ஈழத்தமிழன் வீரத்தின் இரகசியம்

94

இலங்கைத் தமிழர்களின் வீரம் என்றும் தனித்துவமானது அதனாலேயே அன்றும் இன்னும் என்றென்றும் தனித்துவமாக வரலாற்றை பதிந்து இந்து மா சமுத்திரத்துல் தனித்து துணிந்து நிற்கின்றது.

உலகவரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டு மன்னர் ஆட்சிக்காலத்தில் கூட இந்தியாவில் இருந்து படையெடுத்து வந்து இலங்கையில் தமிழ் மன்னர்களுடன் போரிட்டு குழைப்பற்றி இருந்தாலும் தொடர்ந்து அந்த தீவைக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை பின்னர் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது வரலாற்று உண்மை.

இவ்வாறே இலங்கை மீது படையெடுத்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பின்னர் ஆங்கிலேயர் என வந்தவர்களாலும் தொடர்ந்து இலங்கையை முற்றுமுழுதாகவும் நீண்ட காலத்துக்கு அவர்களால் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என்ற காரணம் இந்து சமுத்திரத்தில் தனித்து நீந்திக் கொண்டிருந்தாலும் அங்கு ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும் வந்தவர்களால் தொடர்ந்து தங்கியிருக்க முடியவில்லை மன்னர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். குறிப்பாக போர்த்துக்கேயரோ, ஒல்லாந்தரோ, ஆங்கிலேயரோ தொடர்ந்து 100 வருடங்களுக்களுக்கு மேல் தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை என்பதே வரலாற்று உண்மை.

உலகின் பல பெரிய நாடுகள் கூட சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்தியா சுதந்திரம் அடைந்தது அதைத்தொடர்ந்து இந்த சிறிய இலங்கைத்தீவும் எவ்வாறு சுதந்திரம் அடைந்தது என்பதன் பின்னனியை வைத்துப்பார்த்தால் அங்கு வாழ்ந்த தமிழர்களின் மறைந்துள்ள தனித்துவத்தை வரலாற்றில் மறந்தாலும் அதை மறைக்கமுடியாது. உலகில் அமெரிக்காவை விரட்டிய வியட்நாமியரைப்போல், இரஷ்யாவை விரட்டிய ஆப்கானிஸ்தியர் போல் இலங்கையை ஆள வந்தவர்கள் அங்குவாழ்ந்த மூத்த தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இறுதியாக இந்தியா, இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட இந்தியாவுடன் 738 மைல்களுக்கு அப்பால் உள்ள அந்தமான் தீவுகளையும், 227 மைல்களுக்கு அப்பால் உள்ள இலட்சத்தீவுகளையும் இணைக்முடிந்ததே தவிர ஆனால் வெறும் 18 மைல்கள் மட்டுமே கொண்ட இலங்கைத்தீவை ஏன் அவர்களால் இணைக்கமுடியவில்லை என்பதை நோக்கினால் இலங்கைத்தீவின் தமிழர்கள் தன்மை புலப்படும். இதுவே இந்தியா சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இலங்கையையும் சுதந்திரம் அடைய வைத்துள்ளது. இந்த சிறிய இலங்க சுதந்திரம் அடைந்தவேளை உலகில் பல பெரிய நாடுகள் கூட சுதந்திரமடையவில்லை ஆனால் இலங்கைக்கு எவ்வாறு சுதந்திரம் அடைந்தது என்பது பலரும் அறியாத விடயம்.

இவையனைத்தையும் நோக்கினால் ஈழத்தமிழர்கள் ஏன் தமக்கு தனி இராஜாதானிகள் அமைத்து ஆட்சி புரிந்தனர் என்பதில் தான் அவர்களின் சிறப்பு வெளிப்படுகின்றது. அதுவே அவர்களின் வீரத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அடங்கப்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதும் அவர்கள் வீரம் செறிந்த போராட்டத்துக்கு சொந்தக்காரர் என்பதையும் வரலாற்றில் இருந்து அறியமுடிகின்றது. இது உண்மையான ஒவ்வொரு தமிழனின் குருதியிலும் உள்ளது. என்றுதான் சொல்லவேண்டும். அதனால் தான் உலகத்தில் மூத்த குடி தமிழனிடம் இன்றும் போராட்டங்கள் உரிமைகளை தட்டிக்கேட்க வைக்கின்றது.

