அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும்

727

அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும்
சாத்திரி (ஒரு பேப்பர்)

பிரான்சில் தேர்தல் இந்த மே மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தடைவை வலது சாரிக்கட்சி ஆட்சியில் இருந்து விட்டது இரண்டாவது தடைவை வலது சாரிக்கட்சியில் நிக்ககோலா சார்க்கோசி பிரான்சின் அதிபராகியிருந்தார். எனவே இந்தத் தடைவை சோசலிசக்கட்சியிடம் பிரான்ஸ் மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே கருத்துக்கணிப்புக்களும் ஊடகசெய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. சோசலிசக் கட்சியின் வேட்பாளர் François hollande கருத்துக்கணிப்புக்களில் முதலிடத்தில் இருந்தார். சார்க்கோசி இந்தத் தடைவை போட்டியிடமாட்டார் என்பது போல போக்கு காட்டிக்கொண்டிருந்தவர் திடீரென தேர்தல் களத்தில் குதித்தார்.தேர்தலில் குதித்த எல்லாக்கட்சிகளுமே முன்வைத்த முக்கியமான விடையங்கள் பொருளாதார சரிவு. வேலையில்லா திண்டாட்டம். வெளிநாட்டவர்களின் வருகை எனபதே பேசு பொருளாகியிருக்கின்றது. அதிதீவிர வலது சாரிக்கட்சியோ (F.N) வழைமை போல வெளிநாட்டவர் வருகையை தடுக்கவேண்டும் என்றும் பிரான்ஸ் ஜரோப்பிய ஒன்றித்திலிருந்து வெளியேறவேண்டும் என்பதே அதன் தலைவி Marine lepen அவர்களின் முக்கிய பிரச்சாரம்.நான் ஆட்சிக்கு வந்தால் முதலாவது வேலையாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்சை நீக்கி பொருளாதார கொள்கைளில் மாற்றம் கொண்டு வருவேன். அதோடு வெளிநாட்டவர் வருகை அதோடு ஆசிய ஆபிரிக்க அகதிகளின் வருகையையும் கட்டுப்படுத்துவேன் என்று அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவிட்படி சார்க்கோசி களத்தில் குதித்ததும் மற்றைய கட்சிகள் வாயடைக்க கருத்துக்கணிப்பில் சார்க்கோசியின் புள்ளிகள் மளமளவென மேலேறி சோசலிச கட்சி வேட்பாளரை தொட்டு நின்றது.இப்படி தேர்தல் களம் சூடு பிடித்துக்கொண்டிருக்கும் பேது ஒரு துப்பாக்கிச்சூடு அத்தனை யையும் புரட்டிப்போட்டது.

