அகவணக்கமும் அரைகுறைகளும்

564

எமக்கு குறை ஒன்றும் இல்லை என்றுசொல்லும் போதே, ஒரு நிறைவான செய்தியைச் சொல்லுவது போல மனம் நிறைகின்றது. மனித மனம் மிகவும் விசித்திரமானது. பாதி தண்ணீர் நிறைந்த குவளையை பார்த்து ஒருவர் பாதித்தண்ணீர் குறைந்துள்ளது என்று கவலைப்படலாம். இன்னொருவர் அதே குவளையை பார்த்து பாதித்தண்ணீர் நிறைந்துள்ளது என்று சந்தோசப்படலாம். எதுவுமே நீங்கள் வாழ்கையை பார்க்கும் வித்தில் அது குறைவாகவும், நிறைவாகவும் தெரியும். நிறைவாக பார்க்கத் தெரிந்தால், மனம் மகிழ்வாகவும், சோர்வின்றியும் இருக்கும், மனம் மகிழ்வாக இருப்பவர்களைச் சூழ இருப்பவர்களும், அவர்களின் மகிழ்ச்சியும், உற்சாகமும் தொற்றிக் கொள்வதால் அவர்கள் இருக்கும் இடம் கலகலப்பாகவும் உற்சாகமான இடமாகவும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இலகுவாக மற்றவர்களையும் சேர்ந்து தம்மோடு இயக்கி அதைச்செய்து முடித்து விடுவார்கள். இது ஒரு தனிமனிதன் தன்னையும், தன் வாழ்க்கையையும் குறை ஒன்றும் இல்லை என்று நிறைவாக, பார்க்கும் முறைமையில் தங்கியுள்ளது.

இது ஒரு இனத்திற்கும், சமூகத்திற்கும் பொருந்தும். ஒரு இனம் தனது இனத்தையும், தன்னை சார்ந்த சமூகத்தையும் நிறைவாகப் பார்க்கும் போது, அதையிட்டு மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, பெருமை என்று உற்சாகம் கொள்கிறது. தனது இனத்தின் பெயரையும், மொழியையும், கலாச்சாரத்தையும், உணவு வகைகளையும், உடைகள், வழிபாட்டு முறைகள், சம்பிரதாயங்கள் என்று எல்லாவற்றையுயும் பெருமையுடனும், நிறைவாகவும் ஏற்றுக்கொள்கிறது. நான் தமிழன், எனது மொழி தமிழ், எமது மண் என எல்லாவற்றையும் இறுக பற்றிக் கொள்ள விளைகிறது.

இப்படியாக உணர்வு அந்த இனத்தை கட்டிஎழுப்பும், உற்சாகமாக முன்னெடுக்க விளையும். அவ்வினத்தின் மேல் போடப்படும் தடைகளையும், அடக்குமுறைகளைகளையும் தகர்த்தெறியும் ஆற்றலையும் கொடுக்கும். ஆனால் அவ்வினத்தினை கையாள, அவ்வினத்தை நாம்விருப்பியபோது, விருப்பியபடி உபயோகிக்கவிரும்பும் வெளிச்சக்கிகளும், அவ்வெளிச்சக்திகளை அண்ணாந்து பார்க்கும் எம்மவர்களும், எப்பொழுதுமே அவ்வுணர்வுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், இல்லாத பயத்தையும், அடிபணிந்து போகும் இசைவுத் தன்மையையும் எம்மிடம் உண்டுபண்ணும் வகையில் நடைமுறைகளை திசைதிருப்பி விடுகிறார்கள்.

உதாரணத்திற்கு அகவணக்கம் என்னும் முறைமையை எடுத்துக்கொண்டால், அது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றாக இருந்தாலும், எமது விடுதலைப்போராட்டம் எழுச்சி பெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியிலேயே இது பரவலாக பேசப்படும் அல்லது நிகழ்ச்சி தொடங்க முதல், எல்லோராலும் கடைப்பிடிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகின்றது.

அதன் படி ‘தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறீலங்கா, இந்தியப்படைகளாலும், இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக’ என்று சொல்லி 2 நிமிட மௌனமாக அகவணக்கம் செலுத்துவது முறைமையாக இருந்தது. தாயகத்தில் இராணுவக் கெடுபிடி, காணாமல் போதல் போன்ற அச்சுறுத்தல்களால் இதை முழுக்க சொல்லமுடியாத நிலைமை காணப்படலாம். ஆனால் புலத்தில் அதற்கொரு தடையும் இல்லை.

