இந்திய எல்லையில் பெரும் பதற்றம்,படையை குவித்த சீனா,உலக போருக்கான திறவுகோலா?

101

இந்திய – சீன எல்லை பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான லடாக் பிரதேசத்தில் சீனா நுழைந்து மினி முகாம்களை அமைத்துள்ளது.இது தொடர்பாக பேச சென்ற இந்திய இராணுவ அதிகாரியை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளதுடன்,மேலதிகமாக 5000 க்கு மேற்பட்ட சீன துருப்புக்களை அனுப்பி,முகாமை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.இதே வேளை இது தொடர்பாக இந்திய இராணுவம் சிவப்பு கொடி ஒன்றை காட்டி,சீன இராணுவத்தை திரும்பி போகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனா அமைத்துள்ள முகாம்களின் படங்கள்

இதே வேளை,வழமையாக எல்லை பதற்றங்களில் பாகிஸ்தானோடு பாயும் இந்தியா,சீனாவுடன் நழுவல் போக்கை ஒன்றையே தொடர்ந்து கொண்டுள்ளது.எல்லையில் உள்ள இராணுவத்துக்கு பருப்பு சோறும்,உள்ள ஆயுதம் அனைத்திலும் ஊழல் செய்துவிட்டு பின்னர் எப்படிதான் சீனாவின் பெரும்படையுடன் போருக்கு போவது? எங்கிருந்துதான் தைரியம் வரும் இருந்தால்தானே வருவதற்கு.தேசபக்தர்களின் கோசம் வானை பிளக்கலாம்,கொடி பிடிப்பவர்களுக்கு பிரச்சினை புரியாது.இதே வேளை 2013 ஆண்டு எல்லை பதற்றம் ஒன்றின் போது அமைதி காத்த மத்தியரசை எதிர்த்து ட்விட்டரில் களமாடிய மோடி,தற்போது மத்தியரசாக இருந்தும் மெளனம் காப்பது எதற்காக?

இதே வேளை..ஏற்கனவே உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரானா பனிபோர் காரணமாக,அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ள சீன எதிர்ப்பு கொள்கை,இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்ப வைக்கப்பட்டு,சீனாவுக்கு எதிரான உலக போரை,இந்திய எல்லையில் வைத்து திறக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் கணக்கு போடலாம்,தவிர..உலக நெருக்கடிகளை திசை திருப்பும் பொருட்டு சீனாவே ஒரு போரை தனக்கு சாதகமான இடத்தில் ஆரம்பித்து,முடிக்கலாம்.

எல்லாவற்றையும் சேர்த்து பார்க்குமிடத்து,உலக நெருக்கடி நிலை காரணமாக,உலகின் எங்காவது ஒரு எல்லையில் எரிமலை வெடிப்பதற்கான காலம் ஒன்று கனிந்து வந்துள்ளது.மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதுதான் சிறந்தது.ஏனெனில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தெரியாதவர்கள்,அதற்கு பணம் ஒதுக்காதவர்கள்,தேசிய பாதுகாப்பு என்ற போலி கெளரவத்தில் பல ஆயிரம் கோடிகளை வருடாந்தம் செலவழிப்பர்கள் ஆளும் உலகில் போர்கள் ஒரு நாளும் ஓயாது.