இலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை!

25

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நிலாந்தன் என்ற ஊடகவியலாளர் தொடர்ச்சியாக இலங்கை புலனாய்வு துறையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்.

பல தடவைகள் ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்கு சென்ற சிலர் CID இனர் என கூறி நிலாந்தனை அச்சுறுத்தி உள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டிற்கு சென்ற இருவர் இவரது குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

இதனால் நிலாந்தனின் குடும்பம் பிள்ளைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அவர் பொலீஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்து எந்த விசாரணையும் செய்யப்படவில்லை.

எனவே நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்க அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.