இலங்கையில் கொரோனாவினால் முதல் மரணம் பதிவானது

66

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்றுவந்த 60 வயதுடைய மாரவில பகுதியைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துகொண்டிருந்த நீரிழிவு நோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 113 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.