இனப்படுகொலை கருத்தியலும் வழிகாட்டும் வரலாறும்

120

இனப்படுகொலை (ஜெனோசைட்) என்ற சொல்லே 1944ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரிடம் சிக்கி குடும்பத்தை இழந்த போலந்து நாட்டு யூத வழக்கறிஞரான ரஃபேல் லெம்கின் என்பவர்,

கிரேக்க சொல்லான ஜெனோவையும் லத்தீன் சொல்லான சைடையும் சேர்த்து #ஜெனோசைட் என்ற சொல்லை உருவாக்கினார்.

ஆனால், இனப்படுகொலை என்ற இந்த வார்த்தை புழக்கத்துக்கு வரும் முன்பே இந்த புவிப்பந்தில் ஒரு பெரும் இனப்படுகொலை நடந்து முடிந்திருந்தது. அது #ஆர்மீனிய_இனப்படுகொலை.

ஆர்மீனியா நாட்டுக்கும் நம்மூர் சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் ‘ஆர்மீனியன் தெரு’ என்றே ஒரு தெரு உண்டு. யாரோ ஒரு புண்ணியவான் அதை தமிழில் அற்புதமாக ‘அரண்மனைக்காரன் தெரு’ என மொழிபெயர்த்து விட்டார்.

(ஆள் யார் என்று தெரியவில்லை. தெரிந்தால் ஒரு யுனெஸ்கோ விருது கொடுக்கலாம்).

ஆர்மீனியா என்ற தனிநாடு காகசஸ் பகுதியில் இருக்கிறது. #கிறிஸ்துவத்தை அதிகாரபூர்வ மதமாக ஏற்றுகொண்ட முதல் நாடு ஆர்மீனியாதான். 3000 ஆண்டுகால பாரம்பரிய பெருமையுடன் வாழ்ந்த பெருமைக்குரிய ஆர்மீனியர்கள் நாளடைவில்

தமிழர்களைப் போலவே பெருமை இழந்தார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் தமிழ்ஈழப் பகுதி எப்படி #சிறீலங்காவுக்குள்

சிக்கிக் கொண்டதோ, அதைப்போல ஆர்மினியா பகுதிகள் அந்தக்காலத்தில் அந்தல சிந்தலயாகி, அவற்றின் பெரும்பாதி துருக்கி நாட்டுக்குள் சிக்கிக் கொண்டன.

ஆரம்பத்தில் இருந்தே ஆர்மீனியர்களைக் கண்டால் #துருக்கியர்களுக்கு ஆகாது. அப்படி ஒரு வெறுப்பு. துருக்கிய சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீது, முதல் முதலாக ஓர் இனப்படுகொலையை ஆர்மீனியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார். ‘ஆர்மீனியர்களின் கணக்கை முடிப்பேன்’ என சுல்தான் நடத்திய அந்த ரத்தக்களறி வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அதன்பிறகு சுல்தானின் ஆட்சி கவிழ்ந்து, இளம் துருக்கியர்களின் ஆட்சி வந்தது. இனி தங்கள் வாழ்வில் வசந்தகாலம்தான் என்று ஆர்மீனியர்கள் கனாக் கண்டார்கள். ஆனால் அது அவர்களுக்கு கசந்த காலமாகப் போனது. சுல்தானே பரவாயில்லை என்பதுபோல இருந்தது #இளம்_துருக்கியர்கள் ஆட்சி.

முதல் உலகப்போர் தொடங்கிய நேரம் ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரிய பேரரசுடன் கூட்டு வைத்துக் கொண்ட ஒட்டோமான் துருக்கி அரசு, 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம்தேதி ஒரு சிவப்பு ஞாயிறன்று ஆர்மீனியர்களுக்கு எதிரான வேட்டையைத் தொடங்கியது.

இஸ்தான்புல் நகரில், ஆர்மீனிய இனத்தைச் சேர்ந்த 300 அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இது சும்மா ஓர் முன்னோட்ட நிகழ்ச்சிதான். அதன்பிறகுதான் முழுதிரைப்படம் தொடங்கியது.

வீடுகள், வீதிகள், நகரத் திடல்கள் எங்கெங்கும் ஆர்மீனியர்கள் படுகொலையானார்கள். வீதிகள் எங்கும் பிணக்குவியல்கள். 20ஆம் நூற்றாண்டின் முதல் இனப் படுகொலை சுர்ரென சூடுபிடிக்கத் தொடங்கியது.

ஆர்மீனியர்களை உயிருடன் எரிப்பது, சிலுவையில் அறைவது, மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிடுவது, ஆறுகளில் மூழ்கடிப்பது, ஆர்மீனியக் குழந்தைகளைப் படகுகளில் ஏற்றிச்சென்று கடலில் வீசுவது, அழகிய ஆர்மீனியப் பெண்களை அடிமைகளாகப் பிடித்து அந்தப்புரங்களுக்கு அனுப்புவது என்று இனப்படுகொலையில் எத்தனையோ தினுசு தினுசான புதுசு புதுசான உத்திகளை கடைப்பிடித்தார்கள் #துருக்கியர்கள்.

