அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்

1376

ஏறாவூர்
ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜுன்மாதத்திலும் இடம் பெற்றன. ஏறாவூர் தமிழ்கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழங்கம்.இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.

இதனால் தமிழ் பகுதியைப் பார்த்துஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கானபல ஏக்கர்கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்துஜின்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.

கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும்வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்டமுஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர்.

இதுதவிர முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.

அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.

மீனோடைக்கட்டு
மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம். ஆனால், தற்போது அது ஒருமுஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, கோயில்கள், வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது. தற்போது அங்குஅரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது.

திராய்க்கேணி
மீனோடைக்கட்டைப்போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களைஎல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன. இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது.

இதனால்வழக்கம்போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர். ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால், இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் காலஞ்சென்ற அமைச்சர் அஸ்ரப். அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே.

இதற்குப் பின்னர் 06.08.90 இல் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர். வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர்.

கரவாகு
கரவாகு கிராமம் மிகவும் தொன்மை மிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ் டிவிசன் என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1965 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது.

இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்ததமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன.

அவை மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள்விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டைஎன்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1965 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில் இருந்தார்.

தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது.

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – ஒன்று

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – இரண்டு

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – மூன்று

அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் – பாகம் – நான்கு

– இராஜ் ஆனந்தன்