இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

135

இலங்கையில் கடந்த அரசைப் போலவே “நல்லாட்சி அரசாங்கம்” என்று சொல்லிக்கொள்ளும் அரசிலும் தொடரும் கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நேற்று (22-05-2015) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

லண்டனின் WESTMINISTER பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலமான NO 10 DOWNING STREET பகுதியில் பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது

  • இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் காலத்திலும் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும்
  • வெள்ளைவான் கடத்தலுக்கு எதிராகவும்
  • அபகரிக்கப்படும் தமிழர் தாயக நிலங்களை விடுவிக்க கோரியும்
  • தற்போதும் நாட்டில் தொடர்ந்துகொண்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களை திருப்ப அனுப்ப வேண்டாம்

ஆகிய நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிற்கு முன் வைக்கும் அதேநேரம் பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

நான்கு மணியளவில் நிறைவுக்கு வந்த இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

may_22 (14)

may_22 (15)

may_22 (13)

may_22 (11)

may_22 (10)

may_22 (9)

may_22 (9)

may_22 (8)

may_22 (7)

may_22 (6)

may_22 (5)

may_22 (4)

may_22 (2)

may_22 (1)

தகவல் + படங்கள் : மயூரன்