அறிவை அமெரிக்காவில் கழட்டி வைத்து விட்டு வந்த கோட்டபாய

132

•எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை சிறிலங்கா மக்கள் பெற்றிருக்கிறார்கள்?

இரவில் ஊரடங்கு சட்டம்போட்டுவிட்டு பகலில் ஊரடங்கை ஜனாதிபதி தளர்த்தினார். இதன் மூலம் பகலில் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார்.

வெள்ளவத்தையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த ஜனாதிபதி பக்கத்து ஊரான பம்பலப்பிட்டியில் ஊரடங்கை தளர்த்தினார். இதன்மூலம் கொரோனா எந்தெந்த இடங்களில் வரும் என்பதையும் ஜனாதிபதி அறிந்திருந்தார்.

அதுமட்டுமல்ல இறந்தவர்களுக்கு தமிழர் நினைவு அஞ்சலி செலுத்தினால் கொரோனா வரும் என்பதையும் ஆனால் கொழும்பில் போர் வெற்றிவிழா கொண்டாடினால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதையும் ஜனாதிபதி அறிந்திருக்கிறார்.

இறுதியாக, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மற்றவர்களுக்குதான் மாஸ்க் அவசியம். ஆனால் தனக்கு மாஸ்க் அவசியம் இல்லை என்பதையும்கூட ஜனாதிபதி அறிந்து வைத்திருக்கிறார்.

இப்போது கூறுங்கள். இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை வேறு எங்கேயாவது கண்டிருக்கிறீர்களா

சுமந்திரன் பாணியில் சொல்வதானால் இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை பெற்றதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் அல்லவா?

குறிப்பு – மொழிபெயர்ப்பு செய்பவர்கள் “பாக்கியம்” என்பதை “அதிர்ஸ்டம்” என்று செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.