இருளில் மூழ்க போகும் உலகம்,அச்சமூட்டும் தடுப்பூசி உலக அரசியல் – பகுதி 2

94

முதல் பகுதியின் இந்தக்கேள்விகளோடு இரண்டாவது பகுதியில்..

1. டிரம்ப், ஹிலாரி இருவரும் தடுப்பூசி ஆதரவில் எடுத்த நுட்பமான அரசியல் பிண்ணணி என்ன?

2. உ.சு.நி சீனாவிற்கு அடிபனிந்து நடக்கிறது. டிரம்பின் இந்தக்குற்றசாட்டில் உண்மை இருக்கிறதா?

3. டிரம்ப் உ.சு.நி யிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என்ற அறிவித்த அதே நன்னாளில், இனவாதகொலையை கண்டித்து நடைபெற்று வந்த அமைதிப் போராட்டத்தில் திடீரென வெடித்திருக்கும் கலவரத்திற்கும் தொடர்பு இருக்கக்கூடுமா?

முதல் இரண்டு கேள்விகளின் விடை தேடலில், மூன்றாமது கேள்விக்கு அவரவர் புரிதலில் விட்டுவிட எண்ணியிருந்தேன்.

ஆனால், சூழல் முதலில் மூன்றாமது கேள்விக்கான தேடலை நோக்கி விரட்டுகிறது.

பொறுப்புத்துறப்பு: இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட பார்வையே.

மே 25, 2020.

“எனக்கு மூச்சு விடமுடியவில்லை, நான் மரணித்து விடுவேனோ” இவை ஜார்ஜ் பிளாய்டு எனும் ஒரு அமெரிக்கரின் கடைசி வார்த்தைகள்.

இதை மே 29, அன்றுவரை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால்,

என்ன இவரும் கொரோனா தொற்றில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டாரா என கேட்டிருப்பீர்கள்.

ஆனால் இது கொரோனா தொற்றில் மடியும் நோயாளியின் கடைசி வார்த்தைகள் அல்ல.

ஒரு வெள்ளைநிற அமெரிக்க போலீசால் மிகக்கொடூரமாக கழுத்து நெரிக்கப்பட்டு மரணத்தை தழுவிக்கொண்டிருந்த ஒரு கருப்புநிற அமெரிக்கரின் கடைசி வாக்கியங்கள்.

கொரோனா தொற்றின் மரணநோய்குறியாக சொல்லப்பட்டுவரும் அதே “மூச்சு விடமுடியவில்லை”, ஜார்ஜின் கடைசி வரிகளாக அமைந்தது ‘தற்செயலாக’ இருக்குமா? தெரியவில்லை.

ஏற்கனவே, கொரோனா ஊரடங்கினால், பொருளாதாரத்தில் ஸ்தம்பித்து போயிருந்த அமெரிக்க எளிய மக்களின் வாழ்க்கையில் , இது மேலும் வலியாக இறங்குகிறது.

இவரது படுகொலையை கண்டித்து கொரோனா ஊரடங்கின்போதும், மக்கள் திரளாக, அமைதியாக, பேரணியாக திரண்டு, “எனக்கு மூச்சு விடமுடியவில்லை” என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகள் ஏந்தி, சாலைகளில் ஒற்றுமையின் குரலாக போராட்டம் மெல்ல வடிவம் பெற்று வந்து கொண்டிருந்தது.

மே 29 இரவு டிரம்ப் உ.சு.நி யிலிருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்த மறுநாள், இந்த போராட்டம் திசை திரும்புகிறது. அதுநாள் வரை ஊரடங்கிலும் அமைதியாக நடந்தகொண்டிருந்த போராட்ட களத்தில் திடீரென கலவரமாக மாறுகிறது. ஒருபக்கம், போலீஸ் அமைதியாக போராடிவந்த மக்களை கடுமையாக தாக்குகின்றனர். மறுபக்கம், சில விசமிகள், எளிய மக்களின் கடைகளையும் வீடுகளையும் சூரையாடுகின்றனர். பல கட்டிடங்கள் தீவைத்து எரிக்கப்படுகின்றன.

டிரம்ப் ஒரு நிற- இனவாதியாக பலமுறை தன்னை கோமாளித்தனமாக அடையாளப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் வெள்ளை மாளிகை நோக்கி தீவிரமாக, துப்பாக்கி சப்தங்களின் முழக்கம் நெருங்க நெருங்க, அதிபர் டிரம்ப் பாதுகாப்பு கருதி பதுங்குகிறார் என்ற செய்தி வருகிறது.

ஆம்.