ஆர்மீனியர்கள் ஆயிரக்கணக்கில் கொத்தாகப் பிடிக்கப்பட்டு உணவு, தண்ணீர் எதுவுமில்லாமல் சிரியா நாட்டு பாலைவனத்தில் நடக்கவிடப்பட்டார்கள்.. வழியில் ஓய்வுக்காக அவர்கள் எங்காவது நின்றால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்படி #மெசப்பட்டோமிய_பாலைவனத்தில் இறந்து எலும்புக்கூடுகளான ஆர்மீனியர்களின் எண்ணிக்கையே பல ஆயிரம் தேறும்.

1915ல் தொடங்கி 1918 வரை ஓர் இனப்படுகொலை. அதன்பிறகு 1920ல் தொடங்கி 1923 வரை ஒரு வெறியாட்டம். ஒரு கணக்கீட்டின்படி பார்த்தால் துருக்கி ஒட்டோமான் பேரரசில் வாழ்ந்து மொத்த ஆர்மீனியர்களின் எண்ணிக்கை #ஏறத்தாழ 20 லட்சம்.

ஆனால் இந்த இனப்படுகொலைகளுக்குப் பிறகு எஞ்சியிருந்த ஆர்மீனியர்கள்

#வெறும் 3 லட்சத்து 88 ஆயிரம் பேர்தான்! அதிலும் சிற்றாசியா, மேற்கு ஆர்மீனியா பகுதிகளில் ஆர்மீனிய இனம் பூண்டோடு நசுக்கி விரட்டப்பட்டது.

முதலாம் உலகப்போரில் துருக்கி தோற்றதும் இளம் துருக்கியர்கள் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று நட்பு நாடான #ஜெர்மனிக்குத் தப்பியோடி விட்டார்கள்.

சரி! ஆர்மீனிய இனப்படுகொலைக்காகத் துருக்கியர்களுக்குத் தண்டனை எதுவும் கிடைத்ததா? இல்லை. வெற்றிகரமாக கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்ட பிறகு இப்போதுதான் திடீர் ஞானோதயம் வந்ததுபோல, ‘துருக்கி செய்தது இனப்படுகொலை’ #என்ற_முடிவுக்கு மேற்கு நாடுகள் வந்திருக்கின்றன. நியூயார்க் டைம்ஸ் இதழ் 2004ஆம் ஆண்டுதான் துருக்கி செய்தது இனப்படுகொலை என்றே எழுதியிருக்கிறது. (அப்பாடா!)

அமெரிக்க செனட் அவை ஆர்மீனிய இனப் படுகொலையை அங்கீகரித்து அதை நினைவுகூர்ந்து தீர்மானம்

(என்ற பெயரில்) ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. வாடிகன் போன்ற நாடுகள் ஆர்மீனியர்களுக்கு துருக்கி நாடு செய்த கொடூரங்களை இனப்படுகொலை என்று இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கின்றன.

துருக்கி நாடு, அன்றும் சரி இன்றும் சரி. லேசுபட்ட நாடு இல்லை. முதல் உலகப்போரில் #அரேபியர்களையே அந்தப் பாடுபடுத்தியவர்கள் துருக்கியர்கள்.

இஸ்ரேல் நாடு 1948ல் உருவானபோது அதை அங்கீகரித்த முதல்

‘இஸ்லாமிய’ நாடு துருக்கி. சூயஸ் கால்வாய் போரின்போது அரபு நாடான எகிப்து மீது இங்கிலாந்தும், பிரான்சும் போர் தொடுத்தபோது இங்கிலாந்து, பிரான்சு பக்கம் நின்ற நாடு துருக்கி. சைப்பிரஸ் நாட்டின் படையெடுத்த நாடு துருக்கி. அதுமட்டுமல்ல, தற்போது #அமெரிக்காவின்

மிகமிக நெருங்கிய நட்புநாடு துருக்கி.

ஓர் இனப்படுகொலை நடந்து நூறாண்டுகள் கடந்த பிறகுதான் அது இனப்படுகொலை என்றே இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ஆர்மீனியர்களுக்காகப் பேச ஆர்மீனியா என்று

#ஒரு_நாடு_இருக்கிறது..

அப்படி இருந்தும் இந்தநிலை.

இந்த அழகில்,

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை, இனப்படுகொலைதான் என்று பன்னாட்டு சமுதாயம் #ஒத்துக்கொள்ள இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ தெரியவில்லை..

மேலும்..

தமிழர்களுக்கு என்று பேச

#நமக்கென்று

தனிநாடும் இல்லை.

மோகன ரூபன்