ஆனால் உலக நாடுகள் வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் விடுதலைபெற்ற பல நாடுகளாக இருக்கட்டும் இவற்றின் விடுதலைக்கு உலகநாடுகளின் பங்களிப்புடனே நடந்தேறியுள்ளது. ஆனால் ஈழத்தில் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக சேரந்து ஒரு இனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்றால் அதுவும் தமிழர்களின் வீரத்துக்கு எடுத்துக்காட்டு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலமை தொடர்ந்து நீடிக்காது ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி சாத்தியமல்ல என்பதற்காக ஒரு சிறு உதாரணத்தை கூறியே ஆகவேண்டும்.

அதாவது இலங்கைத்தீவை ஏன் அந்நிய நாடுகள் ஆக்கிரமித்து கைப்பற்றி இருந்தாலும் தொடரந்து அவர்களால் ஆள முடியவில்லை? இந்திய மன்னர்கள் படையெடுத்தும் இருந்தனர் அவர்களாலும் தொடர்ச்சியாக வைத்து இருக்கமுடியவில்லை? அவ்வேளையெல்லாம் ஈழத்தில் பல இராசதானிகள் இலங்கையில் இருந்துள்ளன. இறுதியாக இலங்கையை ஒருகுடையின் கீழ் ஆண்ட எல்லாள மன்னன் வரை பல வீர வேந்தர்கள் ஆட்சியுரிந்து இருக்கின்றனர். நாம் கண்ட வரலாற்றை பார்த்தால் இலங்கைக்கு அமைதிப்படையாக விமானம், யுத்தடாங்கிகள் சகிதம் ஒரு இலட்சத்து இருபதாயிரம் (120000) இந்தியத் துருப்பினர் அமைதிகாக்கும் படையாக வந்து ஆக்கிரமிப்பு படையாக மாறியபோது இலங்கை தமிழர்களில் ஒவ்வொரு 10 தமிழருக்கு ஒரு இராணுவம் என்ற விகிதம் அளவு இருந்த இந்தியப் பெரும்படையை எதிர்கொள்ளத் தயாராக இருந்த தமிழீழ தேசியத்தலைவருடன் தமிழீழவிடுதலைப்புலிகள் வெறும் 1000 பேர் கூட இருக்கவில்லை என்பதே நிதர்சனம்.

ஆசியாவில் மிகப்பெரிய ஒரு இராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகளை எந்த சக்தி முன்னே கொண்டுவந்தது இதுதான் தமிழன் வீரத்துக்கான அண்மைய எடுத்துக்காட்டு விமானம், டாங்கிகள், பெரும்படை கொண்ட இந்தியாவை எதிர்த்த புலிகளின் செய் அல்லது செத்துமடி அனைவரின் பார்வைக்கும் அந்த 1000வேங்கைகளும் தற்கொலைக்குள் குதிப்பது போன்ற செயல் போன்றதாகும் அநேகர் விமர்சித்தும் இருந்தனர். விடுதலைப்புலிகள் அறவழிமுதல் அகிம்சைவழி வரை போராடி இறுதியில் ஆயுதம்மூலம் போராடி வென்றனர் என்பதை உலகம் வியந்து பார்த்தது. இந்த துணிவை ஈழத்தமிழர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? எப்படி வென்றார்கள்? எனபதே தமிழன் வீரத்துக்கு எடுத்துக்காட்டு ஆனால் 2009 இல் ஒட்டுமொத்த உலகமும் களமிறங்கி ஒரு இனத்தை அழித்தது துணைபோனது என்பதும் தமிழன் வீரத்தின் அடையாளமே, ஆனால் இனிவரும் காலங்களிலும் தமிழனுக்கு உரிய தீர்வு கிடைக்காது போனாலும் அவன் ஆயுதம் ஏந்தாமல் போனாலும் அவனது போராட்டம்என்பது ஓயாது எனபதே உலகம் அறியவேண்டிய உண்மை.

மற்றொரு பதிவில் சந்திப்பேன்

“ஈழமகன்”