இந்த கொரோனா காலத்தில், உ.சு.நி யிலிருந்து விலகும் முடிவை எடுத்த டிரம்ப், ஒருமுறைகூட எந்த பொதுக்கூட்டம் மற்றும் ஊடகக்கூட்டத்திலும் முகக்கவசம் அணியாத டிரம்ப், கொரோனா நமது ஃப்ளூவைப்போன்ற நோய் போலத்தானே இருக்கிறது இதற்கு எதற்கு இவ்வளவு பீதி என்று கேட்ட டிரம்ப், தடுப்பூசியின் அவசியம் இன்றியே கொரோனா அலை ஓய்ந்துவிடும் என்று சொன்ன டிரம்ப், எந்த தடுப்பூசியும் பாதுகாப்பானதா என இரண்டாடுகளுக்கு முன்னரே தனது நாட்டின் ஆய்விலாளர்களிடம் ஆவனங்கள் கேட்ட டிரம்ப், பதுங்குகுளியில் ஒளிந்துவிட்டார் என்ற செய்திவருகிறது.

உ.சு.நி அறிவுறுத்தும் முகக்கவசம், தடுப்பூசி, போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் சட்டை செய்யாத டிரம்ப், இனி பாதுகாப்பு கிட்டும்வரை பதுங்கி இருப்பார் என அறிக்கைமட்டும் வருகிறது.

ஒருவேளை அவர் உயிருடன் வெளிவந்தால், முகக்கவசம் அணிவாரா? உ.சு.நியின் உறவை மீண்டும் புதுப்பிப்பாரா? கட்டாயத்தடுப்பூசி சட்டத்தை கொண்டுவருவாரா, இல்லை இப்போது அவர் இருந்த அதே முடிவுகளில் சமரசமில்லாமல் தொடர்வாரா, என அவர் வந்தால் வந்த பின்னர் பார்ப்போம்.

நிற்க.

உ.சு.நியிலிருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்த இரண்டு நாட்கள் முன்னர்தான், அதாவது மே 28ம் தேதி, டிரம்ப் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தார்.

டிவிட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூகவலைதளங்களுக்கு அதுநாள் வரை நடுநிலை ஊடகம் என்ற பெயரில் சட்டபாதுகாப்பு இருந்தது.

ஒருபக்கம், கொரோனாவின் பின்னனியில் சீனாவிற்கு உ.சு.நி, ஒருபக்க சார்பாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வந்த டிரம்ப், உ.சு.நி யின் கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கிக்கொண்டே வந்தார். உ.சு.நி அறிவுறுத்தி வந்த

மாஸ்க் போடவேண்டுமா? தடுப்பூசி தேவையா? போன்ற பல கேள்விகளை எழுப்பும் பலரது ட்வீட்டுகளை இவர், “வித்தியாசமான பார்வைகள்” என்ற அடைமொழியோடு மறுட்வீட் செய்து வந்தார்.

மறுபக்கம், கடந்த 5 நாட்களாக வலுப்பெற்று வரும் மக்கள் போராட்டத்தை, கண்டித்தும், மீறி தொடர்ந்தால் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்றும் ட்வீட் செய்துகொண்டிருந்தார்.

இந்த வேளையில் இவரது ட்வீட்டுகள் தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டது.

முகநூல், ட்விட்டர், யூட்யுப் இவற்றில் கொரோனாவையோ உ.சு.நி யையோ சந்தேகத்திற்கு உள்ளாக்கும் விதமாகவோ நீங்கள் பதிவிடுவதும் தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கலாம். பல மருத்துவர்களின் கணக்குள் காணொளிகள் இப்படி முடக்கப்பட்டது. ட்ரம்புக்கும் இது நடந்தது.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், அதுநாள்வரை இந்த சமூக ஊடகங்களுக்கு அளித்து வந்த நடுநிலைக்கான சட்டப்பாதுகாப்பை இரத்து செய்தார்.

மீண்டும் நிற்க.

இந்த மக்கள் புரட்சியை பலரும் முக்கியமாக நமது இடதுசாரி தோழர்கள், 2010ல் வால்சிரீட்டில் நடந்த மக்கள் புரட்சியோடு ஒப்பிட்டு வருகின்றனர். டிரம்ப் உட்பட டிவிட்டரில் இப்படி ஒப்பிடுகிறார். ஆனால் அவர் அவரது பாணியில் இது இடதுசாரிகளின் தீவிரத்தன்மை என்று சாடியுள்ளார் .

2010ல் இதே போன்ற ஒருமித்த மக்கள் புரட்சி நடந்தபோது அன்று அதிபராக இருந்தவர் அமெரிக்காவின் முதல் கருப்புநிற அமெரிக்கரான ஒபாமா. அன்று அதிபராக இருந்த ஒபாமா, உங்களுக்கான மாற்றம் கொண்டு வரத்தான் நான் பதவியேற்றேன் என்று மக்களோடு உரையாடினார்.

ஆயினும்கூட, அந்தப்போராட்டதில் கிட்டத்தட்ட 4000 புரட்சியாளர்கள் அரசால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்புநிற அமெரிக்கர்களின் மீதான நிறவாதத்தை கண்டித்து நடக்கும் இன்றைய மக்கள் புரட்சி நமக்கு ஒரு நம்பிக்கையை தரும் அதே வேளையில், இதே கருப்புநிற அமேரிக்கர்களுக்கு நடந்த மற்றொரு வஞ்சகம் பற்றியும் குறிப்பிட்டால் தடுப்பூசி அரசியல் இங்கு முகமெடுப்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

18, ஆகஸ்டு, 2014 திங்களன்று ஒரு தடுப்பூசி சதிச்செயல் அம்பலமாகிறது. 2003ல் வெளிவந்த அமெரிக்காவின் நோய் தடுப்பு மையத்தின்(CDC) ஒரு ஆய்வானது பொய்யான தகவல்களால் ஜோடிக்கப்பட்டது என தடுப்பூசி உலகையே உலுக்கிப்போடும் செய்திதான் அது.

