அர்த்தமில்லாத அடையாளப் போரட்டம்

685

ஈழத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஒரு போலியான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் நேச சக்திகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தல்களை நடாத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அங்கு சனநாயக நடைமுறை காணப்படுவதாகக் காட்டிக் கொண்டு, உண்மையான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தலையெடுக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன. இச்செயற்பாட்டில் சிறிலங்காப் படைகளும், ஓட்டுக் குழுக்களும் மாத்திரமல்லாமல், சில தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்தவார இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இனந்தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலின் பின்னணியில் சிறிலங்காப் படைகளும், அவர்களுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுவினரும் இருப்பதாக பரவவலாக நம்பப்படுகிறது. யாழ்பாணத்திலும், பல்கலைக்கழ வட்டகையிலும் காணப்படும் இராணுவ கெடுபிடிகள், இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் மாணவர்களைத் திரட்டி பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை தவபாலசிங்கம் முன்னெடுத்து வருகிறார். தாக்கப்படுவதற்கு முன்னர் அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து உரையாடியதாகத் தெரியவருகிறது.

தவபாலசிங்கம் தாக்ககப்பட்டமை போலவே அண்மையில் யாழ் உதயன் பத்திரிகையைச் சேர்நத ஊடகவியலாளர் குகநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனின் செயலாளர் ரமேஸ் ஆகியோர் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய செயற்பாட்டாளர்கள் மீதான இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் வன்முறை என்பது புலனாகிறது.

இந்நிலையில் சில தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்குமிடத்து, அவர்கள் தற்போதைய சூழலை வாய்ப்பாக பயன்படுத்துகிறார்களா என ஐயப்படவேண்டியுள்ளது. அண்மையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி முன்னின்று நடாத்திய அடையாள உண்ணாவிரதம் ஈழத்தில் அமைதிவழியிலான அரசியற்போராட்டங்களை நடாத்துவதற்கான சூழநிலை நிலவுவதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்த எடுத்த ஒரு முயற்சியாகவே தெரிகிறது.

மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்குரிய வெளியொன்றை உருவாக்காமல், இராணு அடக்குமுறைக்குள் இருக்கும் அவர்களை வைத்து அரசியல்வாதிகள் நடாத்தும் போராட்டங்கள் எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை;