Thursday , November 21 2019
Home / அரசியல் / ஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை

ஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை

palestineஐநாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை–வேல் தர்மா

ஐக்கியநாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்றபார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 29-11-2012 வியாழன் (நியூயோர்க் நகரநேரப்படி) மாலை ஐக்கியநாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்துஆர்பரித்தனர்.

வாக்களிப்பில் பங்கெடுக்காதநாடுகள்- 41:Albania, Andorra, Australia, Bahamas, Barbados, Bosnia/Herzegovina, Bulgaria, Cameroon, Colombia, Croatia, Dem. Rep. of Congo,Estonia, Fiji, Germany, Guatemala, Haiti, Hungary, Latvia, Lithuania, Malawi, Monaco, Mongolia, Montenegro, Netherlands, Papua NewGuinea, Paraguay, Poland,Korea,Moldova, Romania,Rwanda, Samoa, San Marino, Singapore, Slovakia, Slovenia, Macedonia, Togo, Tonga, United Kingdom, Vanuatu. எதிர்த்துவாக்களித்தநாடுகள்:9 Canada, CzechRepublic, Israel, MarshallIslands, Micronesia, Nauru,Palau, Panama, United States. மூன்று நாடுகள் சமூகமளிக்கவில்லை.

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29/11/1947இல் பலஸ்த்தீனத்தை இரு நாடுகளாகப் பிரித்துஐநாதீர்மானம் நிறைவேற்றி இஸ்ரேலை ஒரு தனிநாடாக்கியது. அப்பிராந்தியம் அதற்குமுன்னர் பிரித்தானிய ஆணைக்குட்பட்டிருந்தது. பிரித்தானியாதனதுஆணையை 18/02/1947இலன்று ஐக்கியநாடுகள் சபையிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.

28-11-2012 வரை ஐநாவில் ஒருதனியுரு (entity)வாகக் கருதப்பட்டபலஸ்த்தீனம் 29-11-12இல் இருந்து ஒரு உறுப்புரிமையற்ற நாடாகக் கருதப்படும். இனி ஐநாபொதுச் சபை விவாதங்களில் பலஸ்த்தீனம் கலந்துகொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது. கத்தோலிக்கர்களின் வத்திக்கானும் ஐநாபொதுச் சபையில் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது. பலஸ்த்தீனம் ஐநாவின் ஒரு முழு உறுப்புரிமை பெற எல்லாத் தகுதிகளும் அதற்குஉண்டு. ஆனால் 2011இல் ஐநாபாதுகாப்புச் சபையில் முழு உறுப்புரிமைபெறக் கொண்டுவரப்பட்டதீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

ஐநாசாசனத்தின் 4(2)இன்படிஒருநாடு முழு உறுப்புரிமைபெறபொதுச் சபையில் மூன்றில் இரண்டுபங்குவாக்குகள் பெற்றுபாதுகாப்புச் சபையும் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். 2011இல் ஏற்பட்டதோல்வியைத் தொடர்ந்து முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாகபலஸ்த்தீனத்தை ஏற்றுக் கொள்ளும் முன்மொழிவு பொதுச் சபையின் முன் வைக்கப்பட்டது.

உறுப்புரிமையற்ற நாட்டின் உரிமைகள்
ஏற்கனவே 132நாடுகள் பலஸ்தீனத்தைஒரு நாடாகதனிப்பட்ட ரீதியில் அங்கீகரித்துள்ளன. உறுப்புரிமையற்றஒருநாடால் ஐநாவின் மற்றஅமைப்புக்களில் உறுப்புரிமைகோரமுடியும். முக்கியமாக பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு, கடற்சட்டஒப்பந்த அமைப்பு, பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் உறுப்புரிமைகோரமுடியும் [ the International Civil Aviation Organization (ICAO), Law of the Sea Treaty (LST), NPT, International Court of Justice (ICJ) and International Criminal Court (ICC) ] ஆகியபன்னாட்டுஅமைப்புக்களில் உறுப்புரிமைபெறமுடியும். நீர்வளம், கடல்,வானம் ஆகியவற்றில் உரிமைகொண்டாடமுடியும். ஆனால் ஐநாவைப் பொறுத்தவரைபலஸ்த்தீனம் ஒரு இறைமைஉள்ளநாடுஅல்ல. 29ஃ11ஃ2012இலன்று ஐநாவிநிறைவேற்றப்பட்டதீர்மானம் பலஸ்தீனர்களின் நாளாந்தஅவலவாழ்க்கையில் பெரியமாற்றம் எதையும் கொண்டுவரமாட்டாது.