இதை கண்டிப்பாக விரிவாக பின்னர் வரும் பதிவுகளில் சொல்கிறேன். இந்த நிகழ்வு எனது தடுப்பூசி தேடலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தடுப்பூசி அறிவியலிலிருந்து, அதன் அரசியலை புரிந்துகொள்ள எனக்கு உதவியது இதுதான்.

ஆனால் இப்போது டிரெய்லர் மட்டும்.

2003ல் வெளிவந்த, அமெரிக்காவில் மிகவேகமாக அதிகரித்துவரும் ஆட்டிசம் எனும் மனப்பிறழ்வு நோய் பற்றிய இந்த ஆய்வு கருப்புநிற ஆப்ரிக்க அமேரிக்க குழந்தைகளை மையப்படுத்தியிருந்தது. இதில், தடுப்பூசிக்கு சாதமாக, அதாவது தடுப்பூசியினால் ஆட்டிசம் வருவதில்லை என்ற ஆய்வு முடிவு, ஒரு பித்தலாட்டம் என CDCன் அன்றைய முக்கியப்பொருப்பில் இருந்த பெயர்சொல்லாத மூத்த மருத்துவர் ஒருவர் விசில்பிளோயராக உண்மையை போட்டு உடைக்கிறார். இன்றும் அவரது உரையாடல் நினைவிலிருக்கிறது. “இல்லை.. இதற்குமேல் என்னால் முடியாது.. இத்தனை ஆண்டுகள் குற்ற உணர்ச்சியில் அனுதினமும் செத்துக்கொண்டிருக்கிறேன். தடுப்பூசிக்கும் ஆட்டிசத்திற்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது. இதை இனிமேலும் மறுக்க முடியாது. கருப்புகுழந்தைகளில் நடந்த இந்த ஆய்வு முடிவு மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும்” உடைந்து அழுகிறார் அந்த அதிகாரி.

பின்னர் அவர் மரு.வில்லியம் தாம்ப்சன் என்பது வெளிவந்து, விசில்பிளோயர் பாதுகாப்பு சட்டத்தின் உதவியால், அவரும் அவரது குடும்பமும், பதுங்கி மறைந்து இருந்து, பின் மீண்டும் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை ஏற்றுக்கொண்டு அமைதியாக்கப்பட்டார். அன்றிலிருந்து அவரைப்பற்றிய எந்த செய்தியும் வருவதில்லை.

2019ல் ஒரு ஆய்வு. அமெரிக்காவில், வெள்ளை குழந்தைகளை முந்திக்கொண்டு கருப்பு குழந்தைகளில் ஆட்டிசம் பெருகிவருகிறது என்று.

2014லிலும் சரி, 2019லும் சரி இந்த கருப்பு குழந்தைகளுக்காகவும் சரி, வெள்ளை குழந்தைகளுக்காகவும் சரி,ஏனோ மக்கள் புரட்சி வெடிக்கவேயில்லை.

ஒடுக்கப்படும், தாக்கப்படும், பாதிக்கப்படும் எவருக்கும் ஆதரவாக மக்கள்புரட்சி நடந்தே தீரும்.

ஒருவேளை இப்போது கூட வரலாம். வரவேண்டும் என்றே விழைகின்றேன்.

கொசுறுச்செய்திகள்: மே 30. டிரம்ப் பதுங்குகுளியில் பதுங்கியபின்னர் இரு செய்திகள். ஒன்று, அமெரிக்காவின் கலிபோர்னியாவில், சட்டதிருத்தமசோதாவின் விவாதங்களில் பொதுமக்களின் கருத்து தேவையில்லை என்று அரசியல் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. 2019ல் இதே கலிபோர்னியாவில் கட்டாய தடுப்பூசி சட்டம் பொதுமக்கள் விவாதத்தில் நடந்த பேரணி, ஆட்சியாளர்களை மிரளவைத்த வரலாற்றை பின்பகுதிகளில் விவரமாக சொல்கிறேன்.

மற்றொரு செய்தி, இங்கிலாந்தில் புதிய சட்டம். ஊரடங்கில் இரவுகளில் ஒருவர் அவரது இல்லம் அல்லாது வேறொருவரின் இல்லத்தில் தங்கக்கூடாது. காதலர்களாக இருந்தாலும் கூட. ஆப்பு தான்.

முதல் இரண்டு கேள்விகளுக்கான தேடலோடு அடுத்த பகுதியில் தொடரும்…

Dr.கோ.பிரேமா MD (hom)