இனமானம் தவறும் சில தன்னிலை விளக்கங்கள்

83

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்தும், அதன் தலைமை பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த திரு.சுமந்திரன்,திரு. காண்டீபன் இருவருமே சட்டத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள்.

சட்டத்தொழில் உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும் காட்டும்,தர்க்க ரீதியிலான விவகாரத்தை கொண்ட தொழில் என்பதால் அதனை அரசியல் தளத்திலும் பயன்படுத்த முயற்சித்து தற்போது மக்களின் வெறுப்புணர்வை பெற்றுள்ளனர் என்பதே உண்மை.

இதில் இருவரும் எடுத்துள்ள மிகவும் பிற்போக்குத் தனமான அரசியல் நிலைப்பாடு என்னவென்றால், தாங்கள் தெரிவித்த கருத்து பிழை என்று தெரிந்தும், பொதுவெளியில் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை அற்ற, மக்களின் சுயமரியாதையினை பாதிக்கும் தன்னிலை விளக்கம் ஆகும்.

இப்படியான உருட்டு பிரட்டு தன்னிலை விளக்கம், சட்டத்தரணிகளுக்கு மிக முக்கியமான திறன் பொருள்கோடல் – interpretation (வியாக்கியானம்) செய்யும் திறன் என்று கூறுவார்கள். அதனை, திரு.சுமந்திரனும், திரு.காண்டீபனும் தமது சட்ட அறிவை பயன்படுத்தி, தமக்கு பரிச்சயம் அல்லாத அரசியல் தொழிலுக்கு பயன்படுத்த எத்தனித்து மூக்கு உடைப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை.

வழமையான மடை மாற்றும் அரசியலை செய்து வரும் இவர்களின் தன்னிலை விளக்கத்தில் கூட, தாம் முன்வைத்த விடயம் Logical Conclusion என நினைத்தாலும், இதில் மக்கள் நலன் சார்ந்த அறம் இல்லை என்றே புலப்படுகிறது.

தமிழ் மக்களின் ஆயுத போராட்டம் சார்ந்த அடிப்படை ஆழமற்ற பங்களிப்போ, புரிந்துணர்வோ இல்லாத உங்களை போன்ற சட்டத்தரணிகள். உங்கள் தொழில் துறை சார்ந்து பயணிப்பது நல்லதாக இருக்கும். இல்லாவிட்டால், யுத்த மறுப்பு வாத கட்சியினை (Pacifist Party) ஆரம்பித்து, பயணிப்பீர்களானால் உங்கள் சட்டம் உங்களுக்கு உதவி செய்யும்.

நன்றி.Yogesh yo