அனைவரும் வாழ்வில் பெரும் வெற்றி பெற நிரூபிக்கப்பட்ட முறை

99

இனிய காலை வணக்கங்கள்,

வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பதன் மூலமே நமது வாழ்வுக்கான ஒரு அர்த்தத்தை தேடி கொள்ள முடியும்.உலகில் எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உற்சாகமா இருக்க தொடங்குவதுதான் உங்களின் முதல்படி, இந்த உலகில் இருக்கும்,இனி வரபோகின்ற எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல்களும் உங்களினுள் உண்டு.அதை நீங்களாக வெளிகொணரும் போதே சக்தி வருகின்றது.அந்த சக்தி உங்களுக்கும் உலகிற்கும் தேவையான எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றது.

உங்கள் வாழ்வு என்பது ஒரு நாளில் வாழ்வதுதான்,நீங்கள் ஒரு நாளை எவ்வாறு வாழ்க்கின்றீர்கள் என்பதை வைத்து நீங்கள் வாழ்நாட்கள் முழுவதையும எப்படி வாழ்வீர்கள் என்பதை நீங்களே அனுமானித்து கொள்ளலாம்.ஒரு நாளை சரியாக வாழ உங்களுக்கு தெரிந்திருந்தால் போதும்,ஒரு நாளை சரியாக வாழ,சரியான ஒரு தொடக்கம் தேவை,அந்த தொடக்கத்தை நீங்கள் சரியாக நேரத்தில் சரியான இடத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டால் அன்றைய நாள் உங்கள் கையில் வந்து விழுந்துவிடும்.எனவே நீங்கள் உங்கள் வாழ்வை நெறிப்படுத்த ஒரு நாளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்,அந்த நாளை நெறிப்படுத்த அந்த நாளின் காலை வேளையை எடுத்து கொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்,ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது ஒரு நாளின் காலை வேளைதான்.

காலை வேளையை எப்படி கையாளுவது என்று பார்ப்போம்..இங்கிருந்து உங்களின் உடல் உள சமூக ஆரோக்கியத்தை நீங்களே கட்டியெழுப்புவதன் மூலம் உங்கள் வாழ்க்கைகான அர்தத்தை நீங்கள் தேடி கொள்ள முடியும்.

1.அதிகாலையில் துயில் எழுந்து கொள்ளுங்கள்.காலைகடன்களை நிறைவேற்றி கொள்ளுங்கள். நேரம் (4.45-5.15am)

2.உடல் தேகத்தை உறுதி செய்ய சில உடற்பயிற்சிகளை தினமும் செய்து கொள்ளுங்கள் ( 25 நிமிடங்கள் )

3.உளவுரனை உறுதி செய்து கொள்ள தியானம் மூச்சு பயிற்சி என்பவற்றை மேற்கொள்ளுங்கள் ( 10 நிமிடம் )

4.நல்ல புத்தகங்களை தினமும் படித்து கொள்ளுங்கள்.

5.உங்களின் அன்றைய நாளுக்குரிய தொழில்,படிப்பு சம்பந்தமான மெயில்கள்,திட்டங்கள்,குறிப்புகளை எடுத்து ஒழுங்கி பண்ணி தயாராக வைத்துகொள்ளுங்கள்.

6.வழக்கமான உங்களிடத்தில்,அறையில் இருந்து அன்றைய தினத்துக்குரிய திட்டங்களை மனதில் தீட்டி சரி பார்த்து கொள்ளுங்கள்.

7.சுகமாக நீராடுங்கள்.

காலை உணவாக சிறிதளவு பொருத்தமான உணவுகளை சாப்டுவிட்டு,அன்றைய நாளின் உங்களின் வேலைகளை ஆரம்பியுங்கள்..இதுவே ஒரு நாளினை அர்த்தப்படுத்த தேவையான காலை பொழுதில் நீங்கள் செய்ய வேண்டியவை.இதுவே தொடரும் போது உங்கள் வாழ்க்கைகுரிய அர்த்தத்தை பெற்றுதரும்.

அக்கட்டுரை தொடர்பான கருத்துக்கள்,மற்றும் உங்கள் கேள்விகளை [email protected] க்கு அனுப்புங்கள்.