11 ந்திகதி மார்ச் மாதம்பிரான்சின் துலூஸ் நகரப் பகுதியில் வசிக்கும் ஒரு இராணுவவீரர் தன்னுடைய ஸ்கூட்டர் விற்பனைக்குள்ளதாக இணையத்தில் ஒரு விளம்பரத்தை போடுகிறார். விளம்பரத்தை போட்டவர் ஸ்கூட்டர் பற்றிய விபரத்தை மட்டும் போட்டிருக்கலாம். ஆனால் அவரிற்கு வேண்டாத வேலை தான் ஒரு இராணுவ வீரன் என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கிறார். இங்குதான் வினையே ஆரம்பமானது. அவரது ஸ்கூட்டரை வாங்க விரும்புவதாகவும் அவர் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அன்று மாலை நேரம் அந்த நகரத்தின் ஒரு பொது வாகனத் தரிப்பிடத்திற்கு வருமாறும் ஒரு தொலைபேசி அழைப்பு அவரிற்கு வந்திருந்தது. ஸ்கூட்டர் விற்ற பணத்தை காசாக வாங்கலாமா? காசோலையாக வாங்கலாமா ? என்று நினைத்தபடி வாகனத்தரிப்பிடத்தில் போய் காத்திருந்தவரை நோக்கி இன்னொரு ஸ்கூட்டரில் இருவர் வருகிறார்கள். வந்தவர்களில் ஒருவன் அவர் அருகில் வந்ததும் திடீரென துப்பாக்கியை எடுத்து அவரது நெற்றியில் பொட்டென்று போட்டவன் .அவரது ஸ்கூட்டரை எடுத்தக்கொண்டு தலைமறைவாகிவிடுகிறான். அப்பொழுதான் சனிபகவான் ஏழாம் வீட்டிலிருந்து சார்கோசியை பார்த்து புன்னகைக்கிறார்.15.03.12 அன்று அதே நகரத்தில் இன்னொரு பகுதியில் ஸ்கூட்டரில் வந்த இருவர் இயந்திர தப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார்கள். இறந்தவர்கள் மூன்று பிரெஞ்சு இராணுவத்தினர். ஆனாலும் வேற்று இனத்தவர்கள். இப்பொழுது இரண்டாவது தடைவையாக சனிபகவான் சார்கோசியை பார்த்து சிரிக்கிறார். 20.03.12 அதே நகரத்தின் இன்னொரு பகுதியில் யூத இனத்தவர்களின் மத பாடசாலையின் முன்னால் ஒரு ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுடுகிறார்கள் மூன்று யூத குழந்தைகள் சுருண்டு விழுகிறார்கள்.இப்பொழுது சனிபகவான் சார்கோசியை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதுவரை உள்நாட்டு பிரச்சனையாக இருந்த விடயம் சர்வதேச பிரச்சனையாகின்றது.இஸ்ரேலிய பிரதமர் கண்டிக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் எல்லாம் தங்கள் கமராவை பிரான்ஸ் நோக்கி திருப்புகின்றனர்.பரபரப்பாக நடந்து கொண்டிருந்த அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் இரத்துச் செய்யப்படுகின்றது. பிரான்சில் சார்க்கோசியின் நிருவாகத்தில் பொதுமக்களிற்கு மட்டுமல்ல குழந்தைகளிற்கும் பாதுகாப்பில்லை என்கிற குற்றச்சாட்டை சோசலிச கட்சி பிரமுகர் வீசுகிறார். அமைச்சரவை கூடுகின்றது . உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றார்கள். காவல்த்துறை கொலையாளியை கண்டு பிடிக்க தனிப்படைகளை அமைக்கின்றது. அப்பொழுதான் கொலையாளி பற்றிய முதலாவது ஆதாரம் சிக்குகின்றது. முதலாவதாக சுட்டுக்கொல்லப் பட்டவனின் ஸ்கூட்டர் இலக்கத்தை எடுத்த காவல்துறை அதில் பொருத்தப் பட்டிருக்கும் எலெக்றோனிக் தகட்டினை GPS முறைமூலம் தேடிய பொழுது அது காட்டிய புள்ளியில் போய் பார்க்கின்றார்கள். அது ஒரு வாகனத் திருத்துமிடம் ஸ்கூட்டரின் எலெக்றோனிக் தகடு தனியாக கழற்றிப் போடப்பட்டிருந்தது.அடுத்ததான கொலையாளியின் தொ.பே இலக்கத்தை கண்டு பிடித்த காவல்துறையினரின் இன்னொரு பிரிவினர் அதனை ஒட்டுக்கேட்கத் தொடங்கியிருந்தனர்.கொலையாளி அடையாளம் காணப்படுகிறான் முகமட்மேரா வயது 23 அல்ஜீரிய இனத்தை சேர்ந்தவன். அவனது விலாசத்தை அறிந்து கொண்ட கவல்துறையினர் அதன் அமைவிடம் பற்றியும் அவனது குடும்பம் பற்றிய விபரங்களை உடனடியாக சேகரித்து முடித்தனர்.

21.03 அதிகாலை 03.10 மணி
கொலையாளி தனியாக வசித்து வந்த வீடு காவல்த்துறையால் சுற்றிவளைக்கப்படுகின்றது. ஆட்களின் நடமாட்டத்தை அறிந்த கொலையாளி யன்னலை திறந்து பார்த்து காவல்த்துறை சுற்றி வளைத்ததை அறிந்தது தானியங்கி துப்பாக்கியால் சுடுகிறான். இரண்டு காவல்த்துறையினர் காயமடைகின்றனர்.

அதிகாலை 03.30
காவல்த்துறையினர் கொலையாளியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதெனவும் அதே நேரம் அந்த குடியிருப்பில் உள்ளவர்களை பத்திரமாக வெளியேற்றுவதெனவும் முடிவு செய்து பேச்சு நடத்துவதற்காக ஒரு negotiator வவைழைக்கப்பட்டதோடு குடியிருப்பிலிருந்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

காலை 5.00 மணி
பேச்சு வார்ததை நடத்துவதற்கு இலகுவாக கொலையாளிக்கு ஒரு நடைபேசி(வோக்கி ரோக்கி) கொடுப்பதெனவும் அதற்கு பதிலாக அவன் தன்னிடமிருக்கும் ஆயுதங்களில் ஒன்றை வெளியில் எறியவேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகின்றது அதற்கு கொலையாளியும் இணங்குகிறான். அவர்களது பேச்சு வார்தையை பிரான்ஸ் அதிபர் சார்க்கோசியிலிருந்து முக்கிய அதிகாரிகள் புலனாய்வு துறையினர் அனைவருமே கேட்பதற்கு வசதி செய்யப் படுகின்றது.

காலை 5.30 மணி
கொலையாளியின் குடும்பத்தில் தாயார் அவரது சகோதரி இரண்டு மூத்த சகோதரர்கள் அனைவரும் வெவ்வேறு வீட்டில் கைது செய்யப்படுகின்றனர்.

