தியாவட்டவான்
கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த பழமை வாய்ந்த தமிழ் கிராமம் தியாவட்டவான். அதுதற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன. தியாவட்டவான் கிராமத்தில் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை, ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்துவந்தது, இலங்கையில் ஒரேயொரு கடதாசித்தொழிச்சாலையாக இது இருந்தது. கொழும்புநாரகென்பிட்டியவில் இதன் உபநிலையம் உள்ளது. எண்பது காலகட்டத்தில் இக்கடதாசி தொழிச்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். அதில்சுமார் பத்து வீதத்திற்கும் குறைந்தவர்களேமுஸ்லிம் தொழிலாளர்கள். அதிலும் உயர்பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். இக்கடதாசித் தொழிற்சாலையும் தற்போது முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்று விட்டது.

தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் காடையர்களால் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1985 மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர்.இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவிஇருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம்இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றிமுஸ்லிம்கள் தமது வியாபாரம், மரக்கடத்தல்கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காகஇராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும்வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்தியஇராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர்.

ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்து மீறிக் குடியேறியிருந்தனர். தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம்பெற்றிருந்தது. மக்கள் எங்கு முறையிட்டாலும்உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். மீண்டும் அவர்கள் மீதும் 1990 ஐ×ன் மாதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ்கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாகமாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90சதவீதமானவர்கள் முஸ்லிம்களே.

ஓட்டமாவடி
ஓட்டமாவடி கிராமம் ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன்மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர்.ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவேஇருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன்மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத்தலம்.முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது. தமிழர்களின் மயானமும்மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர்.ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு இருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.

இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தமுடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர்.அங்கிருந்த பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்குமுன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக மாற்றப்பட்டு முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வன்முறைகள் மற்றும்தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.

இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியானமாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது. இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் கக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற்பட்டனர்.

உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப்பொறுத்தவரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பலஇடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதானநெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒருசில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடி யேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பதுகிராமங்கள் வரை அமைத்துள்ளனர்.

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – ஒன்று

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – இரண்டு

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – மூன்று

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – நான்கு

– இராஜ் ஆனந்தன்