Home / உலக நடப்பு (page 2)

உலக நடப்பு

துடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும்

IranMissileTest

1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட மதவாதப் புரட்சியின் பின்னர் ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக்கப் பட்டது. அங்கு மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த ஒரு ஆட்சி முறைமைநிலவுகின்றது. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஈரானில் நடந்த இரண்டு தேர்தல்கள் கடந்த 37 ஆண்டுகளில் நடந்த மற்றப் பல தேர்தல்களிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் மக்கள் அதிக அக்கறை காட்டுவனவாகவும் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்ட தேர்தால்களாகவும் அமைந்துள்ளன. …

Read More »

பனாமா பத்திரக் கசிவும் பன்னாட்டு அரசியலும்

Cassidy-Panama-Papers-American-Names-1200

உலகெங்கும் உள்ள அமெரிக்காவின் தூதுவராலயங்களில் இருந்து அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை வெளிவிட்டது விக்கிலீக்ஸ் என்னும் பெயரில் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமெரிக்க உளவுத்துறைக்காகப் பணிபுரிந்த எட்வேர்ட் ஸ்நோடன் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினதும் உளவுத் துறையினதும் பல இரகசியங்களை அம்பலப்படுத்தினார். இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு உலக வரலாற்றில் என்றுமில்லாத அளவு அதிகஅளவிலான இரகசியத் தகவல்களை மொஸ்ஸாக் பொன்சேக்கா அம்பலப்படுத்தியுள்ளார். பனாமா நாட்டில் இரகாசியமாக …

Read More »

சிரியக் குர்திஷ் போராளிகள் ஏன் தனிநாட்டுப் பிரகடனம் செய்யவில்லை

testtubedailyshow--0101--who-are-the-kurdish-women-fighting-isis--large.thumb

அமெரிக்காவின் தொடர்ச்சியான கால் வாரல்கள் மத்தியிலும் தம் சுதந்திரத்திற்காகப் போராடி வருகின்றனர் குர்திஷ் மக்கள். ஈராக்கிலும் சிரியாவிலும் தமக்கு என பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன குர்திஷ் போராளிகள். கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் தீரத்துடன் போராடி வரும் சிரியாவில் உள்ள பி.வை.டி எனப்படும் மக்களாட்சி ஒன்றிய உறுப்பினர்கள் 200 பேர் கூடி சிரியாவின் வட கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ளரொஜாவா பிராந்தியத்தை ஒரு இணைப்பாட்சி அரசாகப் பிரகடனப் படுத்தியுள்ளனர். …

Read More »

# Brexit

brexit1

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் ஜேர்மனியும் இணைய வேண்டும் என்ற எண்ணம் இரு நாடுகளிலும் உருவானது. அதுவே ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கு வழிகோலியது. உருக்கிற்கும் நிலக்கரிக்குமான ஐரோப்பிய ஒன்றியம் முதலில் 1951இல் சில ஐரோப்பிய நாடுகளிடையான ஒத்துழைப்பை உருவாக்கியது. பின்னர் 1958இல்ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, லக்சம்பேர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாகப் பல நாடுகள் இணைந்து கொண்டன.1973-ம் ஆண்டு பிரித்தானியா …

Read More »

திருச்சபைகளும் இரண்டாம் பனிப்போரும்

World-War-3

1979-ம் ஆண்டு சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. அங்கு சோவியத் ஒன்றியப் படையினருக்கு எதிராகப் போராட ஐக்கிய அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான் ஆகியவை இணைந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு எதிராகப் போராட வைத்தனர். சோவியத்தின் படைத்துறைச் செலவு ஒரு புறம் அதிகரிக்க வைக்கப்பட்டது. மறுபுறம் அதன் எரிபொருள் ஏற்றுமதி வருமானத்தை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியா எரிபொருள் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரித்தது. புதிதாகஎரிபொருள் உற்பத்தி செய்யும் …

Read More »

சவுதி அரேபியாவின் இறப்புத் தண்டனைகளும் புவிசார் அரசியலும்

Image_257

இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பு தனக்கு எதிரிகள் எனக் கருதுவோர் பலரைத் தலைகளைத் துண்டித்துக் கொலை செய்கின்றது. சவுதி அரேபியா தனது அரசுக்கு எதிரானவர்கள் எனக் கருதுவோரைத் தனது நாட்டுச் சட்டப்படி நீதி விசாரணை செய்து பலரை தலைகளைத் துண்டித்துக் கொலை செய்கின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது மேற்காசியக் நலன்களுக்கு ஆபத்தானவர்கள் எனக் கருதுவோரை விசாரணை இன்றி ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் கொல்கின்றது. இப்படிப் பட்ட தொடர் கொலைகளின் …

Read More »

ஐ.எஸ் அமைப்பின் நிதி மூலம்

isis-soldier-posing-in-front-of-people-digging-their-own-graves

உலகிலேயே மிகவும் செல்வந்தமான தீவிரவாத அமைப்பாக தற்போது ஐ எஸ் அமைப்பு இருக்கின்றது. ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் அமைப்பு இலாபத் திறன் மிக்க எரிபொருள் கிணறுகளைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் வருமானத்தில் பெரும்பாலானவை இந்த எரிபொருள் கிணறுகளில் இருந்து கிடைக்கின்றன. சிரியாவின் அரைப் பங்கு நிலப்பரப்பையும் ஈராக்கின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பையும் ஐ எஸ் அமைப்பு கைப்பற்றி வைத்துள்ளது. தனது கட்டுப்பாடில் உள்ள பிரதேசங்களின் அனைத்துப் பொருளார …

Read More »

சீனாவின் உலக நாயகன் கனவும் உலக நாணயக் கனவும்

MTI3NTgyMzc4MjYzNTg3NDU5

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை,மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிகபடைத்துறைச் செலவு, இரண்டாவது பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்டசீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் எனவும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் என நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை. …

Read More »

பாரிஸ் நகரத் தாக்குதலின் பின்னால்..

paris_shooting_nov15_v10_976

பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது. ஐரோப்பாவில் ஐந்து கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லா வழிசெய்வார் என்பதைக் காட்டுகின்றது என முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி சொன்னது …

Read More »

தீவா ? திடலா ? தென் சீனக் கடலில் முறுகல்

தென் சீனக் கடலில் சீனா உருவாக்கு தீவுகள்ஐக்கிய நாடுகள் சபையின் கடல் தொடர்பான உடன்படிக்கையின் படி தீவா அல்லது திடலா என்ற விவாதத்தை பிலிப்பைன்ஸின் சட்டமா அதிபர் ஒரு புறம் உருவாக்க மறுபுறம் சீனாவிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில்நீயா நானா என்ற போட்டியை உருவாக்கியுள்ளது. அமெரிக்கப் வெளியுறவுத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் ஒரு போர் உருவாகக் கூடிய அபாயம் உள்ளது என்றார். முப்பத்தைந்து சதுர கிலோ மீற்றர் கடற்பரப்பைக் …

Read More »