காலை 7.20 மணி
கொலையாளிக்கு வோக்கி ரோக்கியொன்று யன்னலால் எறியப்படுகின்றது அவனும் colt 45 ரக துப்பாக்கியை ஜன்னலால் எறிகின்றான். பேச்சு வார்தை தொடங்குகின்றது அவனும் தன்னை அல்லாவின் இராணுவம் என்று அறிவித்தபடி பேசத் தொடங்குகிறான்.ஆப்கானிலும் ஈராக்கிலும் பொது மக்களை கொன்றதற்காக பிரெஞ்சு இராணுவத்தினரை கொன்றதாகவும் பாலஸ்தீனத்தில் குழந்தைகளை இஸ்வேல் கொலை செய்ததற்காக அதன் வலி யூதர்களிற்கும் தெரியவேண்டும் என்பதற்காக யூதக் குழந்தைகளை கொன்றதாக தெரிவித்தவன் நிறையவே பேசினான்.

காலை 9.15 மணி
அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் மேலும் பல ஆயுதங்களை காவல்துறையினரால் கைப்பற்றப்படுகின்றது. கொலையாளியிள் வீட்டில் பயங்கர வெடிபொருட்கள் இருக்கலாமென நினைத்து அந்தப் பகுதியின் மின்சாரம் தண்ணீர்.மற்றும் காஸ் இணைப்புக்கள் துண்டிக்கப்படுகின்றது.

காலை 11.00
பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒரு கி.மீற்றர் தூரத்திற்கு அப்பால் நகர்த்தப்பட்டு தடை போடப்படுகின்றது பத்திரிகையாளர்களிற்கு செய்தி கொடுப்பதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுகிறார்.இனி அவர் சொல்வதுதான் செய்தி.

மதியம் 12.05
கொலையாளி மீண்டும் தொடர்பு கொள்கிறான் நாட்டின் அதிபரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் உசாராகின்றனர். தொடர்பு கொண்டவன் தனக்கு பசிக்கின்றது ஒரு KEBAB Sandwuch நல்ல உறைப்பு சோஸ் Harisa போட்டு உனனே வேணும் என்கிறான் .அதனை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒருத்தரையொருத்தர் பாரக்கிறார்கள். ஒரு போலிஸ் அதிகாரி சைரனை சுழல விட்டபடி KEBAB வாங்க விரைகிறார்.

பி.பகல் 13.20
கொலையாளியை உயிருடன் பிடிப்பதே எமது நோக்கம் என சார்க்கோசி அறிவிக்கிறார். கொலையாளியும் மாலை சரணடைய இருப்பதாக தகவலை வெளியிடுகிறார்.இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது தீவிர வலது சாரிக்கட்சி தலைவி மரின்லூப்பன் பிரான்சில் வெளிநாட்டவர்களின் தொல்ல அதிகரித்துவிட்டது சார்க்கோசி என்ன செய்கிறார் கர்சிக்கிறார். கொலையாளியை உடைனேயே கொன்றுவிட்டால் பிரான்சில் பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்கை இழக்கவேண்டிவரும். அதே நேரம் அவனை பிடித்து அரசாங்க செலவில் வைத்து பராமரிக்கவேண்டுமா என யூதர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுக்காரர்களும் கேள்வி எழுப்பினார்கள். கொலையாளி தனியாகத்தானே இருக்கிறான் ஏன் அதிரடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென ஊடகங்களும் குடையத்தொடங்கியிருந்தன.தேர்தல் நெடுங்கும் நேரத்திலையா இப்பிடி ஒருத்தன் பிரச்சனை செய்யவேண்டும் என நினைத்த சார்க்கோசி அவர்கள் உள்துறை அமைச்சரையே சம்பவ இடத்திற்கு அனுப்பகிறார். மறுநாள் காலை11.30 கொலையாளி துப்பாக்கியால் சுட்டபடி யன்னலால் பாய்ந்தபொழுது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றது.

வலையமைப்பில் பிரான்சில் இயங்கிய பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை வைத்துப் பார்க்கும் போது கொலையாளி உணவு கேட்ட தருணத்திலேயே பிரான்சின் விசேட கொமாண்டோ படையணியினர் உள்நுளைந்து கொலையாளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரணைகளை நடத்தி அவனிடமிருந்து சகல விபரங்களையும் கறந்த பின்னர் அவனை சுட்டுக்கொன்றுவிட்டு . பின்னர் சாதாரண காவல்த்துறையினர் துப்பாக்கி சூடு நடத்துவது போல் ஒரு நாடகத்தை ஆடிவிட்டு கொலையாளி கொல்லப்பட்டான் என அறிவித்திருக்கலாம். ஏனெனில் இது போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் தீவிரவாதிகள் மீது விசேட கொமாண்டோ படையினரின் நடவாக்கைகள் ஒன்றும் புதியது அல்ல. ஆனால் மீண்டும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் சாரக்ககோசிக்கு பொங்கு சனியா மங்கு சனியா என்று பொறுத்திருந்துதான் பாரக்கவேண்டும்