தமிழீழ விடுதலைப்போரில் தீலீபன் முதல் அன்னை பூபதி அம்மா வரை பல வடிவில் எமதுமக்கள் மாவீரர்கள் ஆகினார்கள் என்பது வரலாறு, அது போல அநியாயமாக சிறீலங்கா, இந்திய படைகளாலும், இரண்டகராலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை. அவர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்துவதில் நாம் ஒரு செய்தியை எமது தலைமுறைக்கு சொல்லுகிறோம்.

இதையே மற்றைய சமூகங்களும், பொப்பிடே, இரட்டைக் கோபுரத்தாக்குதல் என்று பல விதமான முறைகளில் தமது வரலாற்றையும், அவர்கள் நடந்து வந்த பாதையையும் நினைவு கூருகின்றாÖர்கள். அதன் மூலம் ஒரு அரசியல் செய்தியையும் உலகிற்கு சொல்கிறார்கள்.

ஆனால் எமது சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், அநியாயத்திற்கு கொஞ்சம் குரல்வளம் நன்றாக இருக்கிறது என்று, சில அரைகுறைகளை மேடைக்கு ஏற்றினால், அவர்களும் அகவணக்கம் செய்வோம் என்ற பெயரில் அதையும் அவர்களைப் போலவே, அரையும் குறையுமாகச் செய்கிறார்கள். அரசியல் செய்திவிளங்காமல் செய்கிறார்களா? அல்லது விளங்கித்தான் வேண்டும் என்றே செய்கிறார்களா என்பதுதான் கேள்வி.

நாங்கள் சமூக நிறுவனம், நாங்கள் பழைய மாணவர்கள் சங்கம் எங்களுக்கம் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வதுவும், ஒருவிதமான அரசியல்தான். பொது மக்களான நாங்கள் தான் பார்த்துக் கொண்டு இருக்காது, உமக்கு பிரச்சனை என்றால் இன்னெருவரிடம் விடும், பிரச்சனை இல்லாதவர் வணக்கத்தை செய்து முடிக்கட்டும் என்று சொல்ல வேண்டும்.எமது வரலாற்றை மறைப்பதற்கும், திசைதிருப்புவதற்கும் பலர் முனைப்பாக உள்ளார்கள்.

இப்படித்தான் நச்ஞிஞ்கு கச்ஙூக்ஷச்ஙூ இல் உள்ள ஒரு நலன்புரி அமைப்பின் வருடாந்த விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அகவணக்கத்தை இரண்டு சொல்லில் `இறந்த மக்களுக்காக’ அகவணக்கம் செலுத்துவோம் என்றார். லண்டனில்இறந்த மக்களை சொல்கின்றாரா? எதுக்காக அகவணக்கம் செய்கின்றோம் என்பது உண்மையிலேயே தெரியாமல் தான் இவர்கள் சொல்கிறார்களா ? அல்லது தெரிந்துதான் வேறு அரசியல் காரணங்களுக்காக அதை மாற்றுகிறார்களா ? இது போல மூன்று வாரங்களுக்கு முன்நடந்த தாயகத்தில் உள்ள, ஒரு பழைய மாணவர் வருடாந்த கூட்டத்தில் அகவணக்கம் செலுத்தும் போது `அண்மையில் இயற்கை எய்திய இரண்டு ஆசிரியர்களுக்கு மட்டும்’ அகவணக்கம் செலுத்தினார்கள். (அத்தோடு அவ்விரு ஆசிரியர்களைப்பற்றி ஒரு சிற்றுரை ஆற்றியிருக்கலாம்) அகவணக்கத்தில் மற்றைய வசனங்களைச் சொன்னால் இவர்கள் கடினப்பட்டு சேர்ந்து சிறீலங்காவின் கட்டுபாட்டில் இருக்கும் பாடசாலைத் திருத்தக் கொடுக்கும் பணத்தை பாடசாலை வேண்டாம்என்று சொல்லி விடும் போல. இத்தனைக்கும் அப்பாடசாலையில் முன்பு படிப்பித்த ஆசிரியர் ஒருவர் சிறீலங்காவின் எறிகணைத்தாக்குதலில் பலந்த இரத்தப்போக்கினால், முன்பு அநியாயமாக அகாலமரணம் கூட எய்தியிருந்தார்.

வரலாறு ஓர் இனத்தின் வழிகாட்டி. எமதுசுயநலத்திற்காக எமது வரலாற்றைத் தொலைத்தவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.