மிரட்டும் அமெரிக்கா
பலஸ்த்தீனம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றில் உறுப்புரிமை கோரினால் அமெரிக்கா தனது பலஸ்த்தீனத்திற்கான நிதி உதவிகளை நிறுத்தும் என்று மிரட்டியது. இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் இனக்கொலைகள் தொடர்ப்பாக் பலஸ்தீனம் பன்னாட்டுகுற்றவியல் நீதிமன்றம் சென்றால் தனதுபதில் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலும் பலஸ்த்தீனத்தைமிரட்டியது. ஆனால் ஐநா தீர்மானத்தின் பின்னர் பலஸ்த்தீனத் தலைவர் மஹ்மூட் அபாஸ் முறிந்து போயுள்ள இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை மீளாரம்பிக்கதான் தயார் எனஅறிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஆத்திரம்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டபலஸ்தீனியப் பிராந்தியத்தின் மீதானபன்னாட்டுச் சட்டப்படியானஆதிக்கத்தை ஐநாவின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டதீர்மானம் பாதிக்காது. ஐநாபொதுச் சபையில் பலஸ்த்தீன ஆணையத் (Palestine Authority) தலைவர் மொஹ்மூட் அபாஸ் உரையாற்றும் போது இஸ்ரேலைக் கடுமையாகச் சாடி இருந்தார். ஆனால் அவர் பன்னாட்டு நீதிமன்றம் பற்றிக் குறிப்பிடவில்லை. அபாஸின் உரை ஒரு சமாதான விரும்பியின் உரை-அல்லஎன இஸ்ரேலியம் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாகு தெரிவித்தார். பலஸ்த்தினவெளிநாட்டமைச்சர் இஸ்ரேல் தொடர்ந்தும் சட்டவிரோதக் குடியேற்றங்களை மேற்குக் கரையில் செய்தால் தாம் பன்னாட்டு நீதிமன்றம் போகவேண்டி வரும் என்றார். ஆனால் இஸ்ரேல் தான் மேற்குக் கரையோரத்தில் யூதக் குடியேற்றங்களைத் தொடரப் போவதாகவும் அறிவித்தது.

தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை:
1.பரவலான ஆதரவுமட்டும் போதாது.
பலமான ஆதரவும் வேண்டும்.பலஸ்த்தீனியர்களுக்கு உலகெங்கும் பரவலானஆதரவுஉண்டு இருந்தும் அதனால் ஐநாவில் ஒரு தனியான நாடாகஅங்கீகாரம் பெறமுடியவில்லை. அமெரிக்காபோன்ற பலமானநாடுகள் பலஸ்த்தீனத்திற்கு எதிராக நிற்பதுதான் காரணம். எமக்கு ஆதரவான நாடுகள் என்ற வகையில் நாம் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். போகவேண்டிய தூரம் மிகமிகநீண்டது.

2.அமெரிக்கமாமாவைநம்பாதே
அமெரிக்கா பலஸ்த்தீனர்களுக்கு சொல்வதையே தமிழர்களுக்கும் சொல்கிறது. நேரடிப் பேச்சுவார்த்தை மூலமேபிரச்சனையைத் தீர்க்கவேண்டும்.

3. பொருளாதாரத்திற்குஎதிரிகளில் தங்கியிருக்கக் கூடாது.
பலஸ்த்தீனஆணையம் 1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்துகொண்டஒப்பந்தத்தின் படிஉருவாக்கப்பட்டது. ஆனால் பலஸ்த்தீனஆணையம் தனதுவருமானத்திற்கு இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் தங்கியிருக்கிறது. இதனால் இஸ்ரேலையும் அமெரிக்காவையும்  அனுசரித்துப் போகவேண்டியநிலையில் பலஸ்த்தீனமக்கள் உள்ளனர்.

4. உள்ளகப் பிளவுடனும் முன்னோக்கி நகரலாம்
2007இல் பலஸ்த்தீனர்களின் இரு பிரிவுகளான ஹமாஸ் இயக்கமும் பலஸ்த்தீனவிடுதலை இயக்கமும் மோதிக் கொண்டன. ஹமாஸ் காசாநிலப்பரப்பைதனதுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பலசிறு கூறுகளாக இஸ்ரேலால் பிரிக்கப்பட்ட மேற்குக் கரையோரத்தில் பலஸ்த்தீனவிடுதலை இயக்கம் தனதுகட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சிலபிரதேசங்களில் இஸ்ரேலும் பலஸ்த்தீனவிடுதலை இயக்கமும் இணைந்து அதிகாரம் செலுத்துகின்றன. ஹமாஸ் இஸ்ரேலுடன் ஆயுதமுனையில் மோதிக் கொண்டிருக்கபலஸ்த்தீனவிடுதலை இயக்கம் பேச்சுவார்த்தை மூலம் முன்னோக்கிச் செல்கிறது

5. ஐரோப்பாவை மாற்றலாம்
மேற்குஐரோப்பியநாடுகள் பலபலஸ்த்தீனத்திற்குஆதரவாகவாக்களித்துள்ளன. முறையானபிரச்சாரம் இதற்குஉதவியுள்ளது. பலஸ்த்தீனியப் பிரச்சனைஊடகங்கள் முதல் கொண்டுபல்கலைக் கழகங்கள் வரைஆய்வுசெய்யப்படுகின்றன. பாடசாலைகளும் பலஸ்த்தீனப் பிரச்சனைஆய்வுசெய்யப்படுகின்றது. இதனால் பலஸ்த்தீனியர்களின் போராட்டத்தின் நியாயமும் இஸ்ரேலின் அக்கிரமமும் ஐரோப்பியநாடுகளில் நன்குஉணரப்பட்டுள்ளன்.

6. பொருளாதார பலம்
ஸ்பெயின் ,கிரேக்கம் போன்றநாடுகள் மத்தியகிழக்கில் தமதுவர்த்தகத்தைவிரிவுபடுத்தவிருப்பம் கொண்டுள்ளன. பலஸ்த்தீனத்திற்குஎதிரானநிலைப்பாடு இதற்கு உதவாது என்பதை அவை உணர்ந்தே பலஸ்தீனத்தை ஐநாவில் ஆதரித்தன. உலகெங்கும் வாழ் தமிழர்கள் பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து திரளவேண்டும். ஏற்கனவே அரபுநாடுகளுடன் நல்ல வர்த்தக உறவைக் கொண்ட பிரித்தானியா தனது வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே நடுநிலை வகித்தது. பலஸ்த்தீனத்திற்குஎதிராகவாக்களிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஜேர்மனி நடுநிலை வகித்ததும் வர்த்தக நலன்கள் சார்ந்தே.

7. புலம் பெயர்ந்தோர் பலம் நிறைந்தோர்
அரபுநாடுகளில் அதிகஆதிக்கம் செலுத்தவிரும்பும் பிரான்ஸ் லிபியா,சிரியா,ஈரான் போன்றநாடுகளின் பிரச்சனையில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது. இஸ்ரேலுடன் மறைமுகமாக நல்லஉறவையும் பிரான்ஸ் பேணிவருகிறது. ஆனால் தற்போது பிரான்ஸில் ஆட்சியில் இருப்பவர்கள் அங்குவாழ் இசுலாமியர்களின் வாக்குவங்கியில் பெரிதும் தங்கியிருக்கின்றனர். பிரான்ஸ் பலஸ்த்தீனத்திற்குஆதரவாகவாக்களித்தமைக்குஅங்குவாழும் இசுலாமியர்களே முக்கிய காரணம்.

8. வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவேண்டும்
இலங்கையின் வடக்குக் கிழக்கைசிங்களப்படைகள் மீட்கப்பட்டபிரதேசம் என்கின்றன. அது தமிழர்களின் பாரம்பரியத் தாயக பூமிஅது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமிழர்கள் முதலில் இழந்தனர். 1980களின் பின்னர் அதில் பெரும் பகுதியைதமிழர்கள் தமதுபடைக்கலலேந்தியபோராட்டத்தின் மூலம் மீட்டனர். தற்போதுதமிழர் தாயகம் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகிவிட்டது என்ற உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ளச் செய்யவேண்டும்.

9. ஆட்சிமாறலாம் காட்சிமாறாது
ஜேர்ஜ் புஷ்ஷின் ஆட்சிபோய் பாராக் ஒபாமாவின் ஆட்சிவந்ததுமத்தியகிழக்கில் அமெரிக்கக் கொள்கைமாறும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் இல்லை. இதேபோல் இந்தியாவில்  காங்கிரசின் ஆட்சிபோய் பாரதிய ஜனதாக் கட்சிஆட்சிக்குவந்தால் தமிழர்களுக்குசாதகமானசூழல் உருவாகலாம் என்கின்றனர் சிலர். ஆனால் தற்போதுபெரியநாடுகள் தமதுவெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, நிதிக் கொள்கைஆகியவற்றில் ஆட்சிகள் மாறும் போதுமாறாமல் இருக்கக் கூடியநிலையைஉருவாக்கியுள்ளன. பாரதிய ஜனதாக் கட்சிஆட்சிக்குவந்தால் தமிழர்களுக்கு மோசமான நிலை ஏற்படலாம் என்பதை சுஸ்மா சுவராஜ்ஜிற்கும் சிங்களவர்களுக்கும் இடையில் உருவாகிய உறவு உணர்த்துகிறது.

About Web Admin

Web Admin
As the name implies Oru Paper had a humble and simple beginning and now is very popular and highly sought after. It is in its eighth year of publication. It is an open platform like and anyone can give his or her views. There is something for everyone, elderly, not so elderly, youngsters and even the kids.

Check Also

corbyn

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …

Leave a Reply