அவர்கள் உயிரோடு உள்ளனரா ?

150

இது ஆரம்பிக்கப்பட்டுள்ள பரப்புரைப் போராட்டத்தின் தலைப்பு. அது மக்களிடம் சரியாக போய் சேரவேண்டும் என்று, அப்போராட்டத்திற்கான விளக்கமும் பின்வருமாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டு போரின் இறுதியில் 18000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள் அல்லது சிறிலங்கா அரசிடம் தம்மை விசாரணைக்கு இணங்கி ஒப்படைத்தார்கள். அவர்களின் கதிஎன்னவென்று இதுவரை யாரும் அறியவில்லை. சிறிலங்கா அரசின் தகவல்களின் அடிப்படையில் 146.679 பேரின் கதி என்ன வென்றுஇன்னமும் தகவல் இல்லை என மன்னார் ஆயர்வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் அவர்கள்ஆதாரத்தோடு சிறிலங்கா அரசினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலையின் கோரப்பிடியிலிருந்து உயிர் பிழைத்தோர் தமது அன்புக்குரிய உறவுகளைத் தேடித் தவிக்கிறார்கள். தாய்மார்கள் பிள்ளைகளுக்காக தவிக்கிறார்கள். கணவன்மார்களும், மனைவிமாÖர்களும் தமது வாழ்க்கைத் துணைகள் என்ன ஆனார்கள் என்று இன்னமும் தேடி அலைகிறார்கள். பெற்றோரோடு இணைய குழந்தைகள்காத்துக் கிடக்கின்றார்கள். தமிழ் தேசம் ஒட்டு மொத்தமாக உறவுகளைத் தேடி அலைகிறது, அழுகின்றது.

ஜ.நா அதிகாரியின் ஆலோசனையின் பேரில் இலங்கை அரசிடம் விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் திரு.நடேசன், திரு.புலித்தேவன் ஆகியோர் அடங்கலாகப் பலர்சரணடைந்தார்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. பின்னர் அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை காண்பிக்கும் நிழல் படங்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தது. இது `வெள்ளை கொடிச்சம்பவம்’ என பெயரிடப்பட்டு அறியப்படுகின்றது.

இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வணக்கத்திற்குரிய பிதா. பிராண்ஸில் ஜோசப் அவர்களின் தலைமையில் பலர் சரணடைந்தார்கள். அவர்கள் இராணுவத்தினரால்ஒரு பேரூந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றார்கள்.அவர்கள் தற்போது காணாமல் போனோர்பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் பலர்இன்னமும் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என அஞ்சப்படுகின்றது.

கிடைக்கப்பெறும் சாட்சிகளை ஆராய்ந்து பார்த்தால் விடுதலைப்புலிகளின் நிர்வாக மற்றும் அரசியல் துறை தலைவர்களின் சரணடைதலை சிறிலங்கா அரசின் உயர் மட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவர்களை சரணடைய வைத்து கொலை செய்யவே திட்டமிட்டிருந்தது என்பது புலனாகின்றது. இந்தசரணடைவின் பின்னர் சிறிலங்கா அரசானது, அரசியல் தலைவர்களின் கொலை குறிந்து முன்னுக்கு பின் முரணான தகவல்கனை வெளியிட்டு வருகின்றது. ஆனால் அவர்களோடு சரணடைந்தவர்களைப் பற்றிய தகவலை இன்னமும் இலங்கை அரசு மூடி மறைக்கின்றது.

7 ஆண்டு காலம் கடந்த நிலையில், காணாமல் போனவர்கள், மற்றும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது என்ற உண்மையை அறிய இன்னமும் காத்து நிற்கின்றார்கள். குறிப்பாக வெள்ளைக் கொடிச் சம்பவம் இலங்கை அரசின் அதி உயர் தலைமைகளின் ஆணைப்படியே நடந்துள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபரின் சகோதரரான பசில் ராஜபக்சாவின் முழு ஆதரவோடு சரணடைதல் விடயத்தை கையாண்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது. போரின் போதுஇலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் மக்கள் செல்ல வேண்டுமென சர்வதேச தலைவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். ஜ.நாவும் சர்வதேச சமூகமும் தம்மை காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இலங்கை அரசின்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்றார்கள். ஆனால் அது அவர்களை ஒரு மரணப்பிடிக்குள் செல்வது போல் ஆக்கிவிட்டது.

இவ்வாறான பின்னனியில் இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்று. 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் தமது அன்புக்குரியவர்களை தேடி இன்னமும் எமது மக்கள்அலைகின்றார்கள். அவர்களது கோரிக்கைக்கும் தவிப்புக்கும் இலங்கை அரசு ஏதுவும் கூறவில்லை. புதிய அரசு கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த அனைவரும் உயிரோடு உள்ளார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் அப்படி நடந்ததென்ற உண்மையை உலகறிய கூற வேண்டும்.

2008-2009 காலப்பகுதியில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்விபரங்கள், மற்றும் இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்டவர்களினது பெயர்கள்வெளியிட வேண்டும், அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் எப்போது, எங்கே விடுவிக்கப்பட்டார்கள், யாரிடம் ஒப்படைக்கப்பட்டாÖர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும். இன்னமும் இலங்கை அரசில் வெளிப்படையான அல்லது மறைமுகமான முகாம்களில் உள்ளவர்களது பெயர்களை வெளியிட வேண்டும். அத்தோடு தடுத்து வைக்கப்பட்டவர்களை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

உலக தலைவர்களினது சர்வதேச சமூகத்தினதும் கோரிக்கையினால் சரணடைந்து காணாமல் போனோர் மற்றும் வதைபட்டு வெளிநாட்டுக்கு வந்தோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை நாம் தொடர்ச்சி யாக வியுறுத்த வேண்டும். எம் மக்களை மீட்டெடுப்பதும் அவர்களைக் காப்பதுவும் அனைத்து தமிழ் மக்களினதும் மற்றும் மானிடத்தை நேசிக்கும் உலக மக்களினதும் கடமையாகும். ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரக்கனகான உயிர்களுக்கு என்ன நடந்து என்பதைக் கண்டறிவது எங்கள் கைகளில்தான் உள்ளது.