பிரித்தானியாவில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழி உண்ணாவிரத போராட்டமானது தற்போது எதிர்ப்பு போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்த போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னிறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த 26ஆம் திகதி தொடங்கிய உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து 10 டவுனிங் வீதியில் பிரதமர் இல்லத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.