திரவியம் தேடிய சமூகம்

Vasu-Nehru

ஈழத்து வல்வெட்டித்துறை கடலோடிகள் அன்னபூரணி 75வது ஆவது பவளவிழா பெப் 1948இற்கு முன்பு பாகிஸ்தான், இந்தியா,வங்காளம், பர்மா, மலேசியா சூழ்ந்துள்ள இடங்கள். பாக்குநீரிணை, வங்களாவிரிகுடா சூழ்ந்துள்ள கடல்கள் பிரித்தானிய பேரரசின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆக்கிரமிக்கு முன்னர் யாழ்ப்பாணம் இராச்சியம் தனியரசாக இருந்தது. தமிழர்களுக்கு ஒரு நாடு, ஒரு கொடி என்று ஒரு சட்டப்படியான இறைமையுடன் வாழ்ந்தார்கள். அப்பொழுதும் அதற்கு முன்பும் வல்வெட்டித்துறை மக்கள் கப்பல் கட்டுதல், …

Read More »

ஈழத்து வல்வெட்டித்துறை கடலோடிகள்

Cholan

ஈழத்து வல்வெட்டித்துறை கடலோடிகள் அன்னபூரணி 75வது ஆவது பவளவிழா பத்தாம் நுாற்றாண்டின் பின் பாதியில் மூன்று சக்தி வாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயின. எகிப்தில் ராட்டிமிட்ஸ், சீனத்தில் சாங் இந்தியாவில் சோழர்கள் மூவருமே இந்திய பெருங்கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டனர். தமிழர் வரலாற்றில் பொற்காலமாக அமைந்தது புலிக்கொடியுடன் ஆட்சி செய்த இராசஇராசன், மகன் இராசேந்திர சோழன். அவர்கள் காலடியில் வட இந்தியா வீழ்ந்தது. அதனைதொடர்ந்து கடல் கடந்து கிழக்காசியாவில் பல …

Read More »

வலு இழந்தோர் வாழ்வு

web_srilanksn_desable_people

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், என்கிறது கண்ணதாசனின் பாடல்கள். மூளைக் கோளாறு, விழிப்புலன், செவிப்புலன், பேச்சுக்குறைபாடுகள், நடக்கமுடியாத கால்வலு குறைவு, மூக்கு, விரைவாக கிரகிக்க முடியாத மூளைத்திறன் குறைபாடு எல்லாமே வலுக்குறைந்தோருக்குள் அடக்கப்படுகின்றனர். அங்கக் குறைபாடுகள் உள்ளவர்கள் வாழ நினைத்தாலும், எமது தாயகபூமியில் வாழ முடியுமா? ஆனால், குறித்த இந்த குறைபாடுகள் உள்ளவர்கள், வீதிகளில் விசரர்களாக, பிச்சைக்காரர்களாக அலைவதை நாம் காணமுடியும். இங்கிலாந்து உட்பட மேலைநாடுகளில் இவர்களுக்கு …

Read More »

மலாயன் கபே சுவாமிநாதன்

malayan-cafe

ப.வை. ஜெயபாலன் நுாற்றாண்டு நிறைவை எட்டிப்பிடிக்கப் போகும் வயது, மங்காத ஞாபக சக்தி, உதவியோடு நடமாடும் உடல்வலு, தளர்ந்த தேகம், தளராத மனம் முகத்தில் எந்நேரமும் தவளும் புன்னகை. மலாயன் கபே காலத்தில் வாடிக்கையாளர்கள் கண்ட அதே உபசரிப்புப் பாங்கு என்று எத்தனை இயல்புகளோடும் ஒரு நிறைவான பெரியவரை கோபுரா ஞானம் குடும்பத்தவரின் கோலாகல திருமணத்தில் காணக் கிடைத்தது. நயினாதீவில் பிறந்தவர் 13 வயதில் யாழ்ப்பாணத்திற்கு நகர்ந்தவர் சத்திரம் சாமியார், …

Read More »

பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள்

பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள் ஊரின் வாசம் – ப.வை ஜெயபாலன் புலம்பெயர் நாடு ஒன்றில் 25 ஆண்டுகளாக இயங்கும் ஓர் பிள்ளையார் ஆலயம். இலங்கைத் தமிழரால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. அவர்தான் நிர்வாகி. சுற்றிவர நம்பிக்கையான ஒரு தொண்டர் வட்டம். நிர்வகிப்புக்கு உதவியாளர்கள் அவர்கள். சேவையை அர்ப்பணிப்புடன் செயல்படுத்தும் சிறப்பான நிர்வாகி அவர். நிர்வாக சபையைப் பற்றி உரையாடியபோது கோயிலின் வெற்றிக்கு இன்னொருவரை இணைத்து இயக்காததே காரணம் என்றார். கூட …

Read More »

இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்…..

ஒரு பேப்பருக்காக சுபேஸ் பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது …

Read More »

காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்…

மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் …

Read More »