இந்திய அரசியலை தீர்மானிக்கும் வட பனியா சேட்டுக்கள், பழி தீர்க்க காத்திருக்கும் தென் செட்டிகள்

152

உலகின் மொத்த கலைச் செல்வங்களும் பொருளீட்டுவதைத் தவிர வேறொன்றும் தெரியாத சிறு கூட்டத்திடம் சிக்குண்டு கிடக்கிறது என்பார் மாக்சிம் கார்க்கி..

உலக அரசியல் என்பது வணிகம் செய்வதை குலத்தொழிலாகக் கொண்ட இனக்குழுக்களுக்கிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிகாரச் சண்டையின்றி வேறேதுமில்லை..

இந்தியாவில் பன்னெடுங்காலமாக சேட்டுகளுக்கும்(பனியாக்கள்) செட்டிகளுக்கும்(நகரத்தார்) இடையிலான அதிகாரப் போட்டிதான் அரசியல்..

முருகன்-பிள்ளையார் சண்டை..பாகுபலி-பரதன் சண்டை..கௌரவர்-பாண்டியர் சண்டை போன்ற எல்லா கதைகளும் இந்த பங்காளிச் சண்டையின் குறியீடுகளே..

1947 ஆகத்து 15 க்குப் பிறகு இந்தியா சேட்டுகளின் நாடு..ஆனால் அதற்கு முன்பு இந்தியா செட்டிகளின் நாடு..

பனியாக்களுக்கு கடல் பயணம் தடை செய்யப்பட்டது என்று காந்தி கூட எழுதியுள்ளார்…தடுத்தது யார் தெரியுமா..?

கடல் வணிகத்தில் கொடி கட்டிப் பறந்த செட்டிகள் தங்கள் கண் அசைவின் கட்டுப்பாட்டில் பனியாக்களை அடக்கி வைத்திருந்தனர்..ஆங்கிலேயருடன் செட்டிகளுக்கு இருந்த நெருக்கம் பனியாக்களுக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது..

இந்தியா தவிர மலேசியா..சிங்கப்பூர்..இலங்கை..பர்மா போன்ற பல நாடுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் வணிகம் செய்தவர்களே செட்டிகள் தான்..ஆங்கிலேயருடன் அவ்வளவு நெருக்கம்..

செட்டிகளுக்கு ஒன்றென்றால் ஆங்கிலேயே அரசு பதறும்…ஆங்கிலேயருக்கு ஏதும் ஆபத்தென்றால் செட்டிகள் தாங்கிப் பிடிப்பார்கள்..

ஆங்கிலேயரை இந்த மண்ணை விட்டு விரட்டினால்தான் செட்டிகளை அடக்கி அதிகாரத்தை அடைய முடியும் என்பதை உணர்ந்த பனியாக்கள் தங்கள் கை காசை போட்டு நடத்தியதுதான் இந்திய விடுதலைப் போராட்டம்..!

காந்தி..காங்கிரசை வளர்த்து விட்டவர்கள் பனியாக்களே..!

1942ல் ஆங்கிலேய அரசு இரண்டாம் உலகப் போரால் மிகப் பெரிய சறுக்கலை சந்தித்தது..வாய்ப்பை பயன்படுத்தி காந்தி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை தொடங்கினார்..

செட்டிகளோ தங்கள் சொந்த காசில் ஆங்கிலேய அரசுக்கு போர் விமானங்களை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்..

பர்மா..மலேசியா..சிங்கப்பூர்..இலங்கை தொடங்கி இந்தியா வரை ஆங்கிலேயரின் செல்வாக்கு சரிய சரிய செட்டிகளின் அதிகாரமும் ஆட்டம் கண்டது..இந்தியாவில் பனியாக்களின் கை ஓங்கியது..!

விடுதலைக்கு முன் நிதி தொடர்பான அனைத்து அரசு அதிகார மட்டங்களிலும் செட்டிகளின் கையே ஓங்கியிருந்தது..விடுதலைக்குப் பிறகு சி.வி. சண்முகம் செட்டியார் கொஞ்ச காலம் நிதி அமைச்சராக இருந்தார்..அதன் பிறகு ப.சிதம்பரம் வரும் வரை செட்டிகளால் அந்தப் பதவிக்கு போக முடியவில்லை..!

இந்தியன் வங்கி..இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..பல வங்கிகளின் இணைப்பான ஸ்டேட் வங்கியின் முகாமையான பங்கான இம்பெரல் வங்கி..

இவ்வளவு ஏன் ரிசர்வ் வங்கி கூட செட்டிகளால் தொடங்கப்பட்டதுதான்..

ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி கூட செட்டிகள் தொடங்கியதே..

எல்.ஐ.சி யின் இன்றைய சொத்து மதிப்பு மட்டும் முப்பது லட்சம் கோடி..

1947 க்குப் பிறகு இந்நிறுவனங்கள் அனைத்தும் பொதுத்துறை என்ற பெயரில் செட்டிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டு சேட்டுகளுக்கு கை மாற்றப்பட்டது..

ஆங்கிலேயே அரசு வெளியேறாமல் இருந்திருந்தால் காரைக்குடி வீதிகளில் பத்து இருபது அம்பானிகளும் அதானிகளும் வலம் வந்து கொண்டிருப்பார்கள்..!

ஆனால் அதனால் நமக்கு ஒரு பயனும் கிடையாது..

சேட்டுகள் சொத்துகளை கைப்பற்றியது குறித்து அண்ணா தனது “பணத்தோட்டம்” என்ற நூலில் எழுதியுள்ளார்..ஆனால் எந்த திராவிடக் கோட்பாட்டாளர்களும் செட்டி-ஆங்கிலேயர் உறவு குறித்தோ செட்டிகளின் அதிகாரம் குறித்தோ வாய் திறந்தது கிடையாது..

அதற்குக் காரணம் உண்டு..!

-ஆரல்கதிர